Monday, September 17, 2012

'தேசிய அரசு': எங்கே, எதற்கு, எப்போது?

கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கு பின்னர் தோன்றியுள்ள 'தொங்கு சபை' பிரச்சினைக்கு

 முடிவு காண, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அங்கு 'தேசிய அரசு' ஒன்று அமையும் சூழ்நிலை

 அமைந்தால் அதில் பங்கு பெறுவது குறித்து ஆலோசனை செய்யும் என்று கட்சி

 தலைவர் சம்பந்தன் அறிவித்திருப்பது கொள்கை ரீதியாக வரவேற்கப்பட வேண்டிய விடயம்.

 அதே சமயம், இது குறித்து கூட்டமைப்போ, பிற கட்சிகளோ தீவிரமாக சிந்தித்துள்ளார்களா?

 அல்லது இதனை தங்களது அடுத்தகட்ட அரசியல் விளையாட்டில் ஒரு பகடைக்காயாக 

மட்டுமே பயன்படுத்த விரும்புகிறார்களா என்பது குறித்து தற்போதைக்காகிலும் தெளிவு இல்லை.



கிழக்கு மாகாணசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி பத்து நாட்களுக்கு மேலாகியும் அங்கு
 அரசு அமைவது குறித்து எந்தவிதமான சமிக்ஞைகள் கூட தெரியவில்லை. அதே சமயம்,
 அங்கு அரசு அமைப்பதில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கிய பங்குவகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 அதுபோன்ற தனது முடிவை எடுப்பதில் அந்த கட்சி பல்வேறான எதிர்பார்ப்புகளுக்கும், அந்த
 எதிர்பார்ப்புகளை பொய்க்காத வண்ணமான வாய்ப்புகளுக்கும், அவற்றிற்கு அப்பாற்சென்று
 அரசியல் அழுத்தங்களுக்கும் பதில் சொல்ல வேண்டிவரும் என்பதும் தெரிந்தே இருந்தது. 



தேர்தலுக்கு பிந்திய காலகட்டத்தில் எழும் கேள்விகளுக்கு பதில் காணும் வழியாக முஸ்லிம்
 காங்கிரஸ் கட்சி தலைமை தன்னை முன்னமே கூட தயார்படுத்திக் கொண்டிருக்கும்
 என்றும் கருதலாம். என்றாலும், எதிர்பார்ப்பு என்பது வேறு, அதனை நேரடியாக சந்திக்கும்
 நிலைமை வேறு. இந்த குழப்பங்களின் ஒரு பகுதியாகவே 'தேசிய அரசு' அமைக்கும்
 வாய்ப்பு குறித்து ஹேஷ்யங்களும், கேள்விகளும் தோன்றியுள்ளன என்பதே உண்மை.
 அவற்றிற்கெல்லாமான பதிலும் கூட முஸ்லிம் காங்கிரஸின் முடிவில் தான் தொங்கியுள்ளது.
 இது குறித்த எண்ணம் கூட அந்த கட்சியை பொறுத்தவரையில் தற்போது தான் 
சுமக்கும் அரசியல் அழுத்தங்களில் ஒன்றாகி போய்விட்டது என்பதும் உண்மை.



இன்றைய இலங்கை அரசியல் சூழலில் கிழக்கு மாகாணத்தில் 'தேசிய அரசு' என்ற எண்ணம்
 வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. நாடு மற்றும் அதன் மக்கள் குறித்து சிந்திக்காமலே
 கருத்துக் கூற வேண்டுமென்றால், இதனை வேலைக்கு ஆகாத விடயம் என்று உடனடியாகவே 
உதாசீனப்படுத்தி விடலாம். என்றாலும், அரசில் பங்குபெறும் வாயப்புள்ள கட்சிகள் அனைத்துமே
 சிந்தித்து செயல்பட வேண்டிய விடயமும் கூட. குறிப்பாக ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து
 அரசியல் செய்ய வேண்டிய சூழ்நிலைகள் தோன்றும். நிர்பந்தங்கள் உருவாகும். ஆவற்றை கட்சி 
தலைமைகள் ஆராய்ந்து, அமைதியுடன் வழி நடத்தினால் அத்தகைய பிரச்சினைகள்
 ஒன்றும் தீர்க்க முடியாதவை அல்ல.



இலங்கையில் 'தேசிய அரசு' என்ற பேச்சு எழுவது இதுவே முதல் தடவை அல்ல. அவை 
எவையும் நடைமுறை படுத்தப்படவில்லை என்பது மட்டுமல்ல, அந்தந்த சமயங்களில் அத்தகைய 
கருத்துக்கள் காணப்படாமல் ஆக்கப்பட்டன. அதே சமயம் மாகாண அளவில் இவ்வாறான
 கருத்து எழுவது இதுவே முதல் முறையாகும். இந்த கருத்து வெற்றி பெற்றால், அதுவே கூட 
தேசிய அளவில் அனைத்துக் கட்சி ஆட்சி அமைவதற்காக சாத்தியங்கள் தோன்றலாம். 



இதில் குறிப்பாக, மாகாணத்தில் என்றாலும் சரி, மத்தியில் என்றாலும் சரி, கூட்டமைப்பு 
அரசில் பங்குபெறுவது என்பது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
 அதிலும் குறிப்பாக, அரசில் செயல்படுவது குறித்து, அமைச்சரவையில் பங்குபெறும் பிற கட்சி 
தலைவர்களிடம் இருந்தும் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பாலபாடம் படித்துக் கொள்ளலாம்.
 கடந்த பல தசாப்தங்களாக அரசு நடத்துவது எப்படி என்று அறிந்து கொள்ளாமலே அரசியல்
 செய்து வந்துள்ளனர். இது பிற்காலத்தில், வடக்கு மாகாண அரசியல் மற்றும் அரசிலும்,
 பிறிதொரு காலத்தில் தேசிய அளவிலும் அவர்களுக்கும் அவர்களை சார்ந்திருக்கும்
 மக்களுக்கும் பயனுள்ளதாகவே அமையும்.



கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழலில், 'தேசிய அரசு' அமைப்பது குறித்து
 தன்னிடம் மத்திய அரசு தலைவர்கள் சிலர் பேசியுள்ளதாக சம்மந்தன் கூறியுள்ளார். இது குறித்து
 அரசு சார்ப்பில் பேசுவதற்கு அவர்கள் யாருக்குமே அதிகாரம் இல்லை என்ற வகையில் கருத்து
 தெரிவித்துள்ள அவர், 'தேசிய அரசு' குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னுடன்
 உரையாடினால் மட்டுமே அது குறித்து கூட்டமைப்பு சிந்தித்து செயல்பட முடியும் என்றும் சுறியுள்ளார்.



கூட்டமைப்பின் இந்த நிலைப்பாடு எதிர்பார்க்கப்பட வேண்டிய ஒன்றே. கடந்த மாதங்களில்
 இனப்பிரச்சினை குறித்த இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் அரசு தரப்பு சரியான
 முறையில் தங்களது நிலைமையை முன்னெடுத்து வைக்கவில்லை என்பது
 கூட்டமைப்பின் வாதம். இதுபோன்றே, கூட்டமைப்பு குறித்தும் அரசு தரப்பு குறை கூறியிருந்தது.
 இதில் இரு தரப்பினருமே, அடுத்தவர் தங்களை அவர்களது அரசியல் சுயலாபத்திற்காக மட்டுமே 
பயன்படுத்தி வந்துள்ளனர் என்ற வகையிலும் கருத்து கூறினார்கள். வகையில், 'தேசிய அரசு' குறித்து
 ஒரு சாரார் வெளியிடும் கருத்துக்கள் தங்களை அரசியல் ரீதியான பொறியில் சிக்க வைக்கும் 
முயற்சி மட்டுமே என்று அடுத்தவர் கருதினால், அது குறித்து மாற்றுக் கருத்து இருக்க முடியாது.



அதேசமயம், குறிப்பிட்ட 'தேசிய அரசு' கிழக்கு மாகாணத்தில் மட்டும் தானா, அல்லது 
அதே சமயம் மத்திய அரசிலும் அந்த முறை செயல்படுத்தப்படுமா என்பது குறித்து 
எந்தவித கருத்தும் தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால், 'தேசிய அரசு' என்ற கரு 
எந்தவிதத்தில் கிழக்கு மாகாணத்தில் கூட உருவாகும் என்பது குறித்து எந்த விளக்கமும்
 இதுவரை கேட்கப்படவும் இல்லை, கொடுக்கப்படவும் இல்லை. 



குறிப்பாக, இந்த 'தேசிய அரசில்' முஸ்லிம் காங்கிரஸ் சேர்க்கப்பட வேண்டும் என்று 
அரசு தரப்போ அல்லது கூட்டமைப்போ எதிர்பார்க்கிறதா என்று தெரியவில்லை. அல்லது,
 'தேசிய அரசு' என்ற பதத்தையே இரு தரப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் தங்களது 
வழிக்கு கொண்டு வருவதற்காக பயன்படுத்தும் கருவியா என்று தெரியவில்லை. அதாவது,
 அரசு தரப்பும் கூட்டமைப்பும் தனித்தனியாக, தங்களுடன் மட்டும் முஸ்லிம்
 காங்கிரஸ் கூட்டணி அமைக்கவில்லை என்றால், அந்த கட்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு 
தாங்கள் இருவரும் கிழக்கில் கூட்டாட்சி அமைத்து விடுவோம் என்று அதனை 
மிரட்டுவதாகவும் இதனை கொள்ளலாம்.



இதில், உண்மை எதுவாக இருந்தாலும் அது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் தவறான முடிவை 
எட்டிவிடக் கூடாது என்பதில் கூட்டமைப்பு குறிப்பாக தெளிவாக இருக்க வேண்டும். காரணம், 
கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகளை ஒட்டி தொடர்ந்து கருத்து கூறி வரும் கூட்டமைப்பு
 தலைவர்கள், தங்களுடன் அந்த கட்சி அரசு அமைப்பதற்கு அணி சேர்வதே அவர்கள் 
தங்களது மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒரே வழி என்ற வகையில் பேசி வருகிறார்கள். 



அந்த வகையில், முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு நியாயம், கூட்டமைப்பிற்கு ஒரு நியாயம்
 என்ற வகையில் அவர்களும் செயல்பட கூடாது. அது, முஸ்லிம் மக்களை தமிழ் சமுதாயம்
 மீண்டும் ஒருமுறை ஏமாற்றி விட்டதாகவே கருதப்படும். இது இரு சமுதாயத்தினருக்கும் 
நல்லதல்ல. மாறாக, அரசியல் காரணங்களுக்காக மட்டுமே, கூட்டமைப்பு 'தேசிய அரசு' 
என்ற போர்வையில் மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர (ஐமசு) கூட்டணியுடன் 
கிழக்கு மாகாணத்தில் அரசு அமைக்க விழைந்தால் அவ்வாறே செய்வதில் தவறு ஒன்றும்
 இல்லை. அதற்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸை அவர்கள் விளையாட்டுப் பொருளாகவும்
 ஆக்கிவிடக் கூடாது.



இவ்வாறெல்லாம் கூறுவதால் மட்டுமே, பிற கட்சிகளின் பங்களிப்புடன் அல்லது தாங்கள் இரு 
கட்சிகள் மட்டுமே பங்கு பெறும் விதத்தில் ஐமசு கூட்டணியும் தமிழ் கூட்டமைப்பும் கிழக்கு 
மாகாணத்தில் அரசு அமைத்து விடும் என்று கருத முடியாது. இன்னும் சொல்லப் போனால்,
 இரு தரப்பினருமே தங்களுக்குள்ளேயும், முஸ்லிம் காங்கிரஸுடனும் சேர்ந்து, 'புலி, ஆடு, 
புல் கட்டு' என்ற விதத்திலேயே அரசியல் விiளாட்டு விளையாடி வருகிறது. அதிலும் குறிப்பாக,
அரசு மற்றும் கூட்டமைப்பு தரப்பினரிடையே 'அதிகார பகிர்வு' போன்ற அடிப்படை பிரச்சினைகளில்
 அடுத்தகட்ட நடைமுறை குறித்து ஒருமித்த கருத்து ஏற்படாமல் இரு தரப்பினரும் 
கிழக்கிலோ, பின்னர் வடக்கிலோ அரசில் சேர்ந்து செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்க 
முடியாது. அது வரவேற்க தக்க விடயமும் இல்லை.



தற்போதைக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகள், இரு தரப்பு 
பேச்சுவார்த்தை மற்றும் நாடாளுமன்ற சிறப்பு குழு என்ற இரண்டிற்கும் இடையே 
ஊசலாடிக் கொண்டு இருக்கிறது. அதற்கப்பால் சென்று, வடக்கு - கிழக்கு இணைப்பு, பொலிஸ்
 மற்றும் நிலம், நிதி, நிர்வாகம் ஆகியவற்றில் அதிகார பகிர்வு போன்ற தலைப்புகளின் கீழ் முடிவுகள்
 எடுக்கப்பட வேண்டிய நிiமையிலேயே கடந்த தசாப்தங்களை போலவே இப்போதும் 
தொங்கு நிலையிலேயே தொடர்கிறது. மேலும், இப்போது கிழக்கில் 'தேசிய அரசு' என்று
 கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டால், அதுபோன்றே பிற்காலத்தில் வடக்கு மாகாணத்திலும்
 அந்த முறையை ஏற்றுக்கொள்ள அந்த கட்சி தயாராக இருக்க வேண்டும்.



