| வெளிநாடுகளில் சென்று வாழ்பவர்கள். (தமிழர்கள்) இத்தகைய யதார்த்தத்தை இனங்கண்டு ஒரு ஏற்பாட்டுக்கு முன்வரல் வேண்டும். அவர்களில் சிலர் தாம் வாழும் நாடுகளில் பல்நாட்டு தமிழீழ அரசாங்கம் ஒன்றை அமைக்க உலகளாவிய தேர்தல்களை நடத்திவருகின்றனர். அதன் மூலம் அவர்கள் தெரியப்படும் பதவிகளுக்கு அவர்கள் வாழும் இடங்களிலேயே ஒரு அந்தஸ்தினை வழங்குவதாக இருக்கும்.ஆனால் இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அவ்வாறான நடவடிக்கைகளினால் எதுவித நன்மையும் உதவியும் கிடைக்கப்போவதில்லை அரசினால் யாப்பிற்கு கொண்டுவரப்பட்ட பதினெட்டாவது திருத்தம் ஒரு திரும்புகட்ட சம்பவமாகும். அரசாங்கம் பாராளுமன்றத்தில் வசதியான முறையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையினை சுவீகரித்துக் கொண்டுள்ளது.எதிரணியிலிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பக்கம் நோக்கிப் பயணிக்கும் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றது. இதனால் அரசாங்கம் தான் ஸ்திரத்தன்மையுடனும் பலத்துடனும் இருப்பதாக நம்பிக்கை கொண்டிருக்கப் போதிய காரணங்கள் காணப்படுகின்றன. அதற்கு இதுவரை இலங்கையில் இருந்த அரசாங்கங்களில் மாத்திரமன்றி இனிமேலும் கூட இப்போதைய அரசாங்கத்தினைப் போன்று பலமிக்கதான அரசாங்கம் வரப்போவதில்லை. இப்போது செயல்நோக்கமுடைய வினைதிட்டமுடைய ஒரு எதிரணியும் இல்லை.அரசாங்கத்துடன் முரண்படாதுஇ அதனுடன் இணைந்து செயல்படாதவர்கள் எல்லோரையும் ஒதுக்கிப் புறக்கணிக்கவும் படலாம் என்பது இன்னுமோர் நிலைவரம். அரசாங்கத்தின் அங்கத்தவர்கள்இ இன்னும்கூட சில யாப்பு சீர்திருத்தங்கள் ஒழுங்குமுறையில் வரவிருப்பதாகக் கூறிவருகின்றனர்.எதிர்காலத்தில் வரக்கூடிய யாப்பு சீர்திருத்தங்களில் தேர்தல் முறைகளில் இப்போதிருக்கும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையினை மாற்றிஒரு கலப்பு முறையில் அதாவது விகிதாசார பிரதிநிதித்துவ முறையினையும் முன்னர் போன்ற சாதாரண பெரும்பான்மை முறையினையும் இணைத்து கலப்பான ஒரு முறை அறிமுகப்படுத்தப்படலாம். இன்னுமோர் சீர்திருத்தம் முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அதிகார பரவலாக்கத்தினை ஏற்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தம் தொடர்பானதாக இருக்கலாம். 13ஆவது திருத்தச்சட்டத்தின் சில சரத்துகள் அது கொண்டுவரப்பட்ட 1987 ஆம் ஆண்டு முதலாகவே முரண்பாடுகளைக் கொண்டதாக காணப்பட்டது. மாகாணசபை முறையானது அதற்கு எதிரான இரண்டு கருத்துகள் காரணமாக விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்தது. மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பரவலாக்கம் செய்வது இனரீதியான சமூகங்களுக்கிடையே அதிகார பரவலாக்கத்தினை உறுதி செய்வதற்கான வழிமுறை என ஒரு சிலர் நம்புகின்றனர். வடமாகாணத்திலும்இகிழக்குமாகாணத்திலும் தமிழ்இ முஸ்லிம் வாக்காளர்களே பெரும்பான்மையினராக உள்ளனர். அந்த மாகாணசபைகளுக்கு அதிகார பரவலாக்கம் செய்வதால் அவ்வாறாக பரவலாக்கத்திற்குள்ளான அதிகாரங்களை அப்பிரதேசத்து சிறுபான்மை இன மக்களால் தமது மாகாணங்களுக்குள் பயன்படுத்தமுடியும்.ஆனால் மாகாணசபை முறையினை ஆதரிப்பவர்கள்இ அம்மாகாணங்களுக்குப் போதிய வளங்கள் வழங்கப்படவில்லை எனவும் அதனால் மாகாணசபைகளுக்கு தரப்பட்ட சட்டங்களின் முக்கிய பகுதிகளை அமுலாக்கம் செய்ய முடியாதிருப்பதாகவும்இ அதிருப்தி தெரிவிக்கின்றனர். இது இவ்வாறிருக்க வேறு சிலர் மாகாண சபைமுறைக்குக் கூடிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும்இ அது தேசியத்துக்கு எதிராக பயன்படுத்தப்படலாம் எனவும் விமர்சிப்பவராக இருக்கிறார்கள்.இவ்வாறு விமர்சிப்பவர்கள் நிலம் மற்றும் பொலிஸ் தொடர்பான அதிகாரங்களை மாகாணசபைகள் பிரிவினை வாதத்தினை ஊக்குவிக்கப்பயன்படுத்தலாம் என விமர்சிப்பர்.மாகாணசபைகளுக்கு இந்த அதிகாரங்கள் இல்லாதிருந்த போதே தமிழ் தீவிரவாத இயக்கங்கள் பெரும் பலமிக்கனவாக இருந்தன. இவ்வதிகாரங்களும் நிலம்இபொலிஸ் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்தால் தீவிரவாத குழுக்கள் எந்தளவுக்கு பலம்மிக்க சக்திகளாக உருவாகியிருக்க முடியும் எனவும் விவாதிக்க முடியும். இத்தகைய அச்சம் காரணமாகவே தொடர்ந்துவந்த அரசாங்கங்கள் மாகாணசபைகளுக்குப் பொலிஸ்இநிலம் தொடர்பான அதிகாரங்களை வழங்க மறுத்து வந்துள்ளன. அரசாங்கம் இப்போது யாப்பில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையினைப் பெற்றுள்ளது. அடுத்து மாகாணசபைகளுக்கு 13 ஆவது திருத்தச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நிலம்இ பொலிஸ் தொடர்பான அதிகாரங்களையும் விரைந்து செயற்பட்டு அகற்ற முயலலாம். அரசாங்கம் இப்போது 18 ஆவது திருத்தத்தை செய்துள்ளதால் மேலும் திருத்தங்களைச் செய்ய ஊக்கப்படுத்தப்பட்டிருக்கும். அத்துடன்இ 13 ஆவது திருத்தம் மக்களிடையேயும் முரண்பாடானதாக காணப்பட்டதால் அதில் திருத்தம் கொண்டுவருவது இன்னும் இலகுவாக இருக்கும் என நம்பலாம். அத்தகைய மாற்றங்கள் எதுவித வெளித் தோற்றத்தினையும் காட்டப் போவதில்லை. ஆனால்இ 17 ஆவது திருத்தத்தை மாற்றி கொண்டுவரப்பட்ட 18 ஆவது திருத்தம் நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த முறையினை மீண்டும் கொண்டு வருவதாக மட்டுமே இருக்கும். அதேநேரத்தில் அரசாங்கம் இனரீதியான பிரிவினைவாதம் பொறுத்ததான தனது அக்கறை தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதனை எந்தளவுக்கு திறமையாக கட்டுப்படுத்தி வைக்கலாம் என்றும் மருபுறத்தில் சிறுபான்மை இனத்தவர்களிடம் அவர்களுடைய ஆர்வங்கள் பொறுத்து தான் எவ்வாறு அவற்றை அவர்களுக்கு வழங்கப்போவதாகச் செயற்படலாம் என்பது பொறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிவரும். அண்மைக்கால வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் பிரிவினைவாத யுத்தத்தின் மூலம் தனித்தமிழ் நாடு பெறுவதற்காக போராடியமையினை கவனத்திற்கொண்டு பார்க்கும்போது அரசாங்கம் மாகாணங்கள் மட்டத்திலான பெரிய அலகிற்கு அதிகாரங்களை பரவலாக்கம் செய்வது நியாயப்படுத்தக் கூடியதாக இருக்கலாம். ஆனால்இ மறுபுறத்தில் சிறுபான்மை இனத்தவரை சமத்துவமான நிலையிலும் சமமான பிரஜைகளாக நடாத்த அக்கறை கொண்டிருக்குமானால் அப்போது அரசாங்கமானது சிறுபான்மை இன மக்களது அபிலாசைகளை கவனத்திற் கொண்டு அவற்றை அரசியல் ரீதியாக அவர்கள் வாழும் பகுதியில் வலிமையடையச் செய்யும் வகையில் செயற்படுவதே