நட்பின் இலக்கணம் என்னவென்று புரியாமல் குழம்பும் டாஸ்மாக் நண்பர்களின் கதை. |
மதுரை என்றாலே எப்போதும் தண்ணியடித்துக் கொண்டு, அருவாளை தூக்கிக்கொண்டு அலையும் ரவுடிகள், குடிகாரர்களின் வசிப்பிடம் என்று காட்டிக்கொண்டிருக்கும் சினிமாக்களின் வரிசையில் தூங்கா நகரம்....
விமல் 'களவாணி'யில் பார்த்தது போலவே பெரிதாய் ஏதும் முயற்சிக்காமலேயே நடித்திருக்கிறார். இப்படியே போனால் நால்வரில் ஒருவராய் ஆகிவிடும் நாள் தூரத்தில் இல்லை. ஊமையனாக வரும் நிஷாந்துக்கு நல்ல கேரக்டர். நன்றாகவே செய்திருக்கிறார். பரணிக்கும் நல்ல கேரக்டர்தான். குறையொன்றுமில்லை. பிணம் எரியூட்டும் பணியாளராய் வரும் இயக்குநர் கௌரவின் கேரக்டருக்கு ஏன் அவ்வளவு பில்டப் கொடுத்தார்கள். அவன் ஒரு சுயநலவாதி அது இது என்று?. நியாயமாய் பார்த்தால் நிஷாந்தின் மேல் பயணித்த கதையை இவர் மேல் பயணித்திருந்தால் நிச்சயம் க்ளைமாக்ஸை எதிர்பார்த்திருக்க முடியாது. வில்லனாக கமலா தியேட்டர் உரிமையாளர் சிதம்பரம் செட்டியார் நடித்திருக்கிறார். அவரது நீண்ட மூக்கும், அவருக்கு வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளும் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுத்திருக்கிறது. மற்ற வில்லன் ஆட்கள் எல்லாம் வழக்கமான மதுரை பில்டப் தான். ஒரு பாடல் காட்சியில் வேறொருவன் கற்பனையில் அஞ்சலியின் ட்ரெஸ் மாற்றப்பட, அதை அவன் கற்பனையில் அவனை அடித்து, வேறு ட்ரெஸ் மாற்றுவது, பகவான் தான் காப்பாத்தணும் என்று சொன்னதும், பகவான் ஆஸ்பிட்டலில் காட்சி ஓப்பன் ஆவது, கோயில் பட்டாச்சாரியார் சொல்லும் "லோகத்துல 100 கோடி பேர் இருக்கா.. அவாளுக்கெல்லாம் சகாயம் செய்ய கடவுள் வர மாட்டார். மனுஷாதான் வருவார்" என்ற டயலாக்கை சரியான இடத்தில் உபயோகித்திருப்பதும், இரண்டு கிழவிகளை வைத்து காமெடி முயற்சியில் வெற்றிப் பெற்றிருப்பதும், இடைவேளையின் போது சாட்டையடிப் போல சுளீர்ரென்று கிளம்பும் பரபரப்பான திரைக்கதையும் பாராட்டப்பட வேண்டிய விஷயங்களாகும். சுந்தர் சி.பாபு இசையில் 'பூவான பார்வைகள் குறும்பான வார்த்தைகள்' எனத்தொடங்கும் பாட்டு செம ஹிட் அடிக்கப்போகும் மெலோடி. ஆனால் அந்தப்பாட்டுக்கான பிக்சரைஷேசனில் இயக்குநர் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். டான்ஸ் மாஸ்டர் கூட சுமாராகத்தான் அந்த பாட்டுக்கு ஒர்க் பண்ணியிருக்கார். அந்த பாடலில் அஞ்சலி மட்டும் அழகு தேவதையாக வர்றார்.
எழுத்து இயக்கம் கௌரவ். இவர் கே.எஸ்.ரவிகுமாரின் உதவியாளர். முதலிலேயே சொன்னது போல இந்த கதைக்கு மதுரை தேவையேயில்லை. மதுரை செண்டிமெண்ட் ஒர்க்கவுட் ஆகியிருக்கும் என்று தோன்றுகிறது. முதல் பாதி முழுவதும் எதையோ ஓட்ட வேண்டுமென்ற கட்டாயத்தில் ஓட்டுவது போல் உள்ளது. காமெடி கொஞ்சம் கூட ஒட்டவில்லை. திரும்ப திரும்ப, டாஸ்மாக், கோயில் திருவிழா என்று ஜல்லியடித்திருக்கிறார்கள். நடு நடுவே அஞ்சலி மட்டும் முகத்தை காட்டவில்லையென்றால் தூங்கியே போயிருக்க வாய்ப்புண்டு. நடிகர்கள்: விமல், அஞ்சலி, பரணி, நிஷாந்த், கௌரவ், சிதம்பரம் செட்டியார், சிங்கம்புலி இசை: சுந்தர்.சி.பாபு இயக்கம்: கௌரவ் தயாரிப்பு: தயாநிதி அழகிரி |



2:30 AM
Jana Master
0 கருத்துரைகள்:
Post a Comment