அதே சமயம், தங்களது அணியில் இருந்து கிழக்கு மாகாண சபையின் ஐந்து உறுப்பினர்களுக்கு
 அரசு தரப்பு வலைவிரித்து உள்ளது என்றும் கூட்டமைப்பு வெளிப்படையாகவே அறிவித்துள்ளது.
 இது குறித்த கூட்டமைப்பு தலைமையின் கவலையும் அவர்களை 'தேசிய அரசு'
 குறித்து சிந்திக்க வைத்திருக்கலாம். ஆனால், கட்சியின் அரசியல் கவலை மட்டுமே 'தேசிய அரசு' 
அமைவதற்கு அடித்தளம் அமைத்து விடமுடியாது. மிஞ்சிமிஞ்சி போனால், அது ஒரு தொடக்கம் 
மட்டுமாகவே இருக்க முடியும்.



'தேசிய அரசு' என்ற பேச்சு எழுந்தவுடனேயே, அதில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு 
எதுவாக இருக்க முடியம் என்ற கேள்வியும் உடன் எழுகிறது. அதனை ஒட்டி, அவ்வாறான ஒரு
 'தேசிய அரசில்' பங்கு வகிக்க அந்த கட்சிக்கு அழைப்பு விடப்படுமா என்பன போன்ற கேள்விகளும் 
உடன் எழுவது தவிர்க்க முடியாதது. அதுபோன்றே அவ்வாறு அழைப்பு விடப்பட்டால், அது குறித்த
 கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதும் யூகத்திற்கே விடப்பட வேண்டிய கட்டத்திலேயே
 உள்ளது. என்றாலும், அவ்வாறு கிழக்கு மாகாணத்தில் அரசு அமையும் பட்சத்தில், தமிழ் மற்றும்
 முஸ்லிம் இனத்தவர் தலா இரண்டு ஆண்டுகளும், சிங்களவர் ஓர் ஆண்டும் முதலமைச்சர்
 பதவி வகிக்கும் வகையில் முடிவு எட்டப்பட வேண்டும் என்ற அந்த கட்சியின் நிலை கருத்தில்
 கொள்ளப்பட வேண்டும். 



இடைப்பட்ட காலத்தில், சிங்கள கட்சிகளுடன் 'தேசிய அரசு' அமைப்பது குறித்து சரியான முறையில் 
அழைப்பு வந்தால் அதனை கூட்டமைப்பு ஆராயும் என்று அறிவித்ததன் மூலம், கட்சி தலைவர்
 சம்பந்தன் தமிழ் மக்கள் சரியான பாதையில் வழி நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை 
அடிக்கோடிட்டு காட்டியுள்ளார். அவரது 'மட்டக்களப்பு பேருரை' ஏற்படுத்திய சலசலப்பு அடங்கி,
 கூட்டமைப்பு இலங்கை தேசியத்திற்கும் சிங்கள அரசியல் தலைமைகளுக்கும் எதிரானதல்ல
 என்ற எண்ணம் உருவாக கட்சியின் தற்போதைய நிலைப்பாடு வழி ஏற்படுத்தியுள்ளது. 


இதனால் மட்டுமே கிழக்கு மாகாணத்தில் 'தேசிய அரசு' உருவாகிறதோ இல்லையோ, இலங்கை 
தேசியத்திற்கும் சிங்கள அரசியல் கட்சிகளுக்கும் கூட்டமைப்பும், அது சார்ந்திருக்கும் தமிழ் 
சமூகமும் எதிரி அல்ல என்ற கருத்து மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுவே, எல்லா
 வகைகளிலும் அனைவருக்கும் கிடைத்த முதல் வெற்றி எனலாம்!

ன்றி - tamilmirror.lk

Tuesday, September 11, 2012

புலி பயங்கரவாதிகளின் கோர முகம்!


எச்சரிக்கை - இப்பதிவு சிறுவர்கள் மற்றும் இளகிய மனமுடையோர் படிக்க உகந்தது அல்ல! 

வணக்கம் மக்களே!
உலகில் படுகேவலமான பயங்கரவாதிகளான, இலங்கை விடுதலை புலிகளின் கோர முகத்தின் ஒரு பகுதியினைத் தரிசிக்க உங்களை அழைக்கிறேன் எனக்கு நிச்சயமாகத் தெரியும், இந்தப் படங்களைப் பார்க்கும் தைரியமும், சக்தியும் உங்களுக்கு இல்லை என்பது!

இந்தப் படங்களைப் பார்க்கும் தைரியம் கொண்டவர்கள், பதிவுலகில் உட்டாலக்கடி ஈல டமிழன் களும் அவர்களது அல்லக்கைகளும் ஆவர்! அவர்கள்தான் இப்படியான காட்டுமிராண்டித்தனமான கொலைகள் சரியென்றும், இவற்றைச் செய்விக்கும் புலிகளின் ராச்சியம் இலங்கை முழுக்க பரவ வேண்டும் என்றும் கனவு காண்பவர்கள்!

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும், இன்ன பிற இடங்களிலும், புலி பயங்கரவாதத்தை நிலைநிறுத்த, புலிகள் மேற்கொண்ட தற்கொலை தாக்குதல், துப்பாக்கிச்சூடு மிலேச்சத்தனத்தின் ஒரு பகுதியைப் பார்க்கலாம்!

இங்கே இரத்த வெள்ளத்தில், பிணங்களாகக் கிடக்கும் இந்த அப்பாவிகள், குழந்தைகள், பெண்கள் செய்த குற்றம் என்னவென்றால், இவர்கள் அனைவரும் புலி காட்டுமிராண்டிகளின் உபயோகமற்ற கோரிக்கையை ஏற்று தனிநாடு கொடுக்கவில்லையாம்! அதுதான்!






















































Thanks - http://funnyworld-star.blogspot.com/2012/09/blog-post_11.html

Friday, February 10, 2012

சாதி இந்து எதைச் செய்தாலும் அது புனிதமானதுதானா?;காந்தியம்: மலத்தில் பொறுக்கிய அரிசி



6022012
பேராசிரியர் அரச. முருகுபாண்டியன்

-பேராசிரியர் அரசமுருகுபாண்டியன்
 தோழர்வேமதிமாறன் எழுதிய காந்தி நண்பராதுரோகியா என்கிற நூல்அங்குசம் வெளியீடாக வந்துள்ளதுநேற்றுதான் (21.01.2012) அந்நூல்கிடைக்கப் பெற்று வாசித்து முடித்தேன்எழுத்தாளர் மதிமாறன் ஏற்கனவேஎழுதிய நூல்களையும் அவைகள் ஏற்படுத்திய அதிர்வுகளையும் நான்அறிவேன்.
குறிப்பாக பார்ப்பன பாரதியை அவர் ஆதாரப்பூர்மாக அம்பலப்படத்திருந்தபாரதி  ஜனதா பார்ட்டி என்கிற நூலில் அவர் பாரதி மீது வைத்தவிமர்சனங்களுக்கு பாரதி ஆய்வாளர்கள் பாரதிபக்தர்கள் பாரதிதாசர்கள்ஒருவர்கூட மறுப்பேதும் சொல்லவில்லை.
இந்த கள்ள மவுனத்திற்குப் பின்னால்ஒளிந்துகொண்டிருப்பது அப்பட்டமானபிழைப்புவாதம்சாதி வெறியர்களும் மதவெறியர்களும் ஏகாதிபத்தியதாசர்களும் ஒளிந்து கொள்ளும் இடமாக பாரதி இன்றும் இருந்து வருகிறான்.அவனை தாங்கிப் பிடிக்கும் பிழைப்புவாத கம்யுனிஸ்டுகளுக்கும் இதுபொருந்தும்.
தமிழ் அறிவுலகம் என்பது சூனியங்களால் நிரம்பிக்கிடப்பதை நேர்மையாகசிந்திக்கிற யாரும் உணர முடியும்மகாகவியை தோலுரித்த மதிமாறன்இப்போது மகாத்மா வைத் தோலுரித்திருக்கிறார்.
இந்துத்துவம்சாதியம்முதலாளியம்எப்படி மீண்டும் மீண்டும் புத்துயிர்பெறுகிறதோ அதைப் போலவே காந்தியும் புதுப்பிக்கபடுகிறார்மார்க்சீயம்,அம்பேத்கரியம்பெரியாரியம் பேசி ஆளும் வர்க்கத்தைஆதிக்க சாதிகளைபகைத்துக் கொள்வதைவிடகாந்தியம் பேசி பொது நீரோடத்தில் தன்னைஇணைத்துக் கொள்ளவே பெரும்பாலான பிழைப்புவாத அறிவுத் துறையினர்முயற்சிக்கின்றனர்காந்தியம் சர்வரோக நிவாரணியாகமுன்னிறுத்தப்படுகிறது.
காந்தியை அவர் வாழுகிறபோதே அம்பலப்படுத்தியவர்கள் அண்ணல்அம்பேத்கரும் தந்தை .வெ.ராவும்தான்அவர் மகாத்துமா இல்லைஎன்பதுமட்டுமல்ல அவர் மனிதரே இல்லை ஒரு மனநோயாளி எனறு நிறுவினர்இருவரும்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வஞ்சம் இழைத்த காந்தியைராம்சே மெக்னால்டுமுட்டாள் மனிதாபிமானமற்றவர் என்றே எழுதினார். ( பார்க்க  இரட்டைவாக்குரிமை தொடர்பான காந்தி-ராம்சே மெக்னால்டு கடிதங்கள்)
சாதியை சாகுவம்வரை நியாயப்டுத்தியகேடுகெட்ட இந்துமதத்தைராமனைதன் உயிர் எனப் போற்றிபகத்சிங்நேதாஜி..சி போன்ற புரட்சியாளர்களைவெறுத்தசமூகப் பொருளாதார அறிவற்றமனம்போன போக்கில்உளறிக்கொட்டுவதும் அதற்கு உள்ளொளி என்று நியாயம்கற்பித்துக்கொண்டதும்ஆங்கிலேயருக்கு வாலாட்டிக் கொண்டே விடுதலைமுழக்கமிட்ட ஒரு கோமாளி காந்தி.
சாதியால் மனநோய் பிடித்திருக்கும் ஒரு சமூகம் காந்தியைக் கொண்டாடாமல்என்ன செய்யும்காந்தி போதையால் தள்ளாடுகிற சமூகத்தின் பிடறி மயிரைப்பிடித்திழுதது சுய நினைவுக்கு கொண்டு வருகிற முயற்சிகள் தொடர்ந்துநடந்துகொண்டிருக்கிறது.
அந்த முயற்சியின் விளைவாக முன்பே வெளியான மூன்று நூல்களில் ஒன்றுகாந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு  மக்கள் கலை இலக்கியக்கழகத்தின் வெளியீடுஇரண்டாவது பகத்சிங்கும் இந்திய அரசியலும் என்று சுப.வீரபாண்டியனின் நூல்மூன்றாவது காந்தியின் தீண்டாமை என்னும்மருத்துவர்ஜெயராமன் (புதுக்கோட்டைஎழுதிய நூல்.
அந்த வரிசையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததும் சமூக ஆர்வலர்கள்அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல் மதிமாறன் எழுதிய காந்தி நண்பரா?துரோகிய என்கிற நூல்.
காந்தி எங்களுக்கு (தீண்டப்படாதோருக்குநல்ல நண்பரும் இல்லைநாணயமான எதிரியும் இல்லை என்றார் அறிவர் அம்பேத்கர்இங்கேமதிமாறன் நண்பரா எதரியா என்று கேட்கவில்லைநண்பராதுரோகியா என்றேகேட்கிறார்.
காந்தி தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் துரோகம் இழைக்கவில்லை..சிபோன்றவர்களுக்கும் கூட துரோகமிழைத்திருக்கிறார் என்பதையும் மதிமாறன்ஆதாரத்தோடு நிரூபிக்கிறார்எனவே காந்தியை எதிரி என்று சொல்வதைவிடவும் துரோகி என்பதே பொருந்தும்.
நூலின் முதற் பகுதி காந்திய ஆதரவு அறிவாளிகளிடம் ஜாக்கிரதையாகஇருங்கள் என்று தொடங்குகிறார்பெரியாரியமும் அம்பேத்கரியமும் எவ்வாறுகாந்தியத்திற்கு நேர் எதிரரானது என்பதை பல் ஆதாரங்களோடும்அனுபவங்களோடும் எடுத்துவைக்கிறார்.
பெரியாரும் அம்பேத்கரும் சமூகமாற்றத்தின் குறியீடுகள்காந்தியோபழமைவாதத்தை பாதுகாக்கும் சனாதனவாதிஎப்படி மூவருக்கும்ஆதரவாளராக இருப்பதுமார்க்சீயம் நட்பு முரண்  பகைமுரண் என்று பேசும்.காந்தி பகை முரண் என்பதை மார்க்சீயம் படித்த மேதாவிகள் உணராமல்போனது எப்படிசுய ஆதாயமாஅல்லது சாதிய மோகமாகஅல்லதுபுணூலுக்குள் அடைக்கலம் தேடும் அவலமாகாந்தியை ஆதரிப்பதென்பதுராமராஜ்ஜியம் என்கிற வருணாசிரம ராஜ்ஜியத்தில்தான் போய்ச் சேரும்.இதற்குத்தான் ஆசைப்பட்டார்களா அறிவுஜீவிகள்?
தென்னாப்பிரிக்காவில் மாரிஷ்ட்பர்க் ரயில் நிலையத்தில் காந்திக்கு ஏற்பட்டஅவமரியாதை நிறவெறியால் ஏற்பட்டதாகத்தான் இதுநாள்வரை காந்தியபக்தர்கள் பேசிவந்துள்ளார்கள்அதை காந்தியின் சத்திய சோதனை என்றநூலிலிருந்தே ஆதாரம் காட்டி காந்தி டிக்கட் எடுக்காமல் பயணம்மேற்கொண்டதால்தான் அந்த அவமானம் நேரிட்டது என்றுஅம்பலப்படுத்துகிறார் மதிமாறன்.
பயணச்சீட்டு கூட வாங்காமல் பயணம் செய்த காந்தியை நேர்மையின்வடிவமாக முன்றுத்தினால் இந்தியர்களின் சிந்தனைப் போக்கை என்னவென்றுசொல்வதுஇதையே தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர் ஒருவர் செய்திருந்தால்இந்த சமூகம் அவரை எப்படியெல்லாம் அவமானப்படத்தியிருக்கும்ஒரு சாதிஇந்து எதைச் செய்தாலும் அது புனிதமானதுதானா?
அடுத்த இயல் காந்தி படுகொலையும் அப்பாவி அகிம்சா மூர்த்திகளும் என்றதலைப்பில் இந்துத்துவத்தின் காந்தியத்தின் சமூக விரோதக் கருத்துக்களைவிரிவாகப் பேசிச் செல்கிறார்சாதியைப் பாதுகாக்கவே பெரிய புராணம்உருவாக்கப்பட்டது எனறும் பிறசாதி மக்களைப்போல் தலித்துக்கள்இறைவனை வழிபட நினைக்கக்கூடாது என்கிற கருத்தையும் கொண்டுதான்நந்தனார் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் நிறுவுகிறார்.
காந்தியின் மதச்சார்பின்மை (?) க்கு மதிமாறன் தரும் விளக்கம் அருமை.இஸ்லாமியர்களை விரோதிகளாக சித்தரிக்கிற பார்ப்பனிய இந்து பயங்கரவாதிகளை எதிர்த்து செயல்படுவதல்ல காந்தியின் நோக்கம். அவரின் தன்முனைப்பு அரசியலின் விளைவாவக அவரை அறியாமல் முளைத்த முற்போக்குக் கிளை அது இந்த வரிகளில் மதிமாறனின் தேர்ந்த தெளிந்த சிந்தனைகள் தெரிப்புக்களாக விழுகின்றன.
தொடர்ந்து, கோவணம் கட்டிய காந்தியும் கோட் சூட் போட்ட  அம்பேத்கரும் என்ற தலைப்பில் பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை எழுதுகிறார். தலைப்பே அங்கதமாக ஒலிக்கிறது. காந்தி தாழ்த்தப்பட்ட மக்களை அரிஜன் என்று அழைத்தது எதற்கென்று கேட்டால் மதிமாறன் வரிகளிலேயே சொல்கிறேன்,
‘தொடர்ந்துஏழைகளைப் போல் உடை உடுத்திய காந்திஅவர்களைப்போல் குடிசையில் வாழவில்லைமார்வாடி வீட்டு மாடிபிர்லாவோடமாளிகை இன்றைக்கு பணக்காரர்கள் வார விடுமுறை நாட்களில் ஓய்வுஎடுக்கிற ரிசாட்கள் பாணியில் அமைந்த அன்றைய குடில்கள்இதுபோன்று முதலாளிகள் நிழலில்தான் ஓய்வெடுத்தார்.
என்று காந்தியின் எளிமை வேடத்தை தோலுலிக்கிறார் மதிமாறன்.
கோட் சூட் போட்ட டாக்டர் அம்பேத்கர்தான் கோவணம் கட்டிய ஏழைகளின்பிரச்சினையைத் தீர்க்க முயற்சிசெய்தார்அண்ணல் அம்பேத்கரின் உடைஆதிக்கத்திற்கு எதிரான குறியீடு என்றால்காந்தியின் உடை அடிமைத்தனத்தைநிலை நிறுத்துதவதற்கான குறியீடு என்று காந்தியின் கபடத்தனத்தை போட்டுஉடைக்கிறார் மதிமாறன்.
அடுத்த இயல் .உசியின் தியாகமும் காங்கிரசின் துரோகமும் என்றதலைப்பில் ..சிக்கு காந்தியால் இழைக்கப்ட்ட துரோகத்தைப்பதிவுசெய்கிறார்..சியின் தியாகம் நாம் அறிந்ததுதான்ஒரு விடுதலைப்போராட்ட வீரராகஒரு தொழிற் சங்கத் தலைவராக அவர் அடைந்தஇன்னல்கள் ஏராளம்.
ஆங்கிலேயேரோடு சமசரம் செய்துகொள்ளாத அவரது வீரம் என்றும்பின்பற்றததக்கதுபல்வேறு போரட்டங்களில் ஈடுபட்ட ..சிக்கு கொடியதண்டனை கிடைத்ததுதண்டனை முடிந்து சிறையிலிருந்து வறிய நிலையில்திரும்பிய ..சியின் குடும்ப வறுமையைப் போக்க தென்னாப்பரிக்கதமிழர்கள் ரூ.5000 ம் நிதியை திரட்டி அதை ..சியிடம் ஒப்படைக்குபடிகாந்தியிடம் கொடுத்திருக்கிறார்கள்.