வேண்டப்படுவதாகும். இந்தவகையில் பார்க்கும் போது அரசாங்கம் உள்ளூர் ஆட்சி முறையினை வலிமைப்படுத்துவதனை முன்னிறுத்தி பார்க்கலாம். நடைமுறையில் இப்போது சிறந்த ஜனநாயக முறையில் செயற்படும் மேற்கு நாடுகள்இ ஐப்பான் ஆகிய நாடுகளில் உள்ளூர் ஆட்சிக்கு கூடிய அதிகாரங்கள் உள்ளன. அவை தமது பாடசாலைகள்இ உள்ளூர் பொலிஸ் ஆகியவற்றை நிர்வகித்துக் கொள்கின்றன. உள்ளூராட்சி அரசாங்கங்கள் ஒப்பளவில் சிறியளவினதாகக் காணப்படுவதால் அவற்றை பலப்படுத்துவதன் விளைவாக அவை பிரிவினைவாதத்திற்கு கொண்டு செல்லலாம் என அஞ்சுவதற்கு இடமில்லை. ஆனால்இ இது நம்பிக்கையினையும் இ அபிமானத்தையும் கட்டியெழுப்பும் செய்முறையின் ஒரு அங்கமாக அமைய முடியும். இம்முறை வெற்றியளிக்குமானால் மேலும் பரந்தளவினதான அதிகார பரவலாக்கம் பற்றி அடுத்து வரும் காலங்களில் சிந்தித்துப் பார்க்க முடியும். மாகாண சபை மட்டத்தில் சுயாட்சியினையும் தமிழ் ஈழ சுதந்திரத்தையும் அபிலாசைகளாகக் கொண்டிருந்தவர்களுக்கு வலிமையூட்டப்பட்டதும் மீள செயல்திறனை கூட்டி வழங்கப்பட்டதுமான உள்ளூராட்சி அதிகாரசபை திருப்தியினைத் தரப்போவதில்லை. இருந்தபோதிலும் இன்றைய யதார்த்தங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இப்போது நாட்டில் பதவியில் இருப்பது தனது எதிரணியாளர்கள் அனைவரையும் வென்று அடக்கி விட்டு இருக்கும் யுத்தத்தின் பின்னரான அரசாங்கமாகும். ஜனாதிபதி பதவியானது 18 ஆவது திருத்தத்தின் காரணமாக மேலும் கூடிய அதிகாரங்களை மையப்படுத்திக் கொண்டுள்ளது. அதிகார பங்கீட்டை ஆளுங்கட்சியிடமோ அல்லது எதிரணி கட்சிகளிடமோ பகிர்ந்து கொள்வது பற்றிய காரியம் அல்ல இது. இதனைவிட கூடியளவானவற்றை சிறுபான்மை இனத்தவர்கள் எதிர்பார்ப்பதென்பது யதார்த்தமாக இருக்காது. வெளிநாடுகளில் சென்று வாழ்பவர்களது பங்கு குறிப்பாக வெளிநாடுகளில் சென்று வாழ்பவர்கள். (தமிழர்கள்) இத்தகைய யதார்த்தத்தை இனங்கண்டு ஒரு ஏற்பாட்டுக்கு முன்வரல் வேண்டும். அவர்களில் சிலர் தாம் வாழும் நாடுகளில் பல்நாட்டு தமிழீழ அரசாங்கம் ஒன்றை அமைக்க உலகளாவிய தேர்தல்களை நடத்திவருகின்றனர். அதன் மூலம் அவர்கள் தெரியப்படும் பதவிகளுக்கு அவர்கள் வாழும் இடங்களிலேயே ஒரு அந்தஸ்தினை வழங்குவதாக இருக்கும்.ஆனால் இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அவ்வாறான நடவடிக்கைகளினால் எதுவித நன்மையும் உதவியும் கிடைக்கப்போவதில்லை. மறுபுரத்தில் இலங்கையில் மீண்டும் தமிழ் பிரிவினவாதம் தோன்றப்போவதாக இலங்கை அரசாங்கத்தினால் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி இங்கே நிலமையை இன்னும் மோசமாக்கலாம். இதனால் அரசாங்கம் அதிகார பரவலாக்கத்திற்கு எதிராக மேலும் கடுமையான நிலைப்பாட்டினை மேற்கொள்ள வழிகாட்டலாம். அண்மையில் கனடாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் வெளிநாடு சென்று வாழும் தமிழர்கள் சிலரை சந்திக்கக் கூடியதாயிருந்தது. இவர்கள் தமது பார்வையில் ஒரளவு மிதமான நிலையில் உள்ளவர்கள். இலங்கையிலிருந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ்இசிங்கள இளைஞர்களிடையே ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. அவர்கள் இலங்கையில் சமாதானத்திற்கான இனம் கனடியர்களிடையேயான பேச்சு வார்த்தை அமைப்பை சாந்தவர்கள்.அவர்கள் ஒருவருடன் ஒருவர் கலந்துரையாடி புதிய இலங்கையின் தோற்றத்திற்கு தாம் சார்பானவகையில் பங்களிக்க விரும்பும் தூர நோக்கம் கொண்டவர்கள்.இன்னொரு சந்தர்ப்பத்தில் பழைய பரம்பரையினர் தாம் வெளிநாடுகளில் வாழ்வதனால் எதிர்நோக்கும் கஷ்டங்களையும் குடும்பத்தொடர்புகளை இழந்தமை பற்றியும் கருத்துத் தெரிவித்தனர்.இருந்த போதிலும் அவர்கள் இலங்கையில் வாழும்மக்கள் தமது வாழ்வை புனரமைத்துக்கொள்ள உதவி செய்வது பொறுத்து ஈடுபாடு கொண்டவர்களாகவே காணப்பட்டனர்.இவ்வாறான வெளிநாடுகளில் வாழும் இடம்பெயர்ந்து சென்றவர்களையும் அரசாங்கம் நல்லெண்ணத்துடனும் நம்பிக்கையுடனும் பார்த்து செயற்படவேண்டும். யுத்தம் முடிந்ததன் பின்னர் ஏற்பட்ட விசாரணைகள் குறிப்பிடத்தக்க ஒன்று அரசாங்கம் இராணுவத்திற்கான செலவினங்களை அதிகரித்துள்ளதோடு படைகளுக்கு மேலும் பல புதியவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ள மையாகும்.பெரும்பாலான நாடுகள் யுத்தம் முடிவுற்றதும் பொருளாதாரஇமனித வளங்கள் பொதுமக்கள் நலனுக்காக ஒதுக்கீடு செய்யக் கிடைத்த ஒரு வாய்ப்பாகக் கருதி செயற்படுகின்றன.ஆனால் இலங்கையிலோ இராணுவத்திற்கான செலவினங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதற்கு "பலமான இராணுவம் நாட்டின் அனைத்துபகுதிகளிலும் காணப்படுதல் தேசிய பாதுகாப்பினை உறுதி செய்வதாக இருக்கும்மூ27 என அரசாங்கம் நம்புவதே காரணமாக இருக்கக் கூடும்.இருந்தபோதிலும் இலங்கை உட்பட்ட சனநாயக நாடுகளின் அனுபவங்களின் படி நீண்டகாலத்தில் பலவந்தமான நிர்வாகத்தில் தங்கியிருப்பதால் மக்களிடையே எதிர்ப்பும் வன்மம்கொள்ளவும் தோன்றுவது தவிர்க்க முடியாது போகலாம் என்பதனையே அறியமுடிகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளை யுத்தத்தில் வெற்றி கொண்ட அரசாங்கம் தமிழ் மக்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலமே நாட்டின் மீது அவர்களை விசுவாசமானவர்களாகவும் ஐக்கியமான இலங்கை மீது ஈடுபாடுள்ளவர்களாகவும் ஆக்க முடியும்.அதற்கு அவர்கள் சமத்துவமிக்க பிரஜைகள் என்றும் அதே போன்று நாட்டிற்கு உரித்தானவர்கள் என்ற மனப்பான்மை உருவாகும் வகையிலும் அரசாங்கம் அவர்களை நம்பவைக்கும்படி செயற்பட வேண்டும்.அரசாங்கம் இப்போது கொண்டுள்ள பலம் காரணமாக அச்சமின்றி நம்பிக்கையுடன் செயற்படுவதற்கான சிறந்த வாய்ப்பினைப் பெற்றுள்ளது.உண்மையாக நம்பிக்கையுடையவர்களாலேயே மற்றவர்களை நம்பவும் முடியும்.அதுவே மனித சமுதாயத்தினையும் செயற்படவைக்கக் கூடியது.நம்பிக்கை இல்லாத பட்சத்தில் குடும்பங்களோ அல்லது நாடுகளோ கூட ஒன்றாக இருக்க முடியாது.யுத்தகாலத்தில் நாட்டில் நம்பிக்கை முறிந்து போயிருந்தது .நம்பிக்கை பற்றாக்குறைப் பிரச்சினை அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்குமிடையே தான் பெருமளவில் ஏற்பட்டிருந்தது.இப்போது யுத்தம் முடிவுற்றுள்ளதால் அச்சம் குறையுவும் நம்பிக்கையினை மீளப்பெறுவதற்குமான தனித்தன்மை கொண்ட வாய்ப்பொன்று தோன்றியுள்ளது.இதற்காக அனைத்து நடவடிக்கைகளுக்கும் வழிகாட்டும் ஒரு புதிய அணுகுமுறை தேவைப்படுகின்றது. - Thinakural - |



2:24 AM
Jana Master
0 கருத்துரைகள்:
Post a Comment