Saturday, February 19, 2011

கிழக்கின் சுயநிர்ணயம் - 6

ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் “கொழும்பு” அரசியலை நிராகரித்து வடகிழக்கின் முலை முடுக்கு எங்கும் தமிழ் அரசியலை நுழைத்தவர் எனும் வகையில் 1956 ஆம் ஆண்டுத் தேர்தலில் சா.ஜே.வே.செல்வநாயகம் பெரு பெற்றியைப் பெற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கான தலைமையை ஏற்றார்.ஆனால் 1956 ஆம் ஆண்டு வெற்றிக்குப் பின்னர் இந்த செல்வநாயகம் எனும் தலைமையும் சரிஇ தமிழரசுக் கட்சியும் சரி நடந்துகொண்ட விதம் கடுமையான விமர்சனத்துக்குரியது. அதாவது 1957 ஆண்டு கொண்டுவரப்பட்ட நெற்காணிச் சட்டத்தினை எதிர்த்தமைஇ 1957 இல் நிறைவேற்றப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் மலையக மக்களை காட்டிக்கொடுத்து துரோகம் இழைத்தமை, 1965 ஆம் ஆண்டில் யு.என்.பி. அரசுடன் அமைச்சுப் பதவிகளுக்காக இணைந்து விலைபோனமை போன்ற வரலாற்றின் நிகழ்வுகள் இவர்களின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தப் போதுமானவை.

1965 ஆம் ஆண்டு தேர்தல் வரை தமிழரசுக்கட்சியின் “ஸ்ரண்ட்” அரசியல் வடகிழக்குப் பகுதிகளில் அதிகமாகவே களைகட்டியது. சத்தியாக்கிரகப் போராட்டம் (1961)இ தமிழரசு தபால் சேவைப் போராட்டம் (1961)இ 1964 இல் சிறிமா சாஸ்திரி ஒப்பந்த எதிர்ப்புப் போராட்டம் என்று பெரும் கலக சூழல் ஒன்றை வடகிழக்குப் பகுதிகளில் இவர்கள் ஏற்படுத்தினர். ஆனால் இவை அனைத்துமே இந்த போராட்டங்களில் மையங்கொண்டிருந்த அரசியல் கோரிக்கைகளைவிட தேர்தலை ஒட்டிய வாக்கு சேகரிப்பு நாடகங்களாகவே உண்மையில் இருந்தன. ஒவ்வொரு தேர்தலின் பின்னரும் இப்போராட்டங்கள் எல்லாம் மூட்டை கட்டப்பட்டு ஒரு மூலைக்குள் போடப்படும். அதைத்தொடர்ந்து அமைச்சு பதிவிகளுக்காகவும்இ தாம் சார்ந்த வர்க்கத்தினரின் சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் யு.என்.பி. அரசுடன் கொஞ்சுக் குலாவி வந்ததன் மூலம் இதனை அறிந்துகொள்ள முடியும். 1965 இல் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியை வைத்து யு.என்.பி. இன் சார்பில் அரசமைக்கவிருந்த டட்லி சேனநாயக்காவுடன் தமது சலுகைகளை உறுதித் படுத்திக்கொள்வதற்காக இரவிரவாக ரகசியப் பேச்சுக்களில் தமிழ் தலைவர்கள் ஈடுபட்டனர். இதன்பலனாக கொழும்பில் செனட்டராக வாழ்ந்து வந்த திருச்செல்வம் என்பவரை அமைச்சராக்குவதற்காக டட்லி சேனநாயக்காவிடம் இருந்து உறுதி வாங்கிக் கொண்டனர். அதற்கு கைமாறாக யு.என்.பி. அரசு அமைவதற்கு தமிழரசுக் கட்சி எம.பிக்கள் ஆதரவு தெரிவிப்பதற்கு உறுதி கொடுத்தனர். கேவலம் தமது ஆதரவு சக்திகாளாய் இருந்த கொழும்பு கனவான் ஒருவரை அமைச்சராக்குவதற்காக தமிழ் மக்களை உணர்ச்சி பீறிட வைத்து தெருவில் இறக்கி சத்தியாக்கிரகம் செய்தவர்கள் அனைத்தையும் கைவிட்டனர்.

அதுவரைகாலமும் இவர்கள் சொல்லிவந்த கிழக்குமாகாண விவசாயிகளது குடியேற்றப் பிரச்சனையும் கிடப்பிலே போட்டனர். இதற்கு அப்பால் கிழக்கில் வாழ்ந்த லட்சக்கணக்கான விவசாயிகளின் நீர்ப்பாசனப் பிரச்சனைகளையோஇ நீண்ட கடல்பரப்பினைக் கொண்ட கிழக்கு மாகாண கடல் தொழிலாளிகளின் மீன்பிடித்துறைசார்ந்த பிரச்சனைகளையோ பின்தங்கிய நிலையில் இருந்த கிழக்கு மகாண தமிழ் முஸ்லிம் மக்களின் கல்விநிலை குறித்த அக்கறைகளையோ இவர்கள் தமது அரசியல் கட்சியின் கொள்கைகளுக்கான அடிப்படை விசயங்களாகக் கொள்ளவில்லை. மக்களின் தேவைகளை முன்னிறுத்தி அதற்காகப் போராடுவதினூடாக தலைமை வகிக்கும் வாய்ப்பினை பெற்றுக்கொள்வதைவிட ஹர்த்தால்இ வன்முறைஇ கிளர்ச்சி போன்ற குறுக்கு வழியினூடு தலைவர்கள் ஆவதிலேயே தமிழரசுக்கட்சியினர் முனைப்புக் காட்டினர்.1965 – 1970 ஆம் ஆண்டுவரை எவ்வித சலனமும் இன்றி அமைதியாக யு.என்.பி. ஆட்சியில் பங்கெடுத்துவந்த தமிழரசுக்கட்சியினர் 1970 ஆண்டில் கிடைத்த தோல்வியைத் தொடர்ந்தே இந்த வன்முறை வழிகளைத் திட்டமிட்ட ரீதியில் அதிகரித்து வந்திருப்பதனைக் காணலாம்.

மேற்படி எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஊடாக 1977 ஆம் ஆண்டுத் தேர்தல்வரை அரச பிரதிநிதிகளையும் அரசபடைகளையும் எதிர்ப்பதுதான் தமிழ் மக்களின் கடமை எனும் புதிய மரபொன்றினை தமிழர்விடுதலைக் கூட்டணி தோற்றுவித்தது. அதுமட்டுமன்றி சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்த தமிழ் பிரதிநிதிகளை தமிழ் மக்களின் துரோகி என பட்டம் சூட்டிவிடுவது என்பதினையும் வழக்கமாகக்கொண்டனர். இதனூடாக தமது அரசியல் எதிரிகளை எதிர்கொண்டு வெல்லுவது என்பதைவிட அழித்து வெல்லும் குறுக்கு வழியை நோக்கி தமிழர்விடுதலைக் கூட்டணியினர் தமது கவனத்தைத் திருப்பினர். அமைச்சர்களுக்கு கறுப்புக்கொடி காட்டுதல்இ குடியரசுத் தினத்தை பகிஸ்கரித்தல் என்பதெல்லாம் தனி ஈழம் ஒன்றை அமைப்பதற்கான முன்னோடி நிகழ்வுகளாக மக்கள் உணரவைக்கப்பட்டனர். ஆனால் தமிழரசுக்கட்சியினர் யு.என்.பி. ஆட்சியில் இருந்த 1965 – 1970 காலப்பகுதியில் தாமும் அந்த அரசில் பங்கெடுத்திருந்தனர். இந்தவேளைகளில் இத்தகைய அரச எதிர்ப்பு நடவடிக்கைகள் ஒன்றில் கூட ஈடுபடாதிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்பட்டதை ஏன் அதை பகிஸ்கரிக்கக் கோரவில்லை? ஏன் ஒரு சந்தர்ப்பத்தில் கூட கிழக்கிலங்கையில் தமிழரசுக்கட்சிக்காக உழைத்த தலைவர்களுக்கு அமைச்சுப்பதவி பெறும் அந்த வாய்ப்புகள் வழங்கப்படவில்லை? 1952 ஆம் ஆண்டுத் தேர்தலில் வடமாகாணத்தில் ஒருவரைத் தவிர பெரும்தலைவர்கள் எல்லோரும் படுதோல்வி அடைந்த நிலையில் திருகோணமலையில் தமிழரசுக்கட்சிக்கு பெரு வெற்றியீட்டிக் கொடுத்த இராஜவரோதயம் அவர்களுக்கு என் அந்த வாய்ப்புக்கொடுக்கப்படவில்லை? செனட்சபை உறுப்பினர்களான மட்டக்களப்பு கல்விமான் கனகரெட்னம் அவர்களுக்கு ஏன் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. கொழும்புச் சீமான் திருச்செல்வத்திற்கு பெற்றுக்கொடுக்கப்ட்ட உள்ளுராட்சி பதவி 1956 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்களின் தனிப்பெரும் தலைவனாக தொடர்ந்து வெற்றியீட்டி வந்த சொல்லின் செல்வர் இராஜதுரைக்கு ஏன் வழங்கப்பட்டிருக்கக் கூடாது? தமிழரசுக்கட்சியின் தலைமை கதிரையைக்கூட அலங்கரித்த பெருந்தலைவரும் தனித்தமிழ் தொகுதியான பட்டிருப்பின் பிரதிநிதியுமான மு.இராசமாணிக்கம் அவர்கள் அமைச்சுப் பதவிக்கு தகுதி அற்றவரா? என்கின்ற கேள்விகள் அன்று இல்லாவிடினும் இன்று கிழக்கிலங்கை மக்களிடையே கிளறப்படத் தொடங்கியுள்ளன. தமிழ் தமிழ் என்று கிழக்கிலங்கை மக்களை ஏமாற்றிக்கொண்டு அவர்களின் ஆதரவினால் வருகின்ற எல்லாவித அரசியல் இலாபங்களையும் வடக்குக்குள் மட்டுமே சுருட்டிக்கொள்ளும் தமிழரசுக்கட்சியினரின் கபடத்தனங்களை இன்று கிழக்கிலங்கை மக்கள் உணரத் தலைப்பட்டுள்ளார்கள்.

தொடரும்....

0 கருத்துரைகள்:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes