Wednesday, September 28, 2011

உலக ஒழுங்கு மாறுகின்றதா?


பனிப்போர் காலத்தின் பின்னர் உலகம் மாறுபட்ட பல நெருக்கடிகளை சந்தித்திருக்கின்றது. உலகலாவிய பயங்கரவாத அச்சுறுத்தல், பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான யுத்தம் என்பன பனிப்போரின் பின்னரான முக்கிய நெருக்கடிகளாக இருந்தாலும், இன்றைய உலகம்; பலதரப்பட்ட நெருக்கடிகளை ஒரே நேரத்தில் சந்திக்கின்றது.. என்றும் இல்லாதவாறான அமெரிக்க, ஐரோப்பிய நிதி நெருக்கடி, மத்திய கிழக்கில் டியுசீனியாவில் தொடங்கி எகிப்து, சிரியா, யெமன் என தொடரும் மக்கள் போராட்டங்களும் என உலகம் பலதரப்பட்ட நெருக்கடிகள் அச்சுறுத்தல்களையும் சந்தித்து வருகின்றது.
2ம் உலக மகா யுத்தத்தின் பின்னர் யுத்தங்கள், புரட்சிகள், நெருக்கடிகள் என்பன அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்களில் கவனமாக தவிர்க்கப்பட்டு அவை ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கு திட்டமிட்ட வகையில் திருப்பி விடப்பட்டன. அமெரிக்க, சோவியற் பனிப்போர் காலத்தில் கூட இரு நாடுகளும் நேரடியளாக மோதாமல் தமது மோதல்களுக்கு பரீட்சாத்த களமாக ஆசியாவையும், ஆபிரிக்காவையும் பயன்படுத்தின. 1962ம் ஆண்டு கியுபாவில் சோவியத்தின் ஏவுகணை தளம் தொடர்பாக அமெரிக்க, சோவியற் இடையிலான உச்சகட்ட நெருக்கடி இரு நாடுகளுக்கிடையிலான அணு ஆயுத யுத்தமாக மூழுமோ என உலகம் அச்சப்பட்ட வேளையில் அது மிக கவனமாக தவிர்க்கப்பட்டது. கொரிய யுத்தம் வியட்நாம் போர் ஆப்கானிஸ்த்தான் ஆக்கிரமிப்பு, ஆபிரிக்க புரட்சிகள் என 2ம் உலக மகா யுத்தத்தின் பின்னான பாரிய இரத்தக்களரிகளும் யுத்தங்களும் அமெரிக்க சோவியற் போட்டியின் பயனாக ஆசிய ஆபிரிக்க மண்ணில் இடம்பெற்றன.
1ம், 2ம் உலக மகா யுத்தங்களின் படிப்பினையானது ‘பேச்சுவார்த்தை’ ‘சமரசம்’, ‘யுத்த தந்திரோபாயம்’ எனும் அரசியல் யுத்தியை முதலாளித்துவவாத, ஏகாதிபத்திய அரசுகள் தம்மிடையே மேற்கொண்டு நிதி மூலதன வளர்ச்சியை தம்மிடையே ஏற்படுத்தி பங்குபோட்டு கொண்டமை மாத்திரமின்றி, இவர்களுக்கிடையிலான யுத்தங்களை வேறு பகுதிகளுக்கு திருப்பி விட்டதுடன், நேட்டோ, வோர்சோ அணிகளுக்கிடையிலான நேரடி யுத்தங்களும் இல்லாமல் செய்யப்பட்டது. 2ம் உலகமகா யுத்தத்தின் மையமான யூதர்களின் பிரச்சினை ஐரோப்பாவில் வெடித்ததாயினும் அது ஆசியாவின் எண்ணெய் வளம் கொளிக்கும் மத்திய கிழக்கில் விதைக்கப்பட்டது. அதனை பலஸ்தீன,அரபு, ஸ்ரேல் பிரச்சினையாக்கி ஏகாதிபத்தியம் அதனை தனது பொருளாதார தீப்பந்தமாகவும் நிதி மூலதன சுரங்கத்திற்கான வழியாகவும் ஆக்கி கொண்டது. அங்கு தொடங்கிய இரத்தக்களரி 3ம் உலக நாடுகளான கொரியா, வியட்நாம், ஈரான், ஆப்கானிஸ்த்தான், ஈராக் என்று ஆசியாவுக்குள்ளேயே மையம் கொண்டது. இவ் யுத்தங்கள் அமெரிக்கா, சோவியற், ஐரோப்பிய ஏகாதிபத்திய வல்லரசின் நேரடி பங்குபற்றுதல், முழுமையான ஆதரவுடன் இடம்பெற்ற போதிலும் அமெரிக்க ஐயேராப்பிய நாடுகளுக்கிடையில் நேரடியாக இடம்பெறாததால் பனிப்போர் என அழைக்கப்பட்டது.
1990ம் ஆண்டு சோவியற் யூனியனை சிதறடித்து அமெரிக்கா 2ம் உலக போரின் பின் அது வரை இருந்து வந்த இரு முகாம் கோட்பாட்டை உடைத்து தனது தலைமையில் ஒரே முகாம் கோட்பாட்டை நிலை நிறுத்தி உலக ஒழுங்கை ( World Order) தனது தலைமையில் மாற்றி கொண்டது. அது வரையிலான பனிப்போர் (Cold War World) உலகு முடிவுக்கு வந்து பனிப்போரின் பின்னான (Post War World) உலகிற்கு அமெரிக்கா ஏக தலைவனாக முடிசூடி அமர அரிய வாய்ப்பை 1990ம் ஆண்டு குவைத் ஆக்கிரமிப்பு எனும் ரூபத்தில் முன்னால் ஈராக் அதிபர் சதாம் உசைன் ஏற்படுத்தி கொடுத்தார்.
21ம் நூற்றாண்டின் உலக ஒழுங்கின் போக்கை மாற்றியமைக்க காரண கர்த்தாக்களாக இருந்தவர்களில் மூவர் குறிப்பிடத்தக்கவர்கள். உலக ஒழுங்கு மாற்றம் என்பது சடுதியாக இடம்பெறும் ஒரு விடயம் அல்ல, அது பல ஆண்டுகளாக திட்மிடப்பட்டு, உறுதியான வெளியுறவு தந்திரோபாயம், பலமான இராணுவக்கட்டமைப்பு மூலம் நிகழ்கின்றபோதிலும் குறிப்பிடப்படும் மூவர் அதனை உடனடி காரணிகளாக மாற்றுவதற்கு காரணமாய் இருந்தனர். ஒருவர் சோவியற் யூனியனின் கடைசி அதிபரான மிசைல் கொப்பர்சோ, அடுத்தவர் ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசைன், இறுதியானவர் அல்கெய்தா தலைவர் ஒசாமா பில் லாடன். முதலாமவர் பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்து பனிப்போர் உலகை பனிப்போரின் பின்னான உலகாக மாற்றியமைக்க பெரிதும் காரணமானார்.
இரண்டாமவர் பனிப்Nhரின் பினான உலகிற்கு அமெரிக்காதான் ஏக தலைவன் என முடி சூட களம் அமைத்துக் கொடுத்தார். இறுதியானவர் பனிப்போரின் பின்னான உலகை பனிப்போரின் பின் பின்னான உலகாக ( Post-Post cold war world)மாற்றியமைக்க காரணமாக இருந்ததுடன் உலகளாவிய அமெரிக்கா தலைமையிலான பயங்கரவாத எதிர்ப்பு போர் (?) எனும் பரந்து பட்ட யுத்தத்திற்கு தளம் அமைத்துக்கொடுத்தார்.
2001ம் ஆண்டு செபரம்பர் மாத அமெரிக்கா மீதான தாக்குதல் மீண்டும் ஒரு முறை உலக ஒழுங்கை அமெரிக்கா தலைமையில் வலுவாக அமைய கால்கோலியது. ஆயினும் இந்நிகழ்வு தற்செயலானது அல்ல இவ்வாறான மாற்றத்தை நோக்கி பல ஆண்டுகளாக உலகம் செயற்பட்டு கொண்டிருந்த வேளையில் அதனை உடனடி விளைவாக்கியது மட்டுமே 9ஃ11 தாக்குதல். சோவியத்தின் வீழ்ச்சியின் பின்னர் தனது தலைமையின் கீழ் உலக ஒழுங்கை நிர்ணயித்த அமெரிக்கா 9ஃ11 தாக்குதலின் பின் அதனை இன்னும் வலுப்படுத்தி தனது எதிரிகளை முற்றிலுமாக முறியடிக்கும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொண்டது. சோவியத்தின் வீழ்ச்சிக்கு பின் அமெரிக்காவின் உடனடி எதிரியாக மாறியது உலகளாவிய இஸ்லாமிய வாதம். ஆசிய ஐரோப்பா எங்கும் பரந்திருந்த இஸ்லாமிய வாத கிளர்ச்சி,புரட்சி சிந்தனைகளை முற்றாக முறியடித்து அச்சிந்தனைகளுக்கு ஆதரவான அரசுகளை கவிழ்த்து தனக்காதரவான அரசுகளை உருவாக்கவும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்குமான மரண அடி கொடுக்கவும் அமெரிக்காவிற்கு சிறந்த சந்தர்ப்பம் ஒன்று கிட்டியது.
2002ம் ஆண்டு அமெரிக்கா கொள்கை வகுப்பு தந்திரோபான நிலை இயக்குனர் றிச்சட் என் காஸ் (Richard N Haas) தனது நாட்டின் நிலைப்பாட்டை இவ்வாறு கூறினார். “உலகில் ஒரு வெளியுறவு கொள்கைதான் இருக்க வேண்டுமே தவிர பல கொள்கைகள் அல்ல. நான் இங்கு வெளியுறவு கொள்கை என்ற பதத்தை பயன்படுத்தினேனே தவிர வெளியுறவுக் கொள்கைகள் என்ற பதத்தை அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.(ஒரு விரிவுரையின் போது) உலகலாவிய ரீதியிலான பயங்கரவாதத்திற்கு(?) எதிரான போரை பிரகடன படுத்திய அன்றைய அமெரிக்க அதிபர் ஜோர்ச் டபுள்யு புஷ் உலகை பார்த்து இவ்வாறு எச்சரித்தார் “ ஒன்றில் நீங்கள் எமது பக்கம் அல்லது அவர்களின்; பக்கம், உங்கள் நிலை எது என்பதை நீங்கள் தெரிவு செய்யுங்கள்”. பனிப்போர் காலத்தில் சோவியற் முகாமையும், அமெரிக்க தலைமையிலான முதாளித்துவ முகாமையும் சமாளிக்க நேரு, டிட்டோ, நாசர் போன்ற தலைவர்களால் உருவாக்கப்பட்ட அணிசேரா கொள்கையை காலில் போட்டு மிதித்தபடியே ஜோர்ச் புஷ் இவ் எச்சரிக்கையை உலகிற்கு விடுத்தார். அதனை தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிரான போர்(?) இஸ்லாமிய எழுச்சியின் மையங்களாக கருதப்பட்ட ஆப்கானிஸ்த்தான் ஈராக் போன்றவற்றில் கடுமையாக நிகழ்த்தப்பட்டதுடன் ஈரானுக்கும் பாகிஸ்த்தனுக்கும் கடும் தொனியிலான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஈரான் எல்லையிலும் ஏனைய மூன்று நாடுகளிலும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகள் அந்நாடுகளின் காவலனாக(?) அமர்ந்து கொண்டன. அதன் பின் டியுசீனியா, எகிப்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சி ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த சர்வாதிகார, இராணுவ அரசுகளை வீட்டுக்கு அனுப்ப இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி மேற்குலகம் தமக்கு வேண்டாத மத்திய கிழக்கு அரசுகளை மனித உரிமை மீறல், சொந்த மக்கள் மீதான படுகொலை என்ற கோசங்களுடன் விரட்டியடிக்க தனது உளவு பிரிவுகளை முடிக்கு விட்டன. லிபியாவில் கடாபியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இ;ப்போது ஆட்சி கவிழ்ப்பு படலம் சிரிய ஜனாதிபதி அஷாத்தை நோக்கி நகர்கிறது.
அண்மையில் லிபியாவில் கைப்பற்றப்பட்ட இரகசிய ஆவணங்கள் கடாபியுடன் அமெரிக்காவின் CIA பிரித்தானியாவின் M16 போன்ற உளவு அமைப்புக்கள் நெருக்கமாக இருந்ததாக சான்று பகர்கிறது. ஆக மத்திய கிழக்கின் சர்வாதிகார இராணுவ அரசுகளுக்கு அமெரிக்கா காவலாக இருந்து காத்திருக்கிறது. இப்போது அவைகளை விரட்டி அடித்து கொண்டிருக்கின்றது. உலக ஒழுங்கின் இராணுவ ரீதியிலாhன நெருக்கடிகள் இவ்வாறு இருக்க என்றும் இல்லாதவாறு ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார நெருக்கடி, ஐரோப்பிய மண்டல கடன் சுமை என்பன காரணமாக அமெரிக்க தலைமையிலான உலக ஒழுங்கில் மாற்றம் வந்து விடுமோ என்ற ஆர்வம் சில ஆய்வாரள்களிடம் தோற்றம் பெற்று இது தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளும் வெளிவர தொடங்கியுள்ளன. அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி மிக அபாயகரமானது. இதனை சீர் செய்யாவிட்டால் முழு உலகமும் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி என்பன எச்சரிக்கின்றன. அமெரிக்க டொலரின் சரிவு, அமெரிக்க கடன் போன்றன அமெரிக்க எதிர்ப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் இம்மகிழ்ச்சி தற்காலிகமானதே. இந்நெருக்கடிகள் அமெரிக்hக தலைமையிலான உலக ஒழுங்கை இன்னும் வலுப்படுத்துமே தவிர தளர்த்ப்போவதில்லை. 3ம் உலக நாடுகள் தமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வாழ்வாதார உற்பத்தி, உட்கட்டமைப்பு வசதி போன்றவற்றை அபிவிருத்தி செய்ய 40 வீதத்திற்கும் அதிகமான உதவிகளை IMF, Worldbank போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களிடமே தங்கியுள்ளன. IMF / Worldbank இன் முக்கிய நிதி பங்குதாரர்கள் அமெரிக்காவும் ஐரோப்பாவும்தான். தமது பொருளாதார நெருக்கடியினால் IMF அல்லது Worldbank அளிக்கும் நிதியை அமெரிக்க ஐரோப்பா குறைக்குமானால் 3ம் உல நாடுகள் மிக பாரிய நெருக்கடியை எதிர் கொள்ள நேரிடும். இதனால் பாரிய மக்கள் புரட்சியும் போராட்டங்களும் வெடிக்கலாம் இதனை பயன்படுத்தி அமெரிக்க ஏகாதிபத்தியம் 3ம் உலக நாடுகளின் ஊடாக தன்னை வலுப்படுத்தி தமது இருப்பை இன்னும் தளமமைத்து கொள்ளும்.
அமெரிக்க ஏகாதிபத்திய, முதலாளித்துவத்தின் நெருங்கிய நண்பனான பிரான்சின் எதிர்கால ஜனாதிபதியாவார் என கருதப்பட்ட IMF இன் முன்னாள் தலைவர் ஸ்ரொஸ் கான் நியுயோர்க் விமான நிலையத்தில் வைத்து பாலியல் குற்றசாட்டொன்றில் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் தனது பதவியை துறந்ததுடன் பலதரப்பட்ட நெருக்கடிக்கு உள்ளதுடன் அவரின் எதிர்கால பிரான்சின் ஜனாதிபதியாகும் கனவும் கலைந்தது. ஆனால் இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதியான ஆதாரம் இல்லாதவை என கூறி அமெரிக்க நீதிமன்றமே அவரை விடுதலை செய்தது. மேற்குலக கலாச்சார பார்வையில் வலுவில்லாத உறுதியற்ற தகவல்களுடனான குற்றச்சாட்டில் ஸ்ரொஸ் கான் அமெரிக்காவில் ஏன் கைது செய்யப்பட்டார். அமெரிக்க பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது IMF இனால் 3ம் உலக நாடுகளுக்கு வழங்கும் கடன் உதவிகள் டொலரில் அல்லாமல் மாற்று நாணயங்களில் வழங்குவதற்கான திட்டமொன்று குறித்து ஸ்ரொஸ் கான் தனது ஆலோசகர்களிடம் தீவிரமாக பரிசீலித்து கொண்டிருந்தார் என்பதும் அதனை தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட அவமானங்கள் பதவி இழப்புக்களும் தனது உலக ஒழுங்கை மாற்றியமைக்க நினைப்பவர் தனது நண்பராயினும் விட்டு வைக்க போவதில்லை எனும் செய்தியையே அமெரிக்கா உலகிற்கு சொல்ல முற்படுகின்றது.

Sunday, September 25, 2011

தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தீர்வுக்கு புதுமுகவரி கொடுக்கப்படல் வேண்டும்


புலிகளின் ஆயுத போராட்டம் தொடர்ந்திருந்தால், புலிகள் தோற்கடிக்கப்படாமல் இருந்திருந்தால் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான முயற்சி துரிதப்படுத்தப்பட்டு சில வேளை தீர்வு பெறப்பட்டு தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்திருக்கலாம் என்ற கருத்தியல் முற்றிலும் தவறானது.

விடுதலைப்புலிகளின் இராணுவ ரீதியான தோல்வியின் பின்னர் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் அரசாங்கம் பின்னடிப்புக்களை செய்து வருவதாகவும், அது தொடர்ச்சியாக தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது என்ற கருத்தியலானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக தமிழ் மக்களிடம் பரவலாக காணப்படுகின்றது. இக்கருத்தியல் உண்மைக்கு புறம்பானது என்று ஓதுக்கி விடமுடியாது. அதே நேரம் புலிகளின் ஆயுத போராட்டம் தொடர்ந்திருந்தால், புலிகள் தோற்கடிக்கப்படாமல் இருந்திருந்தால் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான முயற்சி துரிதப்படுத்தப்பட்டு சில வேளை தீர்வு பெறப்பட்டு தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்திருக்கலாம் என்ற கருத்தியல் முற்றிலும் தவறானது.
புலிகளின் ஆயுத ரீதியான தோல்வியின் பின்புதான் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சிகள் காத்திரமாக முன் நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதையும், எடுக்கப்படும் முயற்சிகள், தீர்வுகளின் ஊடாக கடந்த காலங்களை போல புலிகளின் ஆயுத போராட்டத்தை காரணம் காட்டி காலம் கடத்துவதோ, இழுத்தடிப்பு செய்ய முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஆயுத போராட்ட காலத்தில் அரசாங்கம் புலிகளையும், புலிகள் அரசாங்கத்தையும் காரணம் காட்டி மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றமுடிந்தது. தமிழ் பேரினவாதத்திற்கு வலுவாக சிங்கள பேரினவாதமும் ஓங்கியிருந்தது. ஒரு முனை மௌனிக்கப்பட்ட பின் மறு முனையால் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. ஆனால் புலிகள் ஆயுதத்தின் ஊடாக கோரிய குறுந்தேசியம் மீண்டும் வேறு வழிகளில் முயற்சிக்கப்பட்டால் “பழைய குருடி கதவை திறடி” என்ற நிலைமைதான் ஏற்படும். புலிகளின் ஆயுதப்போராட்டத்தின் மூலம் கோரியதையோ, அதற்கு சமமானதையோ கேட்பது யதார்த்தத்திற்கு புறம்பானதும் நடைமுறை சாத்தியம் அற்றதும் கூட, புலிகளின் ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டமை தமிழ் மக்களின் விமோசனத்திற்கான முதற்படி. இதனை உணர்ந்து உரிய முறையில் பயன்படுத்துவதில்தான் மக்களின் விடிவு காலம் தங்கியுள்ளது.
புலிகளின் ஆயுத முனையில் மௌனிக்கப்பட்ட தமிழ் மக்களின் கருத்து சுதந்திரமானது புலிகள் தோற்கடிக்கப்பட்டபின் விசாலமாக மீண்டு எழவில்லை. பல விவாதப்பொருட்கள் இன்னும் பரவலாக விவாதிக்கப்படாமல், ஒரு சில கட்சிகளின் கருத்தாகமட்டுமே உள்ளது. தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தீர்வு என்பது ஒரு கட்சியின் கொள்கையோ, முடிவோ அல்ல. அது மக்களின் உரிமைப்பிரச்சனை. வாக்களித்தவர்களின் அதிகமானோர் வாக்களித்தனர் என்பதற்காக ஒட்டுமொத்த மக்களின் அடிப்படை உரிமைப்பிரச்சினையை தீர்மானிக்கும் சக்தி கிடைத்ததாக கூற முடியாது. வாக்களிப்பு வீதம், வாக்களித்தமக்களின் அப்போதைய மனோநிலமை, அக்காலப்பகுதிக்கான சூழல், எதிர்தரப்பு பலவீனங்கள் காரணமாக அமைந்தனவே தவிர வாக்களிப்பை மாத்திரம் கொண்டும் ஒரு சமூகத்தின் சார்பான தலைவிதியை தீர்மானிக்க முடியாது.
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை இனப்பிரச்சனை தீர்வில் ஏமாற்றுகின்றது, காலத்தை கடத்துகின்றது என்பது ஆச்சரியப்பட கூடிய விடயமல்ல. இத்தகைய அரசாங்கத்தின் இழுத்தடிப்புகளுக்கு தமிழர் தரப்பு எவ்வாறு ராஜதந்திரமாக காய்களை நகர்த்தி தொடர்ந்து இழுத்தடிக்காத வண்ணம் முட்டுக்கட்டை போட்டு தீர்வுகான வழிக்கு கொண்டு வருகின்றது என்பதுதான் நோக்கப்படவேண்டிய விடயமாகும். ஆனால் இன்றைய நிலையில் இனப்பிரச்சனை தீர்வுக்கான இழுத்தடிப்புகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் வழி ஏற்படுத்திகொடுப்பதே தமிழ் கட்சிகள்தான். இதில் பெரும் பங்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை சார்ந்தது.
ஓவ்வொரு கட்சிக்கும் இனப்பிரச்சனை தீர்வு விடயத்தில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் குறைந்தபட்ச அரசியல் தீர்வு விடயத்திலாவது அனைத்து தமிழ் கட்சிகளும் ஒருமித்த கருத்துக்கு வருவது முக்கியமானது. குறைந்தபட்ச அரசியல் தீர்வு விடயத்திலாவது இணக்கம் ஏற்படா விட்டால் அது பேரின வாதத்திற்கும் இழுத்தடிப்பு, ஏமாற்றங்களுக்கும் களம் அமைத்துவிடும்.
இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை, சர்வதேச தடைகள் போன்ற கோசங்கள் எல்லாம் தமிழ் மக்களின் பிரச்சனை தீர்வுக்கான காத்திரமான பங்களிப்பை வழங்கப்போவது இல்லை. இலங்கை அரசுக்கெதிரான போர்குற்ற விசாரனை கோசத்தை பலவீனப்படுத்தியது தமிழ் தேசிய கூட்டமைப்பு தான், எவ்வாறு எனில் கடந்த ஜனாதிபதித்தேர்தலில் முன்னால் இராணுவ தளபதி சரத்பொன்சேகாவை ஆதரித்ததன் மூலம் யுத்த கால இராணுவத் தளபதியும், இராணுவமும் போர்குற்றம் புரியவில்லை என்பதை, அவருக்கு பெற்றுக்கொடுத்த வாக்குகளின் ஊடாக TNA ஏற்றுக்கொண்டது, இராணுவதளபதியும், இராணுவமும் போர்குற்றம் புரியவில்லை என்றால் போர் குற்றம் புரிந்தது யார்? பாதுகாப்பு அமைச்சருமான ஜனாதிபதியும், பாதுகாப்பு செயலாளருமா? இலங்கைக்கு எதிரான போர் குற்ற விசாரனை கோசமானது இலங்கையை மேற்கத்திய நாடுகளிடம் மண்டியிட வைக்கும் முயற்சியே தவிர தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வுக்கான முயற்சி அல்ல
அமெரிக்க, மேற்கத்திய நாடுகளின் கேந்திர நலனுக்கான களமாக இலங்கை மாறி விட்டால் போர்குற்ற கோசமானது புஸ்வாணம் ஆகிவீடும். முதலாளித்துவ மேலாதிக்க, பிராந்திய ஏகாதிபத்திய போட்டியில் இலங்கை முக்கியத்துவத்திற்காகவே போர்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல் கோசங்களெல்லாம் எழுப்பப்படுகின்றது. இஸ்ரேல் மேற்கொள்ளாத மனித உரிமை மீறலா? அமெரிக்கா தனது நலனுக்காக இன்று வரை அதனை பாதுகாத்து வருகின்றது.
வியாபார ரீதியிலான ஒரு போராட்டத்தின் கருத்துக்களோ, செயற்பாடுகளோ மக்களின் இன்றைய தேவை அல்ல. புலிகளின் ஆயுத ரீதியான போராட்டமானது இறுதிக்கட்டத்தில் வணிகமயப்படுத்தப்படதுதான் உண்மை. புலிகளின் போராட்ட சித்தாந்தங்களான தனி ஈழம், தியாகம், அர்ப்பணிப்பு போன்ற கோட்பாடுகள் புலிகளுக்குள்ளேயே தோற்கடிக்கப்பட்டது. இறுதிக்கட்டத்தில் புலிகளின் முக்கிய தலைவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான புலி உறுப்பினர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தமை, முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் இதுவரை ஒரு துப்பாக்கி சன்னமாவது வெடிக்காமை போன்றன புலிகளின் போராட்டம் உணர்வு ரீதியானது அல்ல என்பதை கட்டியம் கூறுகின்றது.
மக்களின் பலதரப்பட்ட பிரச்சனைகளை நன்கு உணர்ந்து வணிக ரீதியிலான போராட்டத்தின் குரல்களாக ஒலிப்பதை விட குறைந்த பட்ச தீர்வுக்காகவது அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்று பட வேண்டிய காலம் இது. அவ்வாறு நோக்கின் காணி, நிர்வாக அதிகாரங்களுடனான மாகாண சபை முறைமை குறைந்தபட்ச தீர்வுக்கான சிறந்த தெரிவாகும். அண்மைய டெல்லி மாநாடு போல தமிழ் கட்சிகள் மீண்டும் வார்த்தை ஜாலங்களுக்காகவோ, தென்னிலங்கை ஐயப்படும் சொற்பதங்களுக்காகவோ தங்களுக்குள் முரண்படுவதை தவிர்க்க வேண்டும். அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சனைகள் இலங்கை அரசாங்கத்துடன் பேசித்தீர்க்கப்பட வேண்டிய ஒன்றென்பதையும், இதில் இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தின் பங்கு தங்களின் பிராந்திய நலனை தாண்டி உதவாது என்பதையும் அரசியல் கட்சிகளை தாண்டி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்காக ஊடகங்கள் நடுநிலையானவர்களின் கருத்துகளுக்கும் விமர்சனங்களுக்கும் வாய்பளிக்க வேண்டும்.
கொழும்பின் இராஜதந்திர அணுகுமுறையின் முன் தமிழர் தரப்பு எப்போதும் தோல்வியை சந்தித்துள்ளது. “கல் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடி” என்று தம்மை புகழ்ந்துரைத்து சிங்கள மக்களை “மோட்டுச்சிஙகளவர்” என்று இகழ்ந்து உரைக்கும் ஒரு தவறான போக்கு தமிழ் மேட்டுக்குடி அரசியல் மட்டத்தில் உண்டு. “மோட்டுச்சிங்களவர்” என்ற கண்மூடித்தனமான வார்த்தையை பிரயோகிப்பவர்கள் உணரவேண்டிய உண்மை யாதெனில் ஒரு சிறிய பாக்கு நீரினையால் பிரிக்கப்படுகின்ற இந்தியாவுக்குக் கீழ் அமைந்துள்ள சிறிய தீவான இலங்கை அந்தப்பிரமாண்டமான உபகண்டத்தின் பிடியில் அகப்பட்டு கரைந்து போகாமல் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் தப்பி ஓடி தமது அரச பண்பாடு, பாரம் பரியங்களுடன் வாழக்கூடிய திறமை சிங்கள சமூகத்திடம் உண்டு. இந்த பிரமாண்டமான இந்தியாவால் வரலாறு தொட்டு இன்று வரை சிங்கள அரசையும் கலாச்சாரத்தையும் தோற்கடித்து தம்முடன் இணைக்க முடியவில்லை. மிகவும் இராஜதந்திரத்துடனும் புத்தி சாதித்தியத்துடனும் இந்தியாவை பல நூற்றாண்டு காலமாக கையாண்டு வருவதில் சிங்கள தலைமைகள் வெற்றி பெற்றுள்ளன அதே போன்று சர்வதேசத்தின் நாடித்துடிப்புக்கு ஏற்ப அது தனது இராஜதந்நிர பாதைகளை மாற்றியமைத்து தனக்கு பக்க பலமாக ஏதோ ஒரு சக்தியை அழைத்துச் செல்கின்றது.
அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச போன்றோர் மூலம் தமிழருக்கு எதிரான இனவாதக்கருத்துகளை வெளிப்படுத்தும் அதே வேளை அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸவித்தார, டி. யு. குணசேகர போன்றோர் மூலம் தமிழ் மக்களுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிடுகின்றது. மறு பக்கம் இந்தியாவையும் மேற்கத்திய சமூகத்தையும் சமாளிக்க அவசரகால சட்டத்தை நீக்கும் அதே வேளை அச்சட்டத்தில் உள்ள முக்கிய சரத்துக்களை மறைமுகமாக பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் கொண்டுவர எத்தனிக்கின்றது.
எனவே இவ்வாறான தந்திர செயற்பாடுகள் கொண்ட சிங்கள அரச தலைமையுடன் அரசியல் ரீதியாக மோத முட்படும் தமிழ்த்தலைமைகள் தமது மக்களுக்கான குறைந்தபட்ச அரசியல் தீர்வு விடயத்திலாவது ஒன்று படாவிட்டால் கொழும்பிடம் இருந்து எதனையும் பெறமுடியாது. தமிழ் மக்களுக்கான தீர்வினை தங்க தட்டில் வைத்து தென்னிலங்கை சமூகம் தரப்போவது இல்லை. தமிழர் தரப்பிடம் காணப்படும் பலவீனங்களே இனப்பிரச்சனைத்தீர்வுக்கான பெரும் முட்டுக்கட்டைகள் ஆகும்.
இவ்வாறான நிலைமையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சி எனும் தோற்றப்பாடு தமிழர் தரப்பின் பலவீனங்களின் ஒன்றாகவே இருக்கும். புலிகளின் நேரடி ஆதரவை பெற்று இருந்த, தமிழ் கடும் போக்காளர்களைக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் தேர்தல்களில் தமிழர்கள் பகுதியில் வெல்வது தென்னிலங்கை இராஜதந்திரத்துக்கு உவப்பான விடயமே. இதற்கு மாற்றாக தமிழர் பிரச்சனையை யதார்த்தமாகவும் தமது தரப்பு பலவீனங்களை உணர்ந்து காலத்திற்கு ஏற்பபயணிக்கக்கூடிய அரசியல் தலைமைகள் தமிழ் மக்களின் இன்றைய உடனடி தேவையாக உள்ளது இன்றைய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றீடாக வடக்கில் EPDP யும் கிழக்கில் TMVP யும் உள்ளன. ஆனால் இவ்விரு கட்சிகளும் ஆயுதக் குழுக்கள் எனும் பார்வையிலே நோக்கப்படுகின்றன. எனவே இக்கட்சிகள் தம்மிடையே சுய விமர்சனத்துடன் கட்சி கட்டமைப்பையும் மாற்றவேண்டும். படித்த யதார்த்தவாதிகளுக்கு இடம் வழங்க வேண்டும். அத்துடன் தம்மை முழுமையான ஜனநாயகக்கட்சிகள் என்று மக்களை உணரச்செய்வதிலே இவர்களின் எதிர்கால இருப்பும் தங்கியுள்ளது.
எனவே தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தீர்வுக்கு புதிய தலைமையின் கீழ் புது முகவரி கொடுக்க வேண்டிய காலகட்டம் மக்கள் முன் உள்ளது. தன்னாட்சி அதிகாரம், சுயாட்சி போன்ற தென்னிலங்கை விரும்பாத சொற்பதங்களை தவிர்த்து. தமது பலவீனங்களை உணர்ந்து மக்களின் நலனுக்காக குறைந்த பட்ச அரசியல் தீர்விலாவது ஒன்றுபட்டு அதனை பெற முயல வேண்டும்.

Monday, September 19, 2011

தமிழகத்தில் சாதி வெறி குறைந்து இருக்கிறதாம்... நிஜமா?


தமிழகத்தில் - தங்களது பெயருக்கு பின்னால் தங்களின் சாதியின் பெயரை இணைத்து கொள்ளும் பழக்கம் இன்று வழக்கொழிந்து போனதற்கு பெரியார் தான் காரணம் என்று சொல்லி ஒரு சுயமரியாதைக்காரர் இப்படி கட்டுரை எழுதி இருக்கிறார்.

"பெயருக்கு பின்னால், ஜாதி பெயரை போட்டுக் கொள்வதில் பெருமை உடைய சமூகமாக இருந்தது. ஜாதி, மதத்திற்கு எதிராக தந்தை பெரியார் ஓயாது போராடி, தன் பெயருக்கு பின் ஜாதி பெயரை போட்டு கொள்வதற்கு வெட்கப்படும்படியான ஒரு மனநிலையை தமிழர்களிடம் உருவாக்கினார். இது
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத நிலை.
எந்தத் தலைவருக்கும் இல்லாத சிறப்பு." என்கிறார்.

இதில் ஓரளவுக்கு உண்மை இருந்தாலும் - மேலும் சில உண்மைகள்.
"ராமசாமி அய்யர் என்று சொல்வதிலுள்ள அழகு ரமேஷ் அய்யர் என்று
சொல்லும் போது இல்லை.சான்டோ சின்னப்பா தேவர் என்று சொல்லும்
போது இருக்கிற வீச்சு கார்த்திக் தேவர் என்று சொல்கிறபோது இல்லை
என்பதாலும் தமிழர்கள் தங்களுக்கு பின்னால் சாதியை போடுவது ஒழிந்து
போனது. ஐம்பது வயதுக்கு மேல் போட்டு கொள்ள ப்ரியப்படுகிறார்கள் "
என்கிறார் ஒரு சாதீய ஆய்வாளர். அப்படியும் இருக்கலாம்.

கல்யாணப்பத்திரிகையில் பெயருக்கு பின்னால் சாதி உள்ளதை மறுக்க இயலாது.
இங்கே , சுயமரியாதை கண்டு கொள்ளாத, வெளி காட்டாத - சில வெட்கக்கேடான
விஷ(ய)ங்களை பார்ப்போம். ஒருவன் தன் பெயருக்கு பின்னால் தன் சாதியின்
பெயரை போட்டு கொள்ளாமல் இருப்பதனால் மட்டும், தமிழன் சாதியை விட்டு
தொலைத்து விட்டான் என்றோ தமிழகத்திலிருந்து சாதி ஓடி ஒழிந்து விட்டது
என்றோ சொல்லி விட முடியுமா?

தமிழர்களின் சாதி வெறி - இன்று வேறு வேறு வடிவத்தில் கொப்பளிக்கிறது என்று
சொல்லலாம். அதை சற்றே ஆழமாக பார்த்தால், அதன் அருவருக்கத்தக்க மறுபக்கத்
தை பார்த்தால் - தமிழன், தன் பெயருக்கு பின்னால் தன் சாதியை தொங்க விட்டு
கொண்டிருந்ததே மேலென்று சொல்லலாம். தம் பெயருக்கு பின்னால் இருந்த
சாதியை தூக்கி தன் தலைவர்களின் பின்னால் போட்டு அழகு பார்த்து, தன் சாதியை
காட்டி கொண்டு திரிய துவங்கிவிட்டான்.

பெருந்தலைவர் காமராஜர் என்று அறியப்பட்டவரை, "காமராஜ் நாடார்" என்று
விளிக்கத் துவங்கி விட்டான். கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்
வ.ஊ.சியை, பிள்ளைமார்களின் சாதிய தலைவனாக காட்டி கொள்வதில்
பெருமை அடைகிறார்கள். மாற்றம் என்றது மாற்றத்தை விட, ஏமாற்றத்தை தான்
தந்துள்ளது. தமிழகத்தில், இப்போது சாதி அமைப்புகளின் ஜெயந்தி விழாக்களுக்கு
பஞ்சமில்லை. அங்கே வரும் இளைஞர்களின் பட்டாளத்தை பார்க்கும்போது சாதி
அழிக்கப்பட்டதாக தெரியவில்லை. உரம் போட்டு வளர்க்கப்பட்டுள்ளது தெரிகிறது.

"தென் தமிழகம் - எவர் ஒருவருக்காவது ஜெயந்தி விழா என்றால் செத்து தான் பிழைக்கிறது". பெயருக்கு பின்னால் சாதி இல்லை என்பதை விட, பெயரளவுக்கு சாதியில்லை என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இதில் பெருமையடைய என்ன உள்ளது. "வன்னியன் ஓட்டு அன்னியனுக்கு இல்லை" என்று மேடையிலேயே அரசியல் தலைகள் முழங்குகின்றனர் - சமூகநீதி என்கிற போர்வையில். கட்டுரையாளர் - அதையெல்லாம் அறிந்திருக்கவில்லை போலும். சுயமரியாதைகார கட்டுரையாளர் தொடர்கிறார் - இப்படி.

"சுதந்திர போராட்டத்திலும் சரி, அதற்கு பின்னும் சரி, மேற்கு வங்காளம் பல
புரட்சியாளர்களை தந்திருக்கிறது. ஆனால் அந்த மண்ணில், ஜாதிக்கு எதிரான மனோபாவம் முற்போக்காளர்கள்
மத்தியிலேயே உருவாகவில்லை. அதன் சாட்சியாகத்தான் இன்றும்
அந்த மாநில கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்களே சீதாரம் யெச்சூரி,
புத்ததேவ் பட்டாச்சாரியா, சோம்நாத் சட்டர்ஜி, இந்திரஜித் குப்தா
என்று ஜாதி பட்டத்தோடு தான் அலைகிறார்கள்." என்கிறார். உண்மை
தான். அதே போல தான் கேரளாவில் நாயர்களும், நம்பூதிரிகளும்.

ஆனால் பாருங்கள். பெயருக்கு பின்னால் சாதியை தொங்க விட்டிருக்கு
ம் தலைவர்களால், பிறருக்கு ஆபத்தில்லை. கண்ணியமான தலைவர்களா
க தான் இருக்கிறார்கள். ஆனால் சாதி பெயரை தம் பெயருக்கு பின்னால்
போட்டு கொள்ளாதவர்களால் தான் - மிக பெரிய ஆபத்து சூழ்ந்துள்ளது.
அதை உணர்ந்து கொள்ளாத - அரைகுறை சுயமரியாதைகாரர்கள் தான்,
அரைகுறை புரிதலோடு - பேசுகிறார்கள்... எழுதுகிறார்கள்...

வேறெந்த மாநிலத்தையும் விட - சாதியை ஒழிக்க வாழ்நாளெல்லாம்
உழைத்த, போராடிய பெரியார் மண்ணில் தான் பெருந்தொகையான
சாதி கட்சிகள். தேர்தலுக்கு தேர்தல் வாக்காளர்களின் எண்ணிக்கை
அதிகரிப்பது போல - சாதி மற்றும் மத கட்சிகளின் எண்ணிக்கையும்
அதிகரிக்கிறது. பெயருக்கு பின்னால் சாதி இல்லை என்று பீத்திக்
கொள்வதால் மட்டும் என்ன பெருமை ஏற்பட்டு விடப்போகிறது.



"சினிமா நடிகன் மார்க்கெட் போனால் கட்சி துவங்கி - முதல்வர்
நாற்காலி கனவு காண்கிறான்" என்கிறார்கள். அதை போலவே,
" நோயாளிகளோ, கேஸ்களோ வருவது குறைந்து போனால் -
தங்கள் சாதிக்கென்று கட்சி துவங்கி விடுகிறார்கள் மருத்துவர்களும்,
வழக்கறிஞர்களும்" என்கிறார்கள் பொதுமக்கள். தொழிலதிபருக்கு
பதவி ஆசை வந்தால், அவரும் தம் சாதியின் பெயரால் கட்சி துவங்கி
விடுகிறார். இதில் உண்மை இல்லாமல் இல்லை. இந்த கட்சி துவங்கலில்
ஆதிக்க சாதிகளும் இருக்கின்றன... அவற்றோடு சுயமரியாதைக்காரர்களும்
மேடை போடுகிறார்கள்.

மேலும், அந்த கட்டுரையில் சுயமரியாதைக்காரர் இப்படி சொல்கிறார். "ஜாதி சங்கத்திற்கு தலைவனாக இருப்பவர் கூட தன் பெயருக்கு பின் ஜாதி பெயரை போட்டுக்கொள்ள விரும்பாத அல்லது முடியாத ஒரு சூழலை தந்தை பெயரியார் உருவாக்கினார்." பெயருக்கு பின்னால் போடாத தலைவன், தன் பெயருக்கு முன்னால் போட்டு கொள்கிறான்.

பெரியாரின் "சாதியற்ற சமூகம்" என்கிற கனவு நிறைவேற வேண்டுமானால் - முதலில் சாதி கட்சிகளை அப்புறப்படுத்த வேண்டும். அதை விடுத்து வீண் பெருமை பேசுவதால் யாதொரு பயனும் இல்லை

Thursday, September 15, 2011

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன் -இந்துத்துவத்துக்கு விளக்குப் பிடித்த திருமகன்

தேவரின் காலடி மண்ணை எடுத்துக் கும்பிடும் கோடானு கோடி பாசாங்குவாதிகளின் காதில், தேவர் பற்றிய அவ்வளவாய் சொல்லப்படாத விசயங்களைப் போட்டு வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

முதலில் காமராஜர் குறித்து, முத்துராமலிங்கத் தேவர் உதிர்த்த பொன்முத்துக்களைப் பார்ப்போமா?

1957 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காஞ்சிபுரத்தில் பேசிய பேச்சு:- "இற்றைக்கு முதல் மந்திரி என்று சொல்கிற நபர் எல்லாம், அற்றைக்கு நாங்கள் ஏவின வேலையை கேட்டுக் கொண்டிருந்தவர்", என்று ஆணவம் நிரம்பக் கூறினார்.

இதே விசயத்தை, சங்கரன்கோவிலில் இருந்து தேனி வரை எல்லா ஊர்க் கூட்டங்களிலும், முதல்வரை, மரியாதை சிறிதும் இன்றி 'நபர்' என்றோ, காமராஜன் என்றோ, காமராஜ் நாடான் என்றோ தாழ்த்தியே பேசி வந்தார். எல்லா மேடைகளிலும் ஒரு கதை சொல்வார், காமராஜர் குறித்து. அது என்ன கதை?பசும்பொன் உ.முத்துராமலிங்கமே கூறட்டும் கேட்போம்.

"இதே காமராஜ் இற்றைக்கு முதல் மந்திரியாக இருக்கலாம். ஆனால் இதே நபர் பழைய காலத்தில் ஒரு ஓட்டராக இருக்கக்கூட யோக்யதை இல்லாமல் இருந்த தொண்டர். அற்றைக்கு சொத்திருந்தவர்களுக்குத்தான் ஓட்டுரிமை. இவருக்கு சொத்து கிடையாது. ஒரே ஒரு வீடு இருந்தது. அதுவும் அவர் தாயார் பெயரில் இருந்தது. அந்த வீட்டை இவர் பேருக்கு மாற்றித் தரும்படி நான் கேட்டபோது, இவருக்கு ஒரு தங்கை உண்டு. இவருடைய தாயார், "வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. அதை நல்ல இடத்தில் கை பிடித்துக் கொடுக்க வேண்டும். ஆகையால் நான் இந்த வீட்டைப் பையன் பேருக்கு மாற்ற முடியாது" என்று சொல்லி விட்டார்கள்.
(இதே கூற்றை "அவன் வேலை வெட்டி இல்லாமல், பொருள் சேர்க்கத் தெரியாமல் ஊரைச் சுத்துகிறவனாயிற்றே. அவனுக்கு வீட்டை எழுதி வைத்து விட்டு பிறகு என்ன செய்கிறது?" என்று காமராஜரின் அன்னை சொன்னதாக சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)

அதன் பிறகு நான் என்ன செய்ய வேண்டியிருந்தது என்றால், ஒரு வெள்ளாட்டை வாங்கி, அதற்குக் கட்ட வேண்டிய முனிசிபாலிடி வரியைச் செலுத்தி, தகர வில்லையை வாங்கி, அதனுடைய கழுத்தில் கட்டி,அந்த ரசீதை காமராஜ் கையில் கொடுத்து,ஓட்டர் ஆக்கியவன் அடியேன். இந்த நிலைமையிலிருந்த சாதாரணத் தொண்டர்களை எல்லாம் மனிதத் தன்மைக்குக் (!!!) கொண்டு வந்தவன் அடியேன்."(21/2/57 காஞ்சிபுரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்)

சாதாரணமான தொண்டனாக இருந்த காமராஜை, மனிதத்தன்மை உள்ள மனிதராக இவர் ஆக்கினாராம். என்னதோர் ஆணவப் பேச்சு பாருங்கள்.

அதே கூட்டத்தில் காமராஜரை, காமராஜன் என்றுதான் சொல்லியிருக்கிறார். அப்போதைய காலகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரசின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் காமராஜர். அவர் தலைமையை, முத்துராமலிங்கத் தேவர் மதிப்பிடும் தரம் எப்படி இருந்தது பாருங்கள்.

"இன்றைக்கு மாகாணக் கமிட்டியில் எவனெவனோ வந்து விட்டான்.இற்றைக்கு காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ. தேர்தலுக்கு 'நாமினேஷன்' போடுகிறவன் கேட்கிறான். "திலகர், காந்தி மகன் தானே" என்று.இப்படிப்பட்ட அறிவாளிகள் வந்து விட்டார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் சபையில் காமராஜின் புண்ணியத்தால்."

கல்வியைப் பரவலாக்கிப் பணியாற்றிய காமராஜரினை, ராஜாஜியுடன், தேவர் ஒப்பிட்டதைப் பார்ப்போம். "அவர் மிதவாதியாக (ராஜாஜி) இருந்தாலும், காமராஜ் போல தற்குறி அல்ல. பழங்காலத்தில் எம்.ஏ. எல்.டி., பி.ஏ. எல்.டி. பட்டம் பெற்றவர்கள் ஆண்டார்கள். இற்றைக்கி எம்.ஏ.,பி.ஏ. இல்லாது வெறும் எல்.டி.க்கள், அதாவது 'லெப்ட் தம்ப்' இடது கைப்பெருவிரல் பிரட்டுகிறவர்கள் ஸ்தானம் பெற்றிருக்கிற காலம்."