..சி கடிதம் மூலமும் நேரிலும் பலமுறை கேட்டும் உத்தமர்அகிம்சாமூர்த்தி மகாத்துமாக அநதப் பணத்தை ..சியிடம் தரவே இல்லை.இதுதான் தேசப்பிதாவின் வண்டவாளம் என்று காந்தியின் திருட்டைதண்டவாளத்தில் ஏற்றுகிறார் மதிமாறன்.
..சி சிறையிலிருந்தபோது அவரிடம் நிலவிய சாதி மனோபாவத்தை அவரதுகுறிப்புகளே உணர்த்துகின்றன பின்னாளில் பெரியாரின் தாக்கத்தினால் ..சிபார்ப்பன-சாதி-எதிர்ப்பாளராக மாறினார் என்றும் மதிமாறன் குறிப்பிடுகிறார்.
அடுத்த கேள்வி பதிலாக வாஞ்சிநாதன்தேசப்பற்றால் மூடப்பட்ட ஜாதிவெறிஎன்கிற தலைப்பில் ஆஷ் மீது வாஞ்சிநாதன் கொண்ட வெறுப்பு சுதந்திரதாகத்தால் ஏற்பட்டதல்ல வருணாசிரம மோகத்தால் ஏற்பட்டது என்கிறார்.அதை வாஞ்சிநாதனின் கடிதமே மெய்பிக்கிறதுஇருந்தும் கூட இடதுசாரிஎழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் (தொ.மு.சிரகுநாதன் தொடங்கிபேராசிரியர் சிவசுப்பிரமணியம் வரைவாஞ்சிநாதனை தேசப்பற்றாளர்என்றே எழுதி வருகின்றனர்பெரியாரில்வாதிகளே அதைத் தொடர்ந்து மறுத்துவருகின்றனர்.
அவ்வகையில் மதிமாறனும் வாஞ்சிநாதனை பார்ப்பனவெறியன் என்றேநிறுவுகிறார்தொடர்ந்து வரும் கேள்வி பதில் பகுதிகளில் திடீர் காந்தியவாதிஅன்னா அசாரேயையும் பாபா ராம்தேவையும் விமர்சிக்கிறார் இவர்களின்அரசியலின் பின்னால் ஒளிந்திருப்பது பார்ப்பன நலனே என்றும் நிறுவுகிறார்.
அரச பயங்கரவாதத்தால் எத்தனையோ ஒடுக்குமுறைகள் நிகழ்ந்திருக்கின்றன.இயற்கை வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களால் சூரையாடப்படும்போது,பழங்குடியினர் தலித்துக்கள்சிறுபான்மையினர் ஒடுக்குமறைக்குஉள்ளாகிறபோது வாய்மூடி ஊமையாயிருந்த அன்னா அசாரே ஊழலுக்கெதிராகபோராட்டம் நடத்துவது கேலிக்கூத்து என்று அருந்ததிராய் போன்ற சமூகஆர்வலர்கள் பேசினார்கள்.
மதிமாறனும் கேள்வி எழுப்புகிறார்அங்கதம் ஓங்கி ஒலிக்க மதிமாறனின்உரையாடல்கள் முன்வைக்கும் கருத்துக்கள் தமிழ்ச் சூழலில் மிகவும் கவனம்கொள்ளத்தக்கதாகும்.
பார்ப்பனியமும் முதலாளியமும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரி என்றார்அண்ணல் அம்பேத்கர்அந்த வரிசையில் காந்தியமும் நமக்கு எதிரிதான் காந்திஒரு துரோகிதான் என்று நிறுவுகிறார் மதிமாறன்.
பாரதி ஜனதா பார்ட்டி போல இந்நூலும் அதிர்வலைகளை உருவாக்கட்டும்.பெரியாரியமும் அம்பேத்கரியமும் வெல்லட்டும்.
**
பொறையாறு அரசு கல்லூரியில் வணிகவியல் பேராசிரியராக பணிபுரிகிறார் பேராசிரியர் அரச. முருகுபாண்டியன்அம்பேத்கரிய ஆய்வாளர்.
பெரியார்டாக்டர் அம்பேத்கர் வழியில் சமூகநீதி அரசியல் களத்தில் தீவிரமாக பயணிப்பவர்; எழுத்தாளர். பேச்சாளர்.
அம்பேத்கர்-பெரியார் கருத்துக்களின் அடிப்படையில் ‘போதி’ என்ற அமைப்பை தொடங்கிகாரைக்குடியில் உள்ள தனுது இல்லத்திலேயே தொடர்ந்து கருத்தரங்கங்கள் நடத்தி வருகிறார்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes