Monday, October 31, 2011
தமிழீழம் எனும் அடைய முடியாத இலக்கு நோக்கிய பயணத்தில் சிக்குண்ட கிழக்கு மாகாணம். பகுதி - 3
Sunday, October 30, 2011
தமிழீழம் எனும் அடைய முடியாத இலக்கு நோக்கிய பயணத்தில் சிக்குண்ட கிழக்கு மாகாணம் பகுதி - 2
Friday, October 28, 2011
கடாஃபியைக் கொன்றவர்களும் லிபியாவை வென்றவர்களும்
அ.மார்க்ஸ்
சாக்கடைக் குழாய்க்குள்ளிருந்த பெருச்சாளி ஒன்றை வெளியே இழுத்துப் போட்டு அடித்துக் கொன்றதைப் போல் கர்னல் கடாஃபியை கலகப் படையினர் கொன்று போட்டுள்ளனர். அமெரிக்கத் தலைமையில் இயங்கும் ‘நேடோ’ படைகளின் உதவியோடு இது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு செத்த நாயைப்போல அவர் உடல் இழுத்துச் செல்லப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டதையும், சதாம் உசேன் அல்லது சீசெஸ்கு வீழ்த்தப்பட்டபோது மக்கள் எவ்வாறு “மகிழ்ச்சி அடைந்ததாகக்” காட்டப்பட்டதோ அதேபோல இன்று கடாஃபியின் கொலையையும் மக்கள் கொண்டாடடியதையும் ஊடகங்களில் பார்த்தோம்.
அராபிய வசந்தம் எனச் சொல்லப்படும் சமீபத்திய அரபு மற்றும் வடக்கு ஆப்ரிக்க முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்ட எழுச்சிகளில் லிபிய எழுச்சி சற்று வித்தியாசமானது. 42 ஆண்டுகள் சர்வ அதிகாரங்களுடனும் ஆட்சி புரிந்த இச் சர்வாதிகாரி ஒரு இரத்த விளாறான போரில் கொல்லப்பட்டது என்ற அம்சம் தவிர, இந்த வித்தியாசத்திற்கு வேறு இரு பரிமாணங்கள் உண்டு. துனீசியா ஆகட்டும், எகிப்தாகட்டும் இந்த நாட்டுச் சர்வாதிகாரிகள் தூக்கி எறியப்பட்டதில், அந்நியத் தலையீடு, குறிப்பாக மேற்குலகத் தலையீடு கிடையாது. லிபியாவிலுங்கூட கிளர்ச்சிக்காரர்கள் தொடக்கத்தில் மேற்குலகத் தலையீட்டை எதிர்த்தனர். ஆனால் விரைவில் மேற்குலக நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் பணிய நேரிட்டது. ஐ. நா பாதுகாப்பு அவையின் ஒப்புதலோடு முதலில் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் அமெரிக்கத் தலைமையில் நேட்டோ படைகள் களம் இறங்கின. கடாஃபி கொல்லப்பட்டது கூட நேடோ படைகளின் உதவியோடுதான் நடந்துள்ளது. தனது சொந்த ஊரில் தஞ்சம் புகுந்திருந்த கடாஃபியும் அவரது விசுவாசிகளும் சென்று கொண்டிருந்த ‘கன்வாய்’ நேடோ விமானங்களால் தாக்கப்பட்டுப் படுகாயமுற்று ஒரு சிமென்ட் வடிநீர்க் குழாயில் ஒளிந்திருந்த போதுதான் கிள்ர்ச்சியாளர்களால் அவர்கள் கொல்லப்படுள்ளனர்.
காலங்காலமாகத் தன் கட்டுக்குள் இருந்த அரபு நாடுகள், மக்களின் தன்னெழுச்சியான போரட்டங்களின் ஊடாகக் கைநழுவிப் போனதால் கலக்கமுற்றிருந்த அமெரிக்காவும் இதர மேற்குலக நாடுகளும் இந்தத் தலையீட்டினூடாக மீண்டும் தம் அதிகாரத்தை நிறுவியுள்ளன. சர்வாதிகாரங்களுக்கு எதிரான மக்களின் ஜனநாயக வேட்கையையும், தன்னெழுச்சியையும் அவை திருடிக்கொண்டன. இவ்வகையில் இன்று லிபியாவை மட்டும் தேர்வு செய்து தலையிட்ட வகையில் அரபுலக எழுச்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியிலும் அவை வெற்றி பெற்றுள்ளன.
மற்ற அரபுலக எழுச்சிகளிலிருந்து லிபியா வேறுபட்ட இன்னொரு புள்ளியும் உண்டு. இங்கு மட்டுந்தான் ஒரு குறிப்பிட்ட அளவு சர்வாதிகாரிக்கு விசுவாசமான மக்களும் களத்தில் இறங்கி போராட்டக்காரர்களுடன் மோதினர். மேற்கத்திய இராணுவ உதவி இருந்தும் கூட கடாஃபியை வீழ்த்துவதற்கு இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டதற்கு இதுவே காரணம். முஸ்லிம் நாடுகளின் பிரச்சினைகள் எல்லாம் ஒரே மாதிரியானவை அல்ல. ஒரு நாட்டில் ஷியா, சன்னி என்கிற வேறுபாடு ஒரு முக்கிய பங்கு வகிக்கலாம். இன்னொரு முஸ்லிம் நாட்டில் வேறு வகையான முரண் மேலுக்கு வரலாம். லிபியாவைப் பொருத்தமட்டில் குலமரபு விசுவாசம் ஒரு முக்கிய பங்கு வகித்தது.
கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சி லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பெங்காஸியிலிருந்தே கிளம்பியது. பெங்காஸியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த மன்னர் இத்ரிசின் ஆட்சியைக் கவிழ்த்தே அதிகாரத்தைக் கைப்பற்றினார் அன்று இருபத்தியேழே வயதாகியிருந்த கர்னல் கடாஃபி. கடாஃபி மேற்கேயுள்ள சிர்டே பகுதியைச் சேர்ந்த கதாத்ஃபா என்கிற பழங்குடியைச் சேர்ந்தவர். இந்தப் பழங்குடியைச் சேர்ந்தவர்களுக்கே பெரிய அளவில் அதிகாரங்களையும், பதவிகளையும் கொடுத்துத் தன்னை சுற்றி கவசம் அமைத்திருந்தார் கடாஃபி. இவர்கள்தான் கடைசிவரைக்கும் அவருக்கு விசுவாசமக இருந்து அவரைக் காக்க முனைந்தவர்கள்.
முற்றிலும் ஜனநாயகமற்ற கொடுங்கோல் ஆட்சியை நடத்திய கடாஃபி இதற்கெதிரான எல்லா எதிர்ப்புகளையும் மிகக் கொடுமையாய் ஒடுக்கினார். எதிர்த்தவர்கள் கொல்லப்பட்டார்கள். சிறையிலடைக்கப் பட்டார்கள். 1996ம் ஆண்டு அபு சலீம் சிறையிலிருந்த 1200 கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட செய்தி அவர்களின் குடும்பத்திற்கும் தெரிவிக்கப் படாததால் பல ஆண்டு காலம் நெருங்கிய உறவினர்கள் மதந்தோறும் சிறைக்கு வந்து பார்க்க முடியாமல் ஏமார்ந்து திரும்பிய சோகக் கதையை புலம் பெயர்ந்து வாழ்கிற லிபிய எழுத்தாளர் முஹம்மத் மெஸ்ராதி குறிப்பிடுகிறார்.
