Tuesday, February 22, 2011

நடுநிசி நாய்கள்: அதிர்ச்சியில் கெளதம்



நடுநிசி நாய்கள் படம் தொடர்பாக ஆடியன்ஸ்,விமர்சகர்கள் மத்தியில் உலாவரும் கருத்துக்களை,அதிர்ச்சியோடு கவனமாக பதிவு செய்து கொண்ட டைரக்டர் கெளதம் வாசுதேவ் மேனன்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடூரத்தை படத்தில் வைத்ததை 'என்ஜிஒ' க்கள் பாராட்டியுள்ளன. இது வரை தமிழ் படத்தில் சொல்லப்படாத 'சென்சிடிவ் சப்ஜெக்டை' தொட்டுள்ளதாக படம் பார்த்த பெண்கள் கூறியதாக கெளதம் சொல்கிறார்.

'நடுநிசி நாய்கள் ஒரு நவீனகால தமிழ்ப்படம். இந்த திரைப்படத்தின் மூலம் நான் தமிழ் சினிமாவின் அறிவிக்கப்படாத விதிகளை உடைக்க முயற்சி செய்திருக்கிறேன். இது எனக்கும் கூட ஒரு புது வகையான திரைப்படம்தான்.

இருண்ட உண்மைகளும் மனதை பாதிக்கும் விஷயங்களும் கொண்ட படம் என்ற முறையில் இது ஒரு பரிசோதனை. எல்லா வகையிலும் என்னுடைய முந்தைய படங்களிலிருந்து நடுநிசி நாய்கள் வேறுபட்டது.

நான் என்னுடையது என்று அறியப்பட்ட பாணியிலிருந்து விலகி மாற்று பாணிகளை எப்போதும் தேடிக்கொண்டே இருக்கிறேன். புதிய பாணிகளை எனதாக்கி கொள்ள முயன்றுகொண்டே இருக்கிறேன் என்பதன் வெளிப்பாடுதான் இத்திரைப்படம்.

எந்த ஒரு பரிசோதனை முயற்சிக்கும் போற்றுதலும் தூற்றுதலும் இருக்கும் என்பது இன்று தமிழ் சினிமாவில் நான் இருக்கும் இடத்தில் நான் நன்கு அறிந்த்தே. முழு மனஉருதியோடு நான் நடுநிசி நாய்களின் பக்கம் நிற்கிறேன். இந்தவகைப்படங்கள் பார்த்து பழகாதவர்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என கூற முடியாத ஒரு படம்தான் இது.

இது ஒரு அனுபவம், அவ்வளவுதான். இறுதியில் என்னுடைய இயக்குநர் கார்டு வரும் முன்பு, வரும் இறுதிகாட்சி உங்களுக்கு விளக்கும், இத்திரைப்படத்தை எடுக்க நான் ஏன் முடிவு செய்தேன் என்று.

உங்களுடைய ஆதரவு தமிழ் சினிமாவில் ஒரு புதிய பாணியும் பல புதிய தலைமுறை இயக்குநர்களையும் தோற்றுவிக்க வழிவகுக்கும் என நான் நம்புகிறேன் என்கிறவர், வித்தியாசமான வகை படங்களை எடுக்க விரும்புகிறார்.

புது படத்துக்கான ஸ்கிரிப்டை எழுதி வரும் கெளதம், ஜூலை மாதம் படப்பிடிப்பை துவங்க உள்ளார் 'எனக்காக, என்னை நம்பி படம் பார்த்திட்டு, ஏமாற்றமாக 'பீல்' பண்றவங்களிடம் 'சாரி' கேட்டுக்கிறேன்' என்றும் நடுநிசி நாய்கள் பட டைரகடர் உருகினாராம்.

0 கருத்துரைகள்:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes