நண்பனின் திருட்டு கல்யாணத்தில் சந்திக்கும் தமன்னா மீது லவ்வாகிறார் ரவி. "லவ்வை உடனே சொல்லிடாதே, எனக்கு கிக் வேணும். நல்லா அலைய வச்சு சொல்லு" என்கிற அவரது முதல் வேண்டுகோளே பைத்தியமாக்கி அலைய விடுகிறது தமன்னாவை. (எதற்கெடுத்தாலும் அவர் உச்சரிக்கும் ங்கொய்யால...வுக்கு உசுரையே கொடுக்குறான் ரசிகன்!) அடிக்கடி பொய் சொல்லும் ரவியை இனிமேல் சந்திக்கவே கூடாது என்று முடிவெடுக்கிற தமன்னா, ஷாமை கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். சும்மா போகாமல் அவரது அருமை பெருமையை எடுத்துவிட, 'இன்ட்ரஸ்ட்டிங். எனக்கும் ஒருத்தன் குடைச்சல் கொடுக்கிறான்' என்கிறார் போலீஸ் அதிகாரியான அவர். ஷாம் சொல்லும் அந்த நபர் ஜெயம் ரவிதான் என்பதும், போலீஸ் அதிகாரிகளும், கவர்மென்ட்டும் தேடுவதும் அதே ரவியைதான் என்பதும் பின்பாதி லெக் பீஸ். தலைக்கு மேல அவ்வளவு துயரத்தை வைத்துக் கொண்டு ரவி அடிக்கும் காமெடிக்கு தில்லாலங்கடி ஆகிறது தியேட்டர். முடிவில் 'தமன்னா எங்கப்பா' என்று ஏக்கத்தோடு கேட்டபடியே கலைகிறார்கள் ரசிகர்கள். முதல் சீனிலேயே ரவியின் கேரக்டரை முழுசாக உணர வைக்கிறார்கள். "....ஏன்னா எனக்கு இன்னொரு முகம் கிடையாதே" என்று அசட்டு சிரிப்பு சிரிக்கும் அவருக்குள் ஒரு ராபின் ஹ¨ட்டா? வடிவேலு, சந்தானத்துடன் இவர் அடிக்கும் லு£ட்டிக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல தமன்னாவுடன் அடிக்கிற சிரிக்கிற தமன்னாவை விட கொதிக்கிற தமன்னாவே அதிக இடங்களில் வருவதால் நமக்கும் பிசகிக் கொள்கிறது மனசு. நல்லவேளை, தமன்னாவின் காஸ்ட்யூமர் புண்ணியத்தில் கன்னாபின்னாவென்று ஏறுகிறது கிக். (இது படம் முழுக்க ரவி சொல்கிற 'அந்த' கிக் இல்லீங்...) ரவியை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காக இவர் வடிவேலுவை லவ் பண்ணுவதும், அதை அவர் சீரியசாக எடுத்துக் கொள்வதும் ஜோக் தோரணம். அதாருங்கங்க அந்த தங்கச்சி பாப்பா? காஸ்ட்யூம்ல தமன்னாவையே மிஞ்சுதே! எல்லா படத்திலேயும் வருகிற அமெரிக்க மாப்பிள்ளை ரேஞ்சுக்கு ஆகிவிடுவாரோ என்ற அச்சத்தை முதலில் ஏற்படுத்தினாலும், ஈக்குவல் ஹீரோவாக்கியிருக்கிறார்கள் ஷாமையும். (நன்றி சொல்லுங்க பாஸ் ராஜாவுக்கு) இவரது கம்பீரமும் நமக்கு புதுசாக இருக்கிறது. கன்ட்டினியூ பண்ணுங்க ராசா...
பிரபு வெயிட்டை பார்த்தாவது கொஞ்சம் வெயிட்டான ரோல் கொடுத்திருக்கலாம். ஓரத்துல வச்ச ஊறுகாயா இருந்தாலும் சுர்ருன்னுதான் போவுது ராதாரவி போர்ஷன். பக்கத்து சீட் ஆசாமி 'இப்படி யார் யாரையோ போட்டு இம்ச பண்ணுறதுக்கு பேசாம யுவன் சங்கர் ராஜாவை போட்டிருக்கலாம்' என்று அலுத்துக் கொண்டதுதான் அதிர்ச்சி. (இசை யுவனேதானாம்!) எடுத்துட்டமே என்று இடைச்செருகிய ஒரு பாடலில் செம துள்ளல். ஆனால் அது பேத்தாஸ் மூட் சீன்?! (ஏன்ங்க?) மலேசியாவுக்கே ஒரு ட்ரிப் அடிச்சுட்டு வந்த அனுபவத்தை தருகிறது பி.ராஜசேகரின் ஒளிப்பதிவு. நன்றி-விடுப்பு |



1:54 AM
Jana Master