காமராஜ், வறுமையின் காரணமாய்ப் பள்ளிப்படிப்பைத் தாண்டவில்லை, என்பதனை நாடறியும். இதனால் என்ன குறைந்தது, அவரின் திறமைக்கு? தேவர், இதனைக் கூட கேவலமாகப் பேசித் தன் பெருந்தன்மையை உலகுக்குப் பறைசாற்றியிருக்கிறார். (இதனைச் சொன்ன தேவரோ, எஸ்.எஸ்.எல்.சி.யே தாண்டவில்லை என்பது இன்னும் சிறப்பு).

குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்து தமிழர்கள் கல்வியில் மண்ணள்ளிப்போட சூதறிஞர் ராஜாஜி முனைந்தபோது, காங்கிரசுக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்து, குல்லுகப் பட்டர், பதவி விலகி, காமராஜர் முதல்வரானார். அச்சூழலை விவரிக்க வந்த தேவர் சொல்கிறார், காஞ்சி தேர்தல் பிரச்சாரத்தில் - "பிளாக் மார்க்கெட்காரர்களுக்கு புரோக்கராக நின்ற காமராஜர் பிரதம மந்திரியாகிறார்." (அப்போது, மாகாண முதல்வர்களை, பிரீமியர்-பிரதமர் என்று சொல்வது வழக்கம்)

காமராஜரை ஆதரித்த காங்கிரஸ் தலைவர்களிடம் தேவர் சொன்ன கருத்து "உங்களுக்கு அவர் பிரதமராகத் தோன்றலாம். எனக்கு அவருடைய பழைய மார்க்கெட் வேல்யூ தெரியும். ஒழுக்கத்தின் பெயரால், அறிவால்,தியாகத்தால் பதவிக்கு வருகிறவர்களைத்தான் நான் மதிக்க முடியும். சந்தர்ப்பத்தின் பெயரால் முன்னுக்கு வருகிறவர்களை நீங்கள் மதிப்பதாக இருந்தால் நான் என்ன செய்ய முடியும்?".

சற்றே யோசித்துப் பார்ப்பின் தேவர் குறிப்பிட்ட மார்க்கெட் வேல்யூ என்பது, ஜாதிப் படிநிலைதான் என்பது தெள்ளெனப் புரியும்.

முதல்வராகும் முன் ஆசீர்வாதம் வாங்க வந்த காமராஜரிடம் இவர் சொல்கிறார் "நீ பிரதமர் ஆவதன் மூலம் காங்கிரஸ் கெடும். நீ மாகாணக் கமிட்டித் தலைவனாக (தலைவராக அல்ல-அழுத்தம் எம்முடையது) இருந்து கொண்டு யாரேனும் நல்லவரைப் பிரதமராக்கி, உன்னுடைய அதிகாரத்தைச் செலுத்து. உனக்கு வர வேண்டிய லாபம் வரும்".

அதே காஞ்சிக் கூட்டத்திலே, தேவர், காமராஜர் மீது ஓர் அபாண்டப் பழியைப் போட்டார். அது என்ன பழி? "பழைய காலத்தில் காங்கிரஸ் காரன் போட்டது கள்ள ஓட்டு. இப்போது காமராஜ், கள்ள நோட்டு அச்சடிக்கிற காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார்", " ஏற்கெனவே விருதுநகர் நாடார் ஒருவர் நான்கு லட்ச ரூபாய் கள்ள நோட்டை அள்ளிக் கொண்டு,திருவெற்றியூருக்கு வந்திருந்தபோது கைது செய்யப்பட்டார். இப்பேர்ப்பட்ட யோக்யதை அற்ற காமராஜ் கும்பலைத் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு நல்லதல்ல".

காமராஜர், சாகும்போது அவர் வீட்டில் நூற்றிச் சொச்சம் ரூபாய் மட்டுமே இருந்தது என்பதை நாம் அறிவோம். நேர்மையாய், எளிமையாய் வாழ்ந்த அத்தலைவரினைத் தரம் தாழ்த்தி, இவ்வாறு பழி போட்டு, காஞ்சியில் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும் கள்ளநோட்டுப் பேர்வழி என்று புழுதிவாரித் தூற்றியவர், தேவர்.

கம்பம் தேர்தல் கூட்டத்திலே, 24 பிப்ரவரி, 1957ல் மீண்டும் அதே பழியைப் பின்வருமாறு சொல்கிறார்."இன்று கள்ள நோட்டு அடிக்கும் நாடாரின் ஆட்சி இந்த நாட்டிலே நடைபெறுகிறது" "என் மீது கேஸ் போட்டால் இந்தக் கள்ள நோட்டு அடிக்கும் நாடாரின் அயோக்கியத்தனத்தைச் சாட்சி மூலம் நிரூபிக்க ரிக்கார்டு இருக்கிறது".

இக்கூட்டத்திலே, காமராஜரின் படிப்பறிவை மறுபடியும் கொச்சைப்படுத்தி "எம்.ஏ. படித்தவர்கள் ஆண்ட நாட்டிலே எல்.டி. பதவிக்கு வந்து விட்டார்கள். இந்த அளவுக்கு மானம் கெட்டு வந்திருக்கிறது. இப்படி மானம் கெட்டு இருக்கிற காரணத்தினாலேயே இந்த நாட்டிலே காரியங்கள் மிகத் தாழ்ந்த நிலைமைக்கு வந்திருக்கிறது."
(இதே காலகட்டத்தில் மதுரை தமுக்கத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் தேவருக்கு, குறும்பாய் ஒருவர் துண்டுச்சீட்டில் "நாடார், நாட்டை ஆள்வார்" என்று எழுதிக் கொடுத்து இருக்கிறார். தேவரய்யா டென்ஷனாகி விட்டார் "நாடார், பனையை ஆள்வார், தென்னையை ஆள்வார், நாட்டை ஆளமுடியாது" என்று பச்சையாய் சாதிவெறி கக்கினாராம். தூத்துக்குடி அருகில் உள்ள குருக்குச்சாலையில் நடந்த தேர்தல் கூட்டத்தில், உரை முழுவதும் காமராஜரை 'சாணாப் பயலே' என்று திட்டியே பேசியிருக்கிறார்.)

இதே கம்பம் கூட்டத்திலே, காமராஜரைக் கொச்சைப்படுத்தி ஒரு சம்பவத்தை, தேவர் சொல்லி இருக்கிறார்.

"வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்தவர்களுக்கு, முனிசிபல் கவுன்சிலர்கள் வரவேற்புக் கொடுத்தார்கள். அந்த வரவேற்பில், காமராஜூம் கலந்து கொண்டார். யார் இந்த நாட்டு முதல் மந்திரி என்பதைத் தெரிந்து கொள்வதற்காக வெளிநாட்டுக்காரர்கள் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். அறிவாலோ, பேசும் திறத்தாலோ, அல்லது நடையுடை பாவனையாலோ பார்த்துத் தெரிந்து கொள்ள முடியவில்லை. உடனே ஒரு வெள்ளைக்காரன், "சென்னையின் முதல் மந்திரி யார்?" என்று கேட்டார். இந்த நாடார் சும்மா இருந்தால் செக்கரட்டரி சொல்லியிருப்பான் அல்லது தமிழிலே பேசியிருந்தால் தேச அவமானம் என்று நினைத்திருப்பான். தன் அறிவைக் காட்டத் தெரியாத ஒருவர், இந்த நாட்டு முதல் மந்திரியாக இருக்கிற இந்த அலங்கோலத்தினால் நாடு அவலட்சணமாகக் கேவல நிலை அடைந்தது. தமிழ்நாடு தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு அன்று அவமானப்பட்டது."
(இதே சம்பவத்தை இன்னும் விரிவாக்கி "அந்தக் கேள்விக்கு தமிழிலேயே பதிலளித்து இருக்கலாம். அப்படிச் செய்யாமல், அவருக்கு ஆங்கிலத்தில் இருக்கும் அறியாமையை எடுத்துக் காட்டுமளவில் "I is the Chief" என்று சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு ஆள் முதன்மந்திரியாக இருக்கிறான் (இருக்கிறார் அல்ல- அழுத்தம் எமது) என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள்" என சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)

ஈயத்தைப் பார்த்து இளித்த பித்தளையின் கதை இது. காமராசர், சுய சாதி வெறியுடன் ஆட்சி செய்கிறார் என்று, இந்த சாதி ஒழிப்புப் போராளி, அதே சங்கரன் கோவில் கூட்டத்திலே சொல்கிறார் "சர்க்கார் உத்தியோகங்களை அவருடைய ஆட்களுக்கே கொடுத்து வருகிறார். பிளாக் மார்க்கெட்டு வியாபாரத்தையும் அவருடைய ஆட்களே செய்து வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் மறைமுகமாக ஆதரவு கொடுத்து வருகிறார் இந்த காமராஜர். தமிழ்நாட்டின் நிர்வாகத் தரம் குறைந்து போய் விட்டது."

மார்ச் 1, 1957 இல் சிறீ வில்லிபுத்தூர் தேர்தல் கூட்டத்திலே, மக்களுக்கு தேவரய்யா நாகரீகமாக ஒரு அழைப்பு விடுக்கிறார் - "அரசியல் சரித்திரத்திலே இப்படி மானம் கெட்டவன் பிரதம மந்திரியாக இருந்தது கிடையாது. விருது நகர் வியாபாரி சமாச்சாரம் தெரிஞ்ச ரகசியமில்லே. இதை மறைக்கலாமா? இற்றைக்கு அரசியலையும் அப்படி கெடுக்கப் பார்க்கிற. பத்து வருஷமா இப்படித்தானே அரசியலிலே காலம் தள்ளினே. இனிமேலும் நடக்க விடுவோமா? எவ்வளவு சீக்கிரம் இந்த நாடார் பதவியை விட்டுப் போறாரோ அவ்வளவுக்கவ்வளவு அவருக்கு நல்லது. நாட்டுக்கும் நல்லது."

இம்மானுவேல் சேகரன் கொலைச் சதி வழக்கில் இருந்தில் தப்பிய தேவர், 1962 இல் மதுரையில் நடந்த தேர்தல் கூட்டத்தில் கூட, முதல்வர் காமராஜருக்கு ஆதியிலே சோறு போட்டது நானாக்கும் என்கிற ரேஞ்சுக்கு அல்பத்தனத்தைக் காட்டி இருக்கிறார் "நம்மால் உணவு கொடுத்து, உடை கொடுத்து, உறைவிடங் கொடுத்து வளர்க்கப்பட்ட புண்ணியவான்களாலேயே கொலைக் குற்றம் சாட்டப்பட்டேன்" என்றார்.

காமராஜரின் மதிய உணவுத் திட்டம், பல தரப்பு ஏழைக் குழந்தைகளையும் கல்விச்சாலை நோக்கி வர ஊக்கப்படுத்தியது என்பதை முந்தைய இரண்டு, மூன்று தலைமுறை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 1962லே அந்த மதிய உணவுத் திட்டத்தை தேவர் மதிப்பிடும் லட்சணம் இதுதான் "மதிய உணவுத் திட்டம் என்பதன் பெயரால், பிள்ளைகளின் படிப்பு பாழாக்கப்படுகிறது. உபாத்தியாயர்கள் மதிய உணவுத் திட்டத்திற்கு அரிசிப் பிச்சை எடுக்கப் போக நேர்வதால், பிள்ளைகள் படிப்பு நாசமாகி தேசத்தின் எதிர்காலம் அறிவுச் சூன்யத்துக்குத் தயாராகிறது."

******************
இமானுவெல் படுகொலையும், சாதி வெறியும்:

1957 முதுகுளத்தூர் கலவரமும், அதனைத் தொடர்ந்து அரசின் முயற்சியினால் கூட்டப்பட்ட சமாதானக் கூட்டமும், அதற்கடுத்து மிகப்பெரிய சாதி வெறிப் படுகொலைகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டாக்கியது.

இந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?' எனும் உணர்வில், தேவர் உட்காராமல் நின்று கொண்டிருந்தார். (சட்ட சபையில் பி எஸ் சந்தானம் பேசியதில் இருந்து) சமாதானக் கூட்டத்தில் தலித்களின் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முன்கை எடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கைஎழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தலித்களின் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் தேவர்.

"என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா? உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா?" எனச் சொல்லி, தேவர் கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க போலீசார், கீழத்தூவல் ஊருக்குள் நுழைந்தபோது, போலீசாருக்கும், அங்கிருந்த மறவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, போலீசின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உடனே எதிர்க்கட்சிகள் காமராஜ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தன.

அத்தீர்மான விவாதத்தின்போது, அமைச்சர் பக்தவச்சலம் தாக்கல் செய்த அறிக்கையில் தேவர் அவர்கள் இம்மானுவேலைக் குறித்து என்ன பேசினார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அது - "(சமாதான) மகாநாட்டிலிருந்து வெளியே வரும்போது சிறீ முத்துராமலிங்கத்தேவர், இம்மானுவேல் போன்ற பள்ளன் கூட எதிர்த்துப் பேசும்படியாக விட்டு விட்டீர்களே! என்று தம் ஆதரவாளர்களைக் கடிந்து கொண்டார்". கடிந்து பேசிய அக்கோபமே, இம்மானுவேலை வெட்டிப் போட்டது.

அதனை அடுத்து மூண்ட கலவரத்தின்போது கொண்டலாதி எனும் ஊரில் தலித் மக்கள் குடிநீர் கோரும் கிணற்றில் மண்ணெண்ணெய்யும், மனித மலமும் கொட்டப்பட்டன. தேவமார்கள் தன் சாதி மக்களை அடையாளம் கண்டு கொள்ள மஞ்சள் வேட்டி அணிந்து கொண்டு வேல் கம்புடன் போருக்கு செல்வது போன்று கும்பலாய் சென்று தலித்களின் வீடுகளையும், வைக்கோல் போர்களையும் கொழுத்தினர். 8 ஊர்களில் பெண்களைக் கற்பழித்தனர். பல ஊர்களில் தலித் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக விடப்பட்டனர்.

இது சமயம், தேவர், மதுரை கோரிப்பாளையத்தில் தற்போது அவரின் சிலை அமைந்திருக்கும் இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை விளக்கிய அரசுக் குறிப்பு (நாள் 28/09/1957) கூறுவதாவது:- "ராமநாதபுரம் கலெக்டர் முதுகுளத்தூரில் 10.09.1957 அன்று கூட்டிய அமைதி மாநாட்டில் முத்துராமலிங்கத்தேவரும் கலந்து கொண்டார். ஹரிஜனங்கள் சார்பில் அந்த மாநாட்டில் பேசிய இம்மானுவேல் என்பவரது தலைமை குறித்து அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கேள்வி எழுப்பினார். அந்த மாநாட்டில் தமக்கு இணையான அளவில் ஓர் ஹரிஜன் முன்வரிசைக்கு வந்து பேசியது தம்மை அவமதித்ததாகும் என்று அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கருதினார். இம்மானுவேல் அந்த அளவுக்கு முக்கியத்துவம் அடையுமாறு நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள்? என்றும், தமக்கு நேர்ந்த இந்த பகிரங்க அவமானம் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் முத்துராமலிங்கத் தேவர் மாநாட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, தமது சீடர்களைக் கேட்டார். அதற்கு அடுத்த தினமே, முத்துராமலிங்கத் தேவரின் சீடர்கள் அடங்கிய ஒரு கும்பல் இம்மானுவேலை மறைந்திருந்து தாக்கிக் கொலை செய்தது. "முத்துராமலிங்கத் தேவருக்குச் சவால் விடுவதற்கு உனக்கு என்ன தைரியம்? என்று கொலையாளிகளில் ஒருவர் இம்மானுவேலை வெட்டியபோது கேட்டார்."
(தலித்களுக்குத் தாம்தான் தலைவர் என்றும், தானே பல தலித்களுக்கு உதவி செய்திருப்பதாகவும், இம்மானுவேலை அவர்களின் தலைவராகத் தன்னால் ஏற்க இயலாதென்றும் தேவர், அக்கூட்டத்தில் கூறி இருந்தார். சாதி இந்து மனதில் ஆண்டாண்டு காலமாய் வேரோடிய சாதி வெறிதான் தலித்தின் தலைமைத்துவத்தை ஏற்க மறுக்கிறது. இதே போன்று தான், வட்ட மேஜை மாநாட்டில் அம்பேத்கரை, தீண்டப்படாதவர்களின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாதென்று காந்தி வாதிட்டார். சென்ற சட்டசபைத் தேர்தலில், திமுகவின் சாதி இந்துக்கள், கூட்டணியில் இருந்த தலித் கட்சியினரைத் தோற்கடித்தனர்.)

இம்மானுவேல் கொலை வழக்கில் பெருமாள் பீட்டர் என்பவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. அப்போது 88 வயதை எட்டியிருந்த பேரையூரைச் சேர்ந்த அவரின் சரித்திரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசில் வெளிவந்துள்ளது.

நீதிமன்ற விசாரணையில் பீட்டர், தேவருக்கு எதிராக சாட்சி சொன்னார் "ஒரு ஹரிஜன இளைஞர் நம்மை எதிர்த்துப் பேச விட்டு விட்டீர்களே! நீங்கள் மறவர்களா? என்று தமது ஆதரவாளர்களிடம் முத்துராமலிங்கத் தேவர் கூறியதை நான் கேட்டேன்" என்றார் அவர்.

கீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டில் 5 மறவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, காமராஜர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தது. அத்தீர்மானத்தின் மீதான விவாதம், தேவரின் பல பரிமாணங்களை சட்டசபைக் குறிப்பேடுகளில் பதிய வைத்துள்ளது. இனி, சட்டமன்றக் குறிப்பேடுகள் பேசட்டும்.
உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் 26 அக்டோ பர் 1957 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து:
"..The Government received petitions alleging several cases of lawlessness as a result of the inflamatory speeches by Sri.Muthuramalinga Thevar, inciting his followers to harass Nadars and Harijans...."

கலவரத்தை நிறுத்திட கூட்டப்பட்ட சமாதான மாநாடு பற்றி அந்த அறிக்கை பின்வருமாறு சொன்னது:
"Recognized leaders of the different communities were invited to attend this Conference. It is on record, Sir, that Sri Muthuramalinga Thevar who attended the Conference questioned the leadership of one Sri Emmanuel, Leader of the Local Depressed Classes League, who was representing the Harijans, Sri Thevar is reported to have asked Emmanuel whether he could pose as a Leader of the same stature as Sri Thevar, and whether his assurances on behalf of the Harijans were worth having."

"It is also learnt, Sir, that while coming out of the Conference, Sri Muthuramalinga Thevar chided his followers for allowing even Pallans like Emmanuel to talk back to him. The very next day, Sri Emmanuel was brutally murdered at Paramakudi."

முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஜாதிக் கலகத்தை விதைக்க வெறியூட்டும் பேச்சை எங்கெல்லாம் தேவர் பேசினார் என்பதை அவ்வறிக்கை பட்டியலிட்டது - இவ்வாறு: "On 16th September 1957 addressing a public meeting at Vadakkampatti, Sri Thevar refered to the communal strife raging in Mudukulathur and Paramakudi areas. Obviously the reference was to the incidents which had occured at Arunkulam, Keelathooval, Veerambal, Ilanjambur, Irulandipatti and Sandakottai between 10th and 16th September 1957".

கீழத்தூவலில் இம்மானுவேலைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்கப்போன போலீசாருடன் மோதிய மறவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைப் பற்றி விசாரிக்க அனுப்பப்பட்ட எஸ்.வெங்கடேஸ்வரன் I.C.S. முன்பு ஆஜராக வந்த மக்களை மிரட்டும் வகையில் தேவர், தனது காரினை விசாரணை நடந்த இடத்துக்கெதிரில் நிறுத்தி வைத்து அந்தக் காரிலே அவர் இருந்த செயலையும் பக்தவச்சலத்தின் அறிக்கை அம்மணமாக்கியது.

"In connection with the enquiry by Sri. S. Venkateswaran I.C.S. into the Police firing at keelathooval village through Sri Thevar had orally announced that he and his party would not take part in the enquiry, he seated himself in a car at the entrance of the building where the enquiry was held. This had the effect of preventing witness coming forward to tender evidence which might clash with Sri. Thevar's contentions."

திமுக உறுப்பினர் டாக்டர் சத்தியவாணிமுத்து அம்மையாரின் பேச்சில், 1937 தேர்தலில், ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரான ராமநாதபுரம் அரசரை எதிர்த்து நின்றபோது தனக்கு வாக்களிக்காத ஹரிஜனங்களுக்கு அவர் (தேவர்) செய்த பயங்கரக் கொடுமைகள் குறித்தும், அதற்காக அவர் மீது மதுரை அடிஷனல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்த விசாரணையும் வெளிப்பட்டது. டெபுடி தாசில்தார் சிதம்பரம் முதலியாரின் கால் வெட்டப்பட்டதும், சப்-மாஜிஸ்திரேட் ஒருவர் கொல்லப்பட்டதும் தேவரின் தூண்டுதலால் நடந்தது என்பதும் சட்டமன்ற விவாதத்தின்போது வெளியானது.

திமுக எம் எல் ஏ அண்ணாதுரை பேசும்போது 'முத்துராமலிங்கத் தேவர் 1933ஆம் வருஷத்திலிருந்தே பாண்டிய மண்டலத்தில் சாதித் துவேஷம் வளர்க்கக் கூடிய வகையில் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்' எனக் குறிப்பிட்டார்.

முதுகுளத்தூர் கலவரத்தில் ஆதிக்க சாதி வெறி தேவர்களிடம், வெட்டுப்பட்டு சாகும்போது கூட தலித்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் அளவிற்கு சாதி வெறி உச்சத்திற்குப் போய் இருந்தது. கலவரத்தில் வெட்டுப்பட்டு சாகப்போகும் சமயத்தில் முத்துராமன் சேர்வை என்ற மறவரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது. ஒரு மனிதன் சாகும்போது சொல்லும் வார்த்தைகள் பொதுவாக உண்மையாக இருக்கும் என்பது உலகத்தாரிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. முத்துராமன் சேர்வையின் மரண வாக்குமூலத்தை அன்றைய உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் வெளியிட்டார் " நான் ஒரு அரிஜன். அரிஜன வீட்டை நானே கொளுத்தினேன்". அந்த நபர் செத்த பிறகு, பிணத்தை வாங்க வந்தவர்களோ மறவர்கள். இவ்வாறெல்லாம் சாகும்போது கூட ஒருவன், தலித்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் படி, சாதி வெறியேற்றிவிடும் அளவிற்கு அவர்களின் அன்றைய தலைவர் இருந்தார்.

முதுகுளத்தூர் கலவரம் ஆரம்பமாகும் முன்,முத்துராமலிங்கத் தேவர், தன் சாதி மக்களிடம், "தேவர்கள் தேவர் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டுமென்றும்","நாடார் கடைகளைப் புறக்கணிக்க வேண்டுமென்றும்" கூறி இருந்தார். இப் பேச்சு, ராம.கோபாலன் வெறியேற்றிவிடும் "இந்துக்கள், இந்துக் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டும்" எனும் பேச்சுடன் மிகச் சரியாகப் பொருந்துகிறது.

**********************
கேப்பை, நெய், கேனைப்பயல்கள் மற்றும் தேவர்:

இரண்டாம் உலகப் போரில் மர்மமான முறையில் மாண்டுபோன நேதாஜியை, 'அவர் சாகவில்லை, மறைவாய் வாழ்கிறார்' என்று கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வதந்தி ஒன்று மக்களிடையே பரவி இருந்தது. அதனை ஊதி ஊதிப் பெருக்கி விட்டவர்களில் தேவரும் ஒருவர். தாம், 1950 இல் கொரியப் போரின்போது கொரியா சென்றிருந்ததாகவும் அப்போது நேதாஜியை சந்தித்ததாகவும் கூறிவந்தார். வட தென் கொரியப் போரில் நேதாஜி பங்கெடுத்ததாகவும், தேவரும் அப்போரில் ராணுவப் பயிற்சி எடுத்ததாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவருடைய பேச்சுக்கள் பல இடங்களில், எதைச் சொன்னாலும் மக்கள் நம்பி விடுவார்கள் எனும் அதீத நம்பிக்கையால் வெளிப்பட்டிருக்கும்.

உதாரணமாக ஒரு கூட்டத்தில் தேவர் "வரும் அக்டோ பர் 28 அன்று யாம் செந்திலாண்டவருடன் சேவற்கொடியேற்றி, வேல் கைப்பிடித்து, மயிலாசனத்தில் வானத்தில் தரிசனம் கொடுப்போம். அப்பொழுது, சென்னை செண்ட் ஜார்ஜ் கோட்டையில் குண்டு வீசி, காமராஜரைக் கைது செய்வோம். பின்னர், டில்லி செங்கோட்டையில் குண்டு வீசி, நேருவைக் கைது செய்வோம்" என்று பேசியதையும்,

"இதோ 50 லட்சம் பேர் கொண்ட படையுடன் நேதாஜி வருகிறார்" என்றும், "திபெத்தில் நேதாஜி நுழைந்து விட்டார்" என்றும்,
"நேபாளில் சுதந்திர சேனை", "சிங்கியங்கில் நேதாஜி" என்றெல்லாம் அளந்து வந்ததையும் என்.ஆர்.தியாக ராஜன் எனும் எம் எல் ஏ சட்டசபையில் பேசி இருக்கிறார்.

"மடியில் அணு குண்டு(??) வைத்திருப்பதாகவும்", "மூன்றாம் உலக யுத்தத்தை முதுகுளத்தூரில் ஆரம்பிப்பேன்(!!!)" என்றும் மேடையில் முழங்கிய தேவரின் பல சவடால்கள் விநோதமாய் இருக்கும்.

"மாக்னெட் நோஸ் (காந்தக் கருவி) ஒன்றை வைத்து சமுத்திரத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் பனிக்கட்டி ஆக்கி விட முடியும், அதனால் கப்பல்கள் எல்லாம் அங்கங்கே ஸ்தம்பித்துப் போய்விடும் , இதன் மூலம் இங்கிலாந்து அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளை எல்லாம் நாம் பிடித்து விடலாம்" என்றும் சொன்ன தேவர், இப்படியாப்பட்ட மாக்னெட் நோசை, தன் மடியில் கட்டி வைத்திருப்பதாகவும் சொன்னதுதான் விசேசம்.

இம்மாபெரும் தலைவர், பல முறை மக்களால் பயம் கலந்த பக்தியுடன் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்யப்படுவதை எதிர்த்தவாறுதான் இருந்து வந்துள்ளார்.

காமராஜரின் காலகட்டத்தில் பட்டி தொட்டி எல்லாம் பள்ளிக்கூடங்கள் பெருகியபோது "பள்ளிக்கூடம் எல்லாம் வந்தா எல்லா சாதிப்பயலுகளும் படித்து விட்டு, டவுனுக்குப் போயி இங்கிலீஷ் படித்து விட்டு, நம் ஜாதி ஆட்களுக்கு மரியாதை தராமல் இருப்பார்கள்" என யூகித்து, பள்ளிகள் வருவதை எதிர்த்து வந்தார்.

சட்ட மன்ற உறுப்பினர் சிதம்பர பாரதியின் சட்டமன்ற உரை "அங்கே ரோடு வசதியைப் பெறுவதற்கு முயற்சி செய்யலாம் என்று கூறினால், "இல்லை. ரோடு வேண்டாம். ரோடு வந்தால் ரொம்ப ஆபத்து. நாங்கள் ஏதாவது கோபத்தில் சண்டையிட்டு அடித்துக் கொள்வோம். உடனே போலீசில் புகார் கொடுக்க மாட்டோ ம். பிறகு 4,5 நாட்கள் ஆனவுடன், நாங்களே பஞ்சாயத்து பண்ணிக் கொள்வோம். ஆகவே ரோடு வந்தால் ரொம்ப ஆபத்தாகிவிடும்" என்று தேவரின் ஆதரவாளர்கள் சொல்லியதிலிருந்தே, அவர் தொகுதியில் நடைபெற்ற வளர்ச்சிப் பணியின் யோக்யதை தெரிந்திருக்கும்.

*****************
இந்துத்துவத்திற்க்கு விளக்கு பிடித்த கதை:

தேவரின் பல கருத்துக்கள், இந்து மதவெறிக் கட்சியினரின் கருத்துக்களோடு ஒத்துப் போகின்றன.
"அரசியலுக்கு வரும்போது 'அரசியல் வேறு மதம் வேறு. இரண்டையும் சேர்த்துக் குழப்புகிறார்கள்' என்ற பேச்சு நடைபெறுகிறது. அரசியல் இல்லாமல் மதமில்லை. மதமில்லாமல் அரசியல் இல்லை. மதம் இல்லாத தேசம், வேரில்லாத மரம் போல. எந்தக் காற்றிலும் விழுந்து விடும்" என்றும் "இங்கே மதமும், அரசியலும் சேரக் கூடாதென்று சொல்லி இங்கிலீஷை காலேஜில் சொல்லிக் கொடுத்துக் கெடுத்தான்" என்றும் 1957 காஞ்சிபுரம் கூட்டத்தில் கூறி இருக்கிறார்.

"சுதந்திரம் வாங்கிய பிற்பாடு நாட்டில் ஏற்பட்ட நிலைமை என்ன? பாகிஸ்தானிலே மாட்டிக் கொண்ட 1 1/2 கோடி மக்களின் கதி என்ன ஆயிற்று? அவர்கள் நடுச்சந்தியிலே நிறுத்தப்பட்டார்களே? சொத்தை இழந்து, வாழ்க்கை நிலைமை இழந்து, மனைவி மக்களை இழந்து அலறித் துடித்தார்களே? அதற்காக இங்கே இருக்கும் முஸ்லீம்களைப் பாகிஸ்தான் ஓடு என்று ஆச்சாரியார் கோஷ்டி (சூதறிஞர் ராஜாஜி-அழுத்தம் எமது)யால் விரட்ட முடிந்ததா? அல்லது அவர்களைத்தான் நீங்கள் "பாகிஸ்தான் பிரஜை போ" என்று சொல்ல முடிந்ததா?" என்று பால் தாக்கரே, அத்வானி போன்ற பாசிஸ்ட்கள் போன்று தேவர், சட்டசபையில் 1952 ஜூலை 3 ல் பேசி இருக்கிறார்.

கோல்வால்கர், இந்து மகாசபைத்தலைவர் மதுரைக்கு வந்தபோது அவருக்கு பணமுடிப்புக் கொடுத்து சிறப்பு செய்ய ஏற்பாட்டை செய்தவர், முத்துராமலிங்கத் தேவர் ஆவார். அதற்காக அவர் சொன்ன காரணம்-"ஹிந்து மதத்தின் விரோதி மகாத்மா காந்தி. ஆதலால் தான் நான் கோல்வால்கர் அவர்களுக்குப் பண முடிப்புக் கொடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இசைந்தேன்."

காங்கிரசு உறுப்பினர் சுவாமி சகஜானந்தாவின் பேச்சில் வீராம்பல் ஊரில் நடந்த இரட்டைக் கொலைக்கான (கொல்லப்பட்டவர்கள் தலித்கள்) வேறொரு காரணம் வெளிப்பட்டது."வீராம்பலில் எப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடந்திருக்கின்றன? அங்கே இரண்டு ஹரிஜனப் பையன்கள், தாங்கள் முஸ்லீம் மதத்தில் சேர வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே அவர்களுடைய பிரசிடெண்டையும் செக்ரெட்டரியையும் கொலை செய்து விட்டார்கள்".

****************
சட்டசபை உறுப்பினர் டி.எஸ்.ராமச்சந்திரன் (1957-62ல் உறுப்பினர்) முதுகுளத்தூர் பிராந்தியத்தில் பயணம் செய்தபோது, மறவர் குலப் பெண்கள், அவரிடம் கேட்ட கேள்வி "ஹரிஜனங்கள் முக்குலத்தாரைப் பெண் கேட்க வந்தார்களாமே? பெண் கேட்க வருவதற்கு அத்தனை துணிச்சலா?" என்பதாய் இருந்தது. இது அப்போதைய கலவரத்தில் பொது மக்களிடையே பரப்பப்பட்ட வதந்திகளில் முக்கியமான ஒன்று. அச்சம்பவத்திற்கு இது வரை ஆதாரம் ஏதும் கிடைக்காதபோதும், ஜாதி இந்து மக்கள் அவ்வதந்தியை இன்னமும் எளிதில் நம்பி உணர்ச்சி வசப்பட்டு, சாதிக் கலவரத்திற்கு தயாராகி விடுகின்றனர்.

அப்படி என்ன வதந்தி அது?
தேவரும், இம்மானுவேல் சேகரும், சமாதானக் கூட்டத்திற்கு வந்தபோது, இம்மானுவே, தேவர் முன்னால் சிகெரெட் பிடித்தபிடி, கால்மேல் கால் போட்டபடி சரி சமமாய் அமர்ந்தாராம். உடனே தேவரய்யாவுக்கு ஜிவ்வென்று கோபம் ஏறி "..க்காளி.. இவனுக எல்லாம் நம்ம கூட சரி சமமா வந்திட்டானுங்க.." என்றாராம். இது இம்மானுவேல் காதில் விழுந்ததும், அவரது ஆதரவாளர்களுடன் பழம்,பூவுடன் சென்று தலித் பையன் ஒருவருக்கு, தேவர் வீட்டுப் பெண்ணைக் கேட்டனராம். காரணம், தேவரே, இம்மானுவேலிடம், மைத்துனனிடம் பேசிடக்கூடிய வசைச்சொல்லான '..க்காளி' என்பதனைப் பேசினாரே என்பதாம்.

கலவரத்தில் எண்ணெய் வார்க்க இந்த வதந்தி பயன்பட்டது.

இதே வதந்தி, சிற்சில மாறுபாடுகளுடன், 1989ல் போடி நாயக்கனூர் பகுதியில் ஜான் பாண்டியனை மையமாக வைத்துப் பரப்பப்பட்டு, கலவரத்தை விசிறி விட்டது.
****************
சமீப காலகட்டங்களில் தேர்தல் கமிஷன் பல கெடுபிடிகளைப் போட்டு, பிரச்சாரத்தை இரவு பத்து மணியுடன் நிறுத்திடச் சொல்லியதும், சில கட்சி வேட்பாளர்கள், பத்து மணிக்கு மேல் பேசுவதை நிறுத்தி விட்டு வெறுமனே கைகளைக் கூப்பி வணங்குவதுடன் சென்று விடுகின்றனர். இதெல்லாம் ஏதோ புதுமை என்று எண்ணி இருக்கையில், 1952 தேர்தலுக்கு முன்பிருந்தே தேவர் இவ்வாறுதான் செய்திருக்கிறார். ஆனால் தேவரைப் பேச விடாமல் தடுத்தது தேர்தல் கமிஷன் அல்ல. அரசாங்கம். இவர் வாய் திறந்து பேசினாலே சாதி மோதல்தான் உருவானது. எனவே அரசு இவருக்கு வாய்ப்பூட்டு போட்டது.
ஆனால் தேவர், 1957 முதுகுளத்தூர் கலவரத்தின்போதும், 'மவுனமாகக் கைகூப்பும் முறையை' கலவரத்தை தூண்டிவிட பயன்படுத்தினார். அறிக்கை ஏதின்றி வெறுமனே தேவரின் கைகூப்பிய முழுப்படம் ஒன்றை 'தினமணி' என்றெல்லாம் விளம்பரமாய்ப் பிரசுரித்ததோ, அன்றெல்லாம், கலவரம் உக்கிரம் பெற்றுள்ளது.