இன்னொரு பக்கம் லிபியாவில் குவிந்துள்ள மாபெரும் எண்ணை வளம் குறித்த உணர்வையும் பெருமிதத்தையும் மக்கள் மத்தியில் உருவாக்கிய கடாஃபி அதை பிற முஸ்லிம் அரசுகளைப்போல் மேற்கு நாடுகள் கையகப்படுத்திக் கொள்ள அனுமதிக்கவில்லை. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுடன் அவரது உறவு 2002 வரை கடும் மோதல் தன்மையுடனேயே இருந்தது. எண்ணை வளத்தால் வந்த வருமானத்தைக் கொண்டு லிபியாவில் கல்வி, மருத்துவம் மற்றும் அகக்கட்டுமானங்கள் பெரிய அளவில் வளர்க்கப்பட்டன. வெளிநாடுகளில் முதலீடுகள் செய்யப்பட்டன. பெரிய அளவு அந்நியச் செலாவணியாகக் கையிருப்பில் வைக்கப்பட்டதன் விளைவாக, மேற்குலக நாடுகள் லிபியாவின் மீது விதித்த பொருளாதாரத் தடைகள் பயனற்றுப்போயின. தவிரவும் லிபியாவிலிருந்து குழாய்கள் வழியாகப் பாய்கிற எண்ணையை ஒருசில நாட்கள் நிறுத்தி வைத்தால் மேற்குலகப் பொருளாதாரமே ஆட்டங்கண்டு விடும் என்கிற நிலையையும் கடாஃபி ஏற்படுத்தினார்.
இதன் விளைவாகவே 80களில் அமெரிக்கப் படைகளை பெர்லினில் தாக்கியபோதும், ‘பான் அம்’ விமானத்தை லாகெர்பீயில் வீழ்த்தி 270 பேர்களைக் கடாஃபி கொன்றபோதும் ரொனால்ட் ரீகனால் “வெறி நாய்” என்று திட்டவும், அவர் வீட்டின் மீது விமானத்திலிருந்து குண்டுகள் வீசவுந்தான் முடிந்ததே ஒழிய பெரிய அளவு தாக்குதல் எதையும் செய்ய இயலவில்லை. 1989க்குப் பின் மாறியுள்ள உலகச் சூழலை கடாஃபி மட்டுமின்றி மேற்குலகத் தலைவர்களும் புரிந்து கொண்டதால் பரஸ்பரம் நெருக்கமாயினர். அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் அணுகுண்டு செய்யக்கூடிய லிபிய நாட்டுச் சாத்தியங்களை கடாஃபி அழித்துக் கொண்டார். ஒசாமா பின் லேடனை ஒழித்துக் கட்டுவதிலும் லிபியா ஒத்துழைக்க இசைவளித்தது.
எல்லாச் சர்வாதிகாரிகளையும் போலவே கடாஃபியும் குடும்ப ஆட்சியையும், ஏராளமான சொத்துக் குவிப்பையும் ஏற்படுத்திக் கொண்டார். அவரது அரசியல் வாரிசாக முன்நிறுத்தப்பட்டவரும், “கடைசிக் குண்டு இருக்கும் வரை கிளர்ச்சியாளர்களச் சுடுவேன்” என்று இரண்டு மாதங்களுக்கு முன் சூளுரைத்தவருமான கடாஃபியின் மகன் சைஃப் அல் இஸ்லாம் இன்று புதிய ஆட்சியாளர்களால் தேடப்படுகிறார். இரண்டாண்டுகளுக்கு முன் லண்டனில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்த இவருக்கு தந்தை கடாஃபி மெற்கு லண்டனில் ஒரு வீடு வாங்கிக் கொடுத்தார். அதன் விலை 10 மில்லியன் பவுண்ட். சாகும்போது கடாஃபியின் கையிலிருந்தது ஒரு தங்கத் துப்பாக்கி எனச் சொல்லப்படுகிறது. கடாஃபியுடன் சுட்டுக் கொல்லப்பட இன்னொரு மகன் முடாஸிம் லிபியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர். நேடோ குண்டு வீச்சில் சென்ற ஏப்ரல் 30 அன்று தனது மூன்று பிள்ளைகளுடன் கொல்லப்பட்ட இன்னொரு மகனின் பெயர் சைஃப் அல் அராப். மற்ற பிள்ளைகள் இன்று தப்பி ஓடியுள்ளனர்.
அமெரிக்காவும் நேட்டோவும் ஐ. நா பாதுகாப்பு அவையும் லிபியாவின் மீதான இந்தத் தாக்குதலை “மனிதாபிமானத் தலையீடு” என்கிறார்கள். அதாவது கடாஃபியின் படைகளால் மக்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்கான தலையீடாம். இதே நேரத்தில் சிரியாவிலும் யேமனிலும் பதவி விலக மறுக்கும் சர்வாதிகாரிகள் அஸ்ஸாத்தும் சாலிஹும் கிளர்ச்சியாளர்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாண்டுகளுக்கு முன்பு முள்ளிவாய்க்காலில் ராஜபக்சேயின் படைகள் தமிழர்களைக் கொன்றன. இதிலெல்லாம் மனிதாபிமானத் தலையீட்டைச் செய்வதற்கு இவர்களுக்கு மனம் இருக்கவில்லை.
இவர்களால் கொல்லப்பட்ட சர்வாதிகாரிகள் அது சதாம் உசேனாக இருக்கட்டும் அல்லது கர்னல் கடாஃபியாக இருக்கட்டும் அவர்களுக்கு ஆதரவாக நின்று, உள் நாட்டு எதிர்ப்புகள் குறித்த உளவுத் தகவல்களை எல்லாம் தந்து உதவியவர்கள்தான் அமெரிக்காவும் இதர மேற்கு ஐரோப்பிய நாடுகளும். யாருக்கு எதிராக நேற்று உளவுத் தகவல்களை எல்லாம் தந்து உதவினார்களோ இன்று அவர்களுக்கு ஆதரவாக நின்று முன்பு உதவியவர்களைக் கொல்லுகிறார்கள். அவர்களது அகராதியில் எதிரியும் நண்பர்களும் மாறிக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் அரசியல் தேவைகளுக்கு ஏற்ப எல்லாம் மாறும்.
கடாஃபிக்குப் பிறகு லிபியாவில் உருவாகப் போகும் ஆட்சி எப்படி இருக்கும்? நிச்சயமாக அது ஈராக்கிலும் ஆஃப்கானிலும் உருவாக்கப்பட்டுள்ள பொம்மை அரசுகளாகத்தான் இருக்கும். அதன் அரசியலை மட்டுமல்ல எண்ணை வளத்தின் பயன்பாட்டையும் தீர்மானிக்கப் போவது ஒபாமாவும், சர்கோசியும், கேமரூனாகவுந்தான் இருக்கப்போகிறார்கள்.
கடாஃபியைக் கொன்றது லிபியக் கிளர்ச்சியாளர்களாக இருக்கலாம். ஆனால் வென்றதென்னவோ அமெரிக்கர்களும் மேற்கு ஐரோபியர்களும்தான்.
Thursday, October 13, 2011
முஸ்லிம் காங்கிரஸின் முதலமைச்சர் கனவு…
வுNயு பெற்ற வாக்குகள் 126,398 இது 23.65% மாகும். இன்றைய நிலையில் நடைபெறவுள்ள மாகாண சபைத்தேர்தலில் இவ்வாக்கு எண்ணிக்கையிலும் வீழ்ச்சிக்கான வாய்ப்புகளே அதிகமுள்ளன.
Monday, October 3, 2011
நடைபெற உள்ள வட மாகாணசபைக்கான தேர்தலும் எதிர்நோக்க இருக்கும் சவால்களும்
தமிழ்த்தேசியக்கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தர் முதலமைச்சராக தனது கட்சியை சேர்ந்த வேறொருவர் தெரிவு செய்யப்பட்டால் தனது நிலைமை என்னவாக இருக்கும் என்பதை நன்கு அறிவார். நிச்சயமானக தனக்கு கீழ் பணியாற்றுகின்ற மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோர் தனது பதவியை விட உயர்ந்த பதவியான முதலமைச்சர் பதவிக்கு வருவதை அவர் விரும்பப்போவதில்லை. எனவே தனக்கு மிகவும் விசுவாசமான தனது பணிப்புரையின் கீழ் செயற்படக்கூடிய பல்கலைகழக முன்னால் பேராசிரியர் ஒருவரும், கட்சியில் தேர்தலில் போட்டியிடாமல் பதவியை அநுபவிக்கின்ற ஒருவரும் அவரின் சிந்தனையில் இருக்கலாம். ஆனால் கட்சி தலைவரின் இம்முடிவை மாவை சேனாதிராஜா, சுரேஸ்பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கல நாதன் போன்றோர் ஏற்பார்கள் என்றால் அது கடினம் தான். எனவே வட மாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எனும் குட்டை குழம்பப்போகின்றது. இக்குட்டைக்குள் அரசாங்கம் மீன் பிடிக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.Sunday, October 2, 2011
அண்ணன் சீமான் அவர்களுக்கு…..! அன்பான வேண்டுகோள்.
ளை வழங்குவதன் நோக்கமாகவே இக்கடிதம் அமைகின்றதென்பதை முதற்கண் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
திரைப்பட இயக்குனரான நீங்கள் ஈழத் தமிழர்களதும், உலகத்தமிழர்களதும் பற்றாளனாகவும், பாதுகவலனாகவும் உலாவி வருகின்றீர்கள். அதுமட்டுமா! பிரபாகரனின் ‘வாரிசாகவும’ தந்தை பெரியாரின் பேரனாகவும் கூட உங்களை அடையாளப்படுத்தி வருகின்றீர்கள். தென்இந்தியத் தமிழர்களையும், குறிப்பாக அங்குள்ள தலித் தமிழர்களையும் அவர்களது துன்பம் துயரங்களை பொருட்படுத்தாது, நீங்கள் ஈழத் தமிழர்களதும்,உலகத் தமிழர்களதும் விடுதலைக்காக போராடுவதை வாழ்நாள்‘பணியாகவும், ம்…….ஒரு தொழிலாகவும்’ செய்து வருவதை கண்டு நான் மெய்சிலிர்த்துப்போனேன். தமிழ்ஈழத்தை அமைப்பதன் ஊடாக உலகத்தமிழரையே விடுவிக்கும் பிரபாகரனின் அபிலாசைகளை நிறைவேற்றிக் காட்டுகின்றேன் பார்… என நீங்கள் உரத்துக் கதறும் ஓசை தேனாக பாய்ந்து உறைகின்றது எனது காதில்.
அனைத்துச் சிங்களவர்களையும் அழித்தொழிப்பதிலும் நீங்கள் மிக ஆவலாக உள்ளதோடு, சர்வதேசம் இராஜபக்சவை தூக்கில்போடவேண்டும் என்பதற்காகவும் போராடிவருகின்றீர்கள். அதே நேரம் ‘மரணதண்டனைக்கு’ எதிராகவும் நீங்கள் போராடிவருகின்றீர்கள். மனித உரிமை குறித்த உங்களது நிலைப்பாடு மிக அலாதியானது, அற்புதமானது.
அதேவேளையில் இந்திய மத்திய அரசுக் கொள்கையிலும் காங்கிரசை அழிப்பதற்காகவும், ஒழிப்பதற்காகவும் பாடுபட்டு வருகின்றீர்கள். அதேநேரம் முஸ்லிம் மக்களின் படுகொலைகளுக்கு காரணமான குஜராத் முதல்வர் மோடியை போற்றுகிறீர்கள் பாராட்டுகிறீர்கள். அப்படியானபல் காங்கிரசைவிட பாராதீய ஜனதாக்கட்சி புனிதமானதா? தலித் மக்களுக்கு அபயமளிக்குமா? பெரியாரின் பேரன் என்கிறீர்களே இது நியாயமா? மத்தியில் அமையும் அரசுகளால் தமிழர்களுக்கு விடிவுவராது என்கிறீர்கள்! அப்படியாயின் உங்கள் தலைமையில் தனித் தமிழ் நாடு கேட்டுப் போராடலாம் தானே?
இன்று ஜெயலலிதா அம்மையாருக்கு விழா எடுத்துவரும் நீங்கள் தனித் தமிழ்நாட்டை முன்மொழிந்தால் ஜெயலலிதா அம்மையார் அதற்கு வழிமொழிவார்தானே! என்ன தயக்கம்!
சீமான் அண்ணா நீங்கள் இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்ஈழம் பெற்றுக் கொடுப்பதிலேயே ஊன் உறக்கம் இன்றி பாடுபட்டு உழைத்து வருவகின்றீர்கள். தமிழ் நாட்டுத் தமிழர்களில் ஒருபகுதியான தலித்மக்களுக்கு நிகளும் கொடுமைகள் ஏன் உங்கள் காதுக்கெட்டவில்லை? திருநெல்வேலியில் உள்ளுராட்சி தலைவர் கிருஸ்ணவேணி ஒரு தலித் என்பதாலும்,பெண்என்பதாலுமே உயர் சாதியினரால் மிக மோசமானமுறையில் தாக்கப்பட்டார். தற்போது பரமக்குடியில் ஆறு தலித்துக்கள் மிககொடூரமான வகையில் கொல்லப்பட்டுள்ளனர். தலித்துக்கள் தமிழ்ஈழத்திற்காக கொல்லப்பட்டால் (தீக்குளிப்பு) அதை வைத்து நீங்கள் தமிழ்ஈழ வியாபாரம் நடத்துகின்றீர்கள். தலித்துக்கள் தமது உரிமைக்காக போராடும்போது கொல்லப்பட்டால் அச்செய்திகள் உங்கள் காதுகளுக்கு எட்டுவதில்லையே ஏன்? உங்களுக்கு இருப்பது தமிழ்ஈழப்பற்றா உயர்சாதி அபிமானமா? தேவர் சாதியினரால் தலித் மக்கள் தொடர்ச்சியாக ஒடுக்குதலுக்குள்ளாகி வரும்போதுதானே சீமான் அண்ணா நீங்கள் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலையிட்டு மரியாதைசெய்து வருகின்றீர்கள்.
முதலில உங்கட ‘நாம் தமிழர் கட்சியின்’ கொள்கை, கோட்பாடுகளை வெளியிடுங்கோ அதுக்க எங்க பெரியார் இருக்கிறார் என்பதை நான் கொஞ்சம் பார்க்க வேணும்.
சீமான் அண்ணா நீங்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவராகவும், தமிழ்நாடடிலே வாழ்ந்துகொண்டும் எமது இனம், எமது போராட்டம், எமது மக்கள் என்றெல்லாம் ஈழத் தமிழர்கள் குறித்தே பேசிவருகின்றீர்கள். உங்கள் பேச்சில் வெறும் உணர்ச்சி மட்டுமே வெளிப்படுகின்றது. இது மிகவும் ஆபத்தானது. 1970 களில் இலங்கையில் ஈழத் தமிழர் தலைமைகள் பேசிய பேச்சுக்களும் உணர்ச்சியூட்டல்களிலும் முளைத்தவர்தான் பிரபாகரன். அவரது வழிகாட்டலின் விளைவு பல லட்சமக்களின் அழிவிற்கும் காரணமானது.ஒரு திரைப்படத்தின் சாதனையில் கூட்டம் சேர்ப்பதைவிட உணர்ச்சியூட்டி கூட்டம் சேர்ப்பது இலகுவானதென்பதை எமது மக்களின் அழிவுகளிலிருந்து நீஙகள்; கற்றுக் கொண்டீர்கள்.
சீமான் அண்ணா தமிழ் நாட்டிலும் தமிழர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் பல்வேறு விடுதலை தேவையாகவும்,அவசியமாகவும் உள்ளதே அது ஏன் உங்கள் கண்ணுக்கும், மனதிற்கும், உணர்விற்கும் எட்டுதில்லை.நான் அண்மையில் தமிழ் நாடு சென்று வந்ததால் அங்கு தமிழ்நாட்டுத் தமிழ் பேசும் மக்களின் துயரங்களும் துன்பங்களும் வீதிதோறும் பரவிக்கிடப்பதை காணக் கூடியதாக இருந்தது. தமிழ் நாட்டில் பல்லாயிரம பிரச்சனைகள் குவிந்து கிடக்கின்றது.அதை முதலில் கவனியுங்கள் அவற்றை தீர்க்க முயற்சி செய்யுங்கள் சென்னையை சுற்றி வந்தால் ஒவ்வொரு மனிதனின் வியர்வையிலிருந்து கசிவது கூவம் நதியின் நாற்றமாக இருக்கின்றது. தமழ்ஈழக்கொடி உயர்த்திக் கோசம் போடும் உங்கள் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மூலமாக ஒரு வாரத்தில் கூவம் நதியை சுத்தம் செய்து விடலாம். அப்படிச்செய்தீர்களானால் சிலைகளைத்தேடி நீங்கள் மாலை போடத் தேவையில்லை. உங்களுக்கே தமிழ் நாட்டு மக்கள் சிலை வைப்பார்கள். காலம் பூராவும் உங்கள் பெயர் நிலைக்குமல்லவா? சென்னையில் ஒவ்வொரு தெருவையும் கடக்கும்போது ஒவ்வொரு இராணுவ முகாம்களை கடப்பது போன்ற உணர்வே எனக்கிருந்தது. வீடு வசதியற்ற தமிழ்நாட்டுத் தமிழ் மக்கள் வீதியிலும், தெருவோரங்களிலும் குடும்பம் நடத்துகின்றார்கள். இவ்வாறு தமிழ் நாட்டுத் தமிழ் பேசும் மக்களின் துன்பங்கள் குவிந்து கிடக்கின்றது. தமிழ் பேசும் தலித்மக்களுக்கான அரசியல் உரிமைகள் பெறவேண்டிய தேவைகளும் மிக அவசியமாக படவில்லையா பெரியாரின் பேரனான உங்களுக்கு? உங்கள் இளைஞர் படைகளைக் கொண்டு இவைகளை நிவர்த்திசெய்ய முயற்சியுங்கள்.
இலங்கை மக்கள் இரத்தம் சிந்தி சிதைந்து, அழிந்தது போதும். அவர்கள் அமைதியாக வாழ விரும்புகின்றார்கள். அவர்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தயவசெய்து நடந்து கொள்ளாதீர்கள்.
இலங்கையில் தமிழ் ஈழம் கேட்டவர்களே இன்று புலம் பெயர்ந்த நாடுகளில் அதிகமாக வாழ்ந்து வருகின்றார்கள். அதில் கணிசமானவர்கள் புலிகளின் பொருளாதார பினாமிகள்.அவர்களுக்குத்தான் இலங்கையில் தொடர்ந்து அமைதியின்மையும் யுத்தமும் தேவைப்படுகின்றது. அவர்களின் ஊதுகுழல்தான் நீங்கள் என்பது நான் உட்பட எல்லோரும் அறிந்த உண்மை. ஊதுகுழலான உங்களுக்கு யுத்தத்தில் சிக்குண்ட ஏழை,எளிய மக்களின் துயரம் புரியாது.
நீங்கள் உண்மையான மனித இனப்பற்றுள்ளவர் என்றால் உங்கள் நாட்டுக்குள்ளேயே விடுதலை தேவைப்படும் மக்களுக்காக குரல் கொடுங்கள். காஸ்மீர் மக்களுக்காக போராடுங்கள். தெலுங்கான மக்களுக்காக போராடுங்கள், ஆண்டாண்டு காலமாக ஒடுக்குமுறைக்குள்ளாகி வரும் தலித் மக்களுக்காக போராடுங்கள் இந்திய விரிவாக்க கொள்கைக்கு எதிராக போராடுங்கள். இமையம் தொட்டு ஈழம் வரை இந்து நாடு அமைப்போம் என கோசமிடும் பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிராக போராடுங்கள்.
தயவு செய்து இனவாதம் பேசுவதை நிறுத்துங்கள். இனவாதம் பேசிப்பேசி அப்பாவிகளை தீக்குளிக்கவைச்சு அதில் நீங்கள் தொடர்ந்து குளிர்காய வேண்டாம், உங்களுடைய தொடர்ச்சியான இனவாதக்கருத்தியலால் தமிழ்நாட்டிலும் ஒரு ‘சிவசேனையை’ உருவாக்கும் சூழலை ஏற்படுத்திவிடாதீகள் எனவும் மிக அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.
இப்படிக்கு
உங்கள் உண்மையான மனித நேயத்தை மிக ஆவலுடன் எதிர்பார்க்கும்…
தேவதாசன்



10:18 PM
Jana Master