இங்கு எண்ணற்ற ஆதாரங்களை தேவரின் சாதி வெறிப்போக்கிற்கான சான்றாகக் காட்டினாலும் தேவர் அபிமானிகள், 'தேவர் தனக்கு சொந்தமாய் இருந்த எக்கச்சக்கமான ஏக்கர் நிலங்களை தலித்களுக்கு எழுதிக் கொடுத்தவர்' என்று சொல்வது வழக்கமே. அவ்வாறு தேவர் நிலம் தந்தமைக்கு இருந்த உள்நோக்கத்தை அன்றைய அமைச்சர்கள் பக்தவச்சலமும், சி.சுப்பிரமணியமும் சட்டசபையில் போட்டு உடைத்துள்ளனர் 'தனக்கு விசுவாசமாய் வாலாட்டும் ஓர் அடியாள் படையை தேவர் இவ்வாறுதான் உருவாக்கினார்' என்று.

Thursday, September 1, 2011

களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும் !






அந்தந்த காலத்துக்குரிய பொது அபிலாசைகளைக் கண்டறியாத, கண்டபின் அதனை நிறைவு செய்யாத ஒரு தலைமைதனது லட்சியத்தில் வெற்றிகொண்ட ஒரு தலைமையாக இருக்கமுடியாது.ஆனால் இந்த "பொது" என்கிற விடயமானது கூர்ந்து நோக்க வேண்டிய ஒன்று. .பெரும்பான்மை அபிலாசைகளை நிறைவேற்றுதல். என்பது ஜனநாயகப் பண்பின் பிரகாரம் சரியானதாகவே பட்டாலும், அடிப்படை தர்மத்தை (ethics) நிறைவு செய்வதாகத்தான் அது இருக்குமென்றில்லை. சில பலமான கருத்துக்கள், நியாயமானதாகவும் சிறுபான்மையானதாகவும் கூட இருக்கமுடியும். எளிமையாக சொல்லப்போனால், நாம் இன்று நம்பி ஏற்றுக்கொண்டுள்ள அத்தனையும் உண்மையாகவும் நியாயமாகவும் தான் இருக்குமென்பதில்லை. அது அப்போதைய நேரத்தின் இன்பமூட்டுபவையாகவும், சுயகளிப்பூட்டுபவையாகவும் இருக்கும். மாறாக நாம் மறுக்கின்ற பல விடயங்கள் நமக்கு கசப்பானவையாகவும் உண்மையாகவும் இருக்க முடியும்.



இந்த இடத்தில் மீண்டும் பொது என்கிற விடயத்துக்கு வருவோம். பெரும்போக்காக (mainstream) இருக்கிற அனைத்தும் நிச்சயம் உண்மையாகவும், சரியாகவும்தான் இருக்கும் என்றில்லை. மாறாக சிறுபான்மை கருத்துக்களாக இருப்பதால் அது பிழையாகத்தான் இருக்குமென்றில்லை.பலகோடி ஆண்டுகளாகப் புரையோடிப்போன மரபொன்றினை சமீப காலத்தேயே பகுத்தறிவுவாதத்தால் குறுகியகாலத்தில் வெற்றி பெறச்செய்துவிடமுடியாது என்பதை நாம் அனைவரும் உணர்வோம்.ஒரு இனத்தின் சமூக கட்டமைப்பானது, வரலாற்று ரீதியில் பல மரபுகளையும், அந்த மரபோடிணைந்த பல்வேறு புனைவுக் கூறுகளையும், மூட நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், மாயைகள், புனைவுகள், திரிபுகள் என்பன கலாசார பண்பாட்டு படிமங்கள் மீது குந்திக்கொண்டு தான் இருக்கும். இது நமது தமிழ் மரபில் மட்டுமல்ல உலகின் பல இனங்களின் மரபிலும் காணக்கிடைக்கின்ற கூறுகள்.சமூக உருவாக்கமானது, பல கட்டங்களைத் தாண்டி சமூகமாற்றங்களை கால வளர்ச்சிக்கமைய எதிர்கொள்கிற பொழுது, இவற்றில் இருக்கின்ற பல்வேறு பிழையான கூறுகளைக்களைவதில் தான் அந்த சமூகத்தின் ஆரோக்கியமான, புரட்சிகர சமூக மாற்றத்தின் வெற்றி தங்கியிருக்கிறது.நாட்டில் நமது போராட்டமானது ஒரு தேசிய போராட்டம் என்கிற ரீதியில், தேசிய உணர்வையும், அதன் கூறுகளையும் பாதுகாப்பதிலேயே நமது தேசியவாதத்தை தக்கவைக்கலாம் என்கிற வாதத்தின் விளைவாக புரையோடிப்போயுள்ள பல பிழையான மரபுகளைத் தோளில் சுமந்தபடி நமது சமூகம் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை உளச்சுத்தியுடன் ஒப்புக்கொள்வோம்.


நம்மை வழிநடத்தும் உண்மைகள் பல நமக்குக் கசப்பானவை, நம்மால் ஜீரணிக்க முடியாதவை, நம்மை மகிழ்வூட்டடாதவை. மாறாக நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, பல பிழையான ஐதீகங்கள், மற்றும் புனைவுகள் நமக்கு களிப்பூட்டுபவையாக உள்ளன.கசப்பான உண்மைகளை விட்டுத் தப்பியோடுபவர்களாகவும், களிப்பூட்டும் பிழையான ஆதிக்க மரபுக்கூறுகளை தொடர்பவர்களாகவும் நாம் உள்ளோம். இதனை பண்பாட்டின் பேரால், கலாசாராத் தின் பேரால், தேசியத்தின் பேரால் நாம் தொடர்ந்து வருகிறோம் என்பதே யதார்த்தம்இந்த யதார்த்தத்தை உணராதவரை, இதன் மீது எமது தேடலை செய்யாதவரை, இதில் தேவையான மாற்றங்களை கொணடுவராதவரை, நமது உள்ளார்ந்த வளர்ச்சியில் மாற்றம் காணப் போவதில்தில்லை நாம். அது போல நமது அடுத்த சந்தியினரின் ஆரோக்கியமான வெற்றியையும் இது பாதிக்கச்செய்யும். இது நமது ஆரோக்கியமான சமூகமாற்றத்தில் வெற்றியையும் இறுதியில் ஒட்டுமொத்த பாதிப்பை ஏற்படுத்தும்.



ஆப்பிரிக்காவில் பெண்களுக்கு விருத்த சேதனம்


அறியாமை கலந்த கொடுமை.


ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றிலும் பெண்களுக்கு விருத்த சேதனம் செய்கின்ற பாரம்பரியம் மிக நீண்ட காலமாக நீடித்து வருகின்றது. இவர்களின் இப்பாரம்பரியம் மிகவும் கொடூரமானது. பயங்கரமானது. சுமார் 200 மில்லியன் சிறுமிகள் கத்தியின் வலியை தாங்குகின்றனர். 150 மில்லியன் வரையான சிறுமிகள் பிறப்புறுப்புச் சிதைவு என்கிற நோய்க்கு ஆளாகின்றனர். விருத்த சேதனம் செய்கின்றபோது ஆபிரிக்க நாடுகளில் மயக்க மருந்துகள், வலி நிவாரணிகள் சிறுமிகளுக்கு வழங்கப்படுகின்றமை கிடையாது.


விருத்த சேதனம் செய்கின்றமைக்கு அதி நவீன கருவியாக சாதாரண சவர அலகுதான் இங்கு பயன்படுத்தப்படுகின்றது. சோமாலியாவில் ஒரு பாரம்பரியம் இருந்து வருகின்றது. பிறப்பு உறுப்பின் மன்மதபீடம் மற்றும் இதழ்கள் ஆகியன நீக்கப்படாத பெண்கள் இங்கு திருமணம் செய்ய முடியாது. மாறாக பாவப்பட்டவர்களாக, அசுத்தமானவர்களாக நடத்தப்படுவார்கள். சிறுமிகள் வரிசையாக படுக்கப்பட்டு விருத்த சேதனம் செய்யப்படுவர். இது ஒரு பெரிய சடங்காகவே நடக்கும்.


சோமாலியாவில் நாடோடிக் குடும்பங்களைப் பொறுத்த வரை சிறுமிகளுக்கு விருத்த சேதனம் செய்கின்றமை என்பது மிகவும் செலவானது. ஆனால் இச்செலவை சிறந்த மூலதனமாகவே நாடோடிக் குடும்பங்கள் கொள்கின்றன. ஏனெனில் இச்சடங்கை செய்யாவிட்டால் வருங்காலத்தில் திருமணம் செய்து கொடுக்க முடியாது. சிறுமிகளுக்கு தாய்மார் சடங்கின் முக்கியத்துவம் குறித்து உபதேசம் செய்வார்கள் . ஆனால் இச்சடங்கின் கொடூரத்தை உண்மையில் சொல்ல மாட்டார்கள். எனவே சிறுமிகள் எப்போது இச்சடங்கு இடம்பெறும்? என்று ஆவலோடு காத்திருப்பார்கள்.

அநுபவிக்கின்றபோதுதான் கொடூரம் புரியும். உகண்டாவில் இச்சடங்கு டிசம்பர் மாதம் நடத்தப்படுகின்றது. இதனால் டிசம்பர் மாதத்தை பேரழிவு மாதம் என்று விபரம் தெரிந்த பெண்கள் இங்கு பேசிக் கொள்வார்கள். இச்சடங்கை இரத்தக் களரி என்று படித்த பெண்கள் சொல்லிக் கொள்வார்கள். அநுபவப்பட்டவர்கள் அதிபயங்கரமான வேதனை என்று வர்ணிப்பார்கள். குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு இச்சடங்கு மகிழ்ச்சியானதுதான். கூடிக் கொண்டாடுகின்றனர். மன்மத பீடம், இதழ்கள் ஆகியவற்றை அறுக்கின்றனர். யோனியின் மேற்பகுதியை நூலால் தைத்து விடுகின்றனர். சிறிய ஒரு துவாரத்தை மாத்திரம் விட்டு வைக்கின்றனர்.

உகண்டாவில் இச்செயற்பாடுகளுக்காக சவர அலகுகளை விட கத்தி, உடைந்த கண்ணாடிச் சில்லுகள் உட்பட வேறு ஆயுதங்களும் பயன்படுத்தப்படுகின்றன. பாலியல் பரவச நிலையை பெண் உணரக் கூடாது என்பதற்காகவே ஆபிரிக்க நாடுகளில் இச்சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. பாலியல் பரவச நிலையை உணர முடியாத பட்சத்தில் கணவனுக்கு பெண் விசுவாசமாக இருப்பாள் என்று நம்புகின்றனர்.

ஆனால் கிருமி நீக்கப்படாத கருவிகளைப் பயன்படுத்தி இச்சடங்கை செய்கின்றமையால் டெடனஸ், யோனி வீக்கம், சூதக வலி, ஒவ்வொரு திராட்சைப் பழம் அளவில் நீர்க் கட்டிகள் ....... போன்ற நோய்கள் ஏற்படக் கூடும். பாலியல் மீதான விருப்பம் பாதிக்கப்படக் கூடும். உடலுறவின்போது வலி ஏற்படலாம். சலக் கடுப்பு ஏற்படலாம், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரலாம். பிரசவத்தில் சிக்கல்கள் ஏற்படலாம், பிரசவத்தில் தாய் மற்றும் சேய் மரணங்கள் நேரலாம். செப்டிகேமியாகூட ஏற்படலாம்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes