ளை வழங்குவதன் நோக்கமாகவே இக்கடிதம் அமைகின்றதென்பதை முதற்கண் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். திரைப்பட இயக்குனரான நீங்கள் ஈழத் தமிழர்களதும், உலகத்தமிழர்களதும் பற்றாளனாகவும், பாதுகவலனாகவும் உலாவி வருகின்றீர்கள். அதுமட்டுமா! பிரபாகரனின் ‘வாரிசாகவும’ தந்தை பெரியாரின் பேரனாகவும் கூட உங்களை அடையாளப்படுத்தி வருகின்றீர்கள். தென்இந்தியத் தமிழர்களையும், குறிப்பாக அங்குள்ள தலித் தமிழர்களையும் அவர்களது துன்பம் துயரங்களை பொருட்படுத்தாது, நீங்கள் ஈழத் தமிழர்களதும்,உலகத் தமிழர்களதும் விடுதலைக்காக போராடுவதை வாழ்நாள்‘பணியாகவும், ம்…….ஒரு தொழிலாகவும்’ செய்து வருவதை கண்டு நான் மெய்சிலிர்த்துப்போனேன். தமிழ்ஈழத்தை அமைப்பதன் ஊடாக உலகத்தமிழரையே விடுவிக்கும் பிரபாகரனின் அபிலாசைகளை நிறைவேற்றிக் காட்டுகின்றேன் பார்… என நீங்கள் உரத்துக் கதறும் ஓசை தேனாக பாய்ந்து உறைகின்றது எனது காதில். அனைத்துச் சிங்களவர்களையும் அழித்தொழிப்பதிலும் நீங்கள் மிக ஆவலாக உள்ளதோடு, சர்வதேசம் இராஜபக்சவை தூக்கில்போடவேண்டும் என்பதற்காகவும் போராடிவருகின்றீர்கள். அதே நேரம் ‘மரணதண்டனைக்கு’ எதிராகவும் நீங்கள் போராடிவருகின்றீர்கள். மனித உரிமை குறித்த உங்களது நிலைப்பாடு மிக அலாதியானது, அற்புதமானது. அதேவேளையில் இந்திய மத்திய அரசுக் கொள்கையிலும் காங்கிரசை அழிப்பதற்காகவும், ஒழிப்பதற்காகவும் பாடுபட்டு வருகின்றீர்கள். அதேநேரம் முஸ்லிம் மக்களின் படுகொலைகளுக்கு காரணமான குஜராத் முதல்வர் மோடியை போற்றுகிறீர்கள் பாராட்டுகிறீர்கள். அப்படியானபல் காங்கிரசைவிட பாராதீய ஜனதாக்கட்சி புனிதமானதா? தலித் மக்களுக்கு அபயமளிக்குமா? பெரியாரின் பேரன் என்கிறீர்களே இது நியாயமா? மத்தியில் அமையும் அரசுகளால் தமிழர்களுக்கு விடிவுவராது என்கிறீர்கள்! அப்படியாயின் உங்கள் தலைமையில் தனித் தமிழ் நாடு கேட்டுப் போராடலாம் தானே? இன்று ஜெயலலிதா அம்மையாருக்கு விழா எடுத்துவரும் நீங்கள் தனித் தமிழ்நாட்டை முன்மொழிந்தால் ஜெயலலிதா அம்மையார் அதற்கு வழிமொழிவார்தானே! என்ன தயக்கம்! சீமான் அண்ணா நீங்கள் இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்ஈழம் பெற்றுக் கொடுப்பதிலேயே ஊன் உறக்கம் இன்றி பாடுபட்டு உழைத்து வருவகின்றீர்கள். தமிழ் நாட்டுத் தமிழர்களில் ஒருபகுதியான தலித்மக்களுக்கு நிகளும் கொடுமைகள் ஏன் உங்கள் காதுக்கெட்டவில்லை? திருநெல்வேலியில் உள்ளுராட்சி தலைவர் கிருஸ்ணவேணி ஒரு தலித் என்பதாலும்,பெண்என்பதாலுமே உயர் சாதியினரால் மிக மோசமானமுறையில் தாக்கப்பட்டார். தற்போது பரமக்குடியில் ஆறு தலித்துக்கள் மிககொடூரமான வகையில் கொல்லப்பட்டுள்ளனர். தலித்துக்கள் தமிழ்ஈழத்திற்காக கொல்லப்பட்டால் (தீக்குளிப்பு) அதை வைத்து நீங்கள் தமிழ்ஈழ வியாபாரம் நடத்துகின்றீர்கள். தலித்துக்கள் தமது உரிமைக்காக போராடும்போது கொல்லப்பட்டால் அச்செய்திகள் உங்கள் காதுகளுக்கு எட்டுவதில்லையே ஏன்? உங்களுக்கு இருப்பது தமிழ்ஈழப்பற்றா உயர்சாதி அபிமானமா? தேவர் சாதியினரால் தலித் மக்கள் தொடர்ச்சியாக ஒடுக்குதலுக்குள்ளாகி வரும்போதுதானே சீமான் அண்ணா நீங்கள் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலையிட்டு மரியாதைசெய்து வருகின்றீர்கள். முதலில உங்கட ‘நாம் தமிழர் கட்சியின்’ கொள்கை, கோட்பாடுகளை வெளியிடுங்கோ அதுக்க எங்க பெரியார் இருக்கிறார் என்பதை நான் கொஞ்சம் பார்க்க வேணும். சீமான் அண்ணா நீங்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவராகவும், தமிழ்நாடடிலே வாழ்ந்துகொண்டும் எமது இனம், எமது போராட்டம், எமது மக்கள் என்றெல்லாம் ஈழத் தமிழர்கள் குறித்தே பேசிவருகின்றீர்கள். உங்கள் பேச்சில் வெறும் உணர்ச்சி மட்டுமே வெளிப்படுகின்றது. இது மிகவும் ஆபத்தானது. 1970 களில் இலங்கையில் ஈழத் தமிழர் தலைமைகள் பேசிய பேச்சுக்களும் உணர்ச்சியூட்டல்களிலும் முளைத்தவர்தான் பிரபாகரன். அவரது வழிகாட்டலின் விளைவு பல லட்சமக்களின் அழிவிற்கும் காரணமானது.ஒரு திரைப்படத்தின் சாதனையில் கூட்டம் சேர்ப்பதைவிட உணர்ச்சியூட்டி கூட்டம் சேர்ப்பது இலகுவானதென்பதை எமது மக்களின் அழிவுகளிலிருந்து நீஙகள்; கற்றுக் கொண்டீர்கள். சீமான் அண்ணா தமிழ் நாட்டிலும் தமிழர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் பல்வேறு விடுதலை தேவையாகவும்,அவசியமாகவும் உள்ளதே அது ஏன் உங்கள் கண்ணுக்கும், மனதிற்கும், உணர்விற்கும் எட்டுதில்லை.நான் அண்மையில் தமிழ் நாடு சென்று வந்ததால் அங்கு தமிழ்நாட்டுத் தமிழ் பேசும் மக்களின் துயரங்களும் துன்பங்களும் வீதிதோறும் பரவிக்கிடப்பதை காணக் கூடியதாக இருந்தது. தமிழ் நாட்டில் பல்லாயிரம பிரச்சனைகள் குவிந்து கிடக்கின்றது.அதை முதலில் கவனியுங்கள் அவற்றை தீர்க்க முயற்சி செய்யுங்கள் சென்னையை சுற்றி வந்தால் ஒவ்வொரு மனிதனின் வியர்வையிலிருந்து கசிவது கூவம் நதியின் நாற்றமாக இருக்கின்றது. தமழ்ஈழக்கொடி உயர்த்திக் கோசம் போடும் உங்கள் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மூலமாக ஒரு வாரத்தில் கூவம் நதியை சுத்தம் செய்து விடலாம். அப்படிச்செய்தீர்களானால் சிலைகளைத்தேடி நீங்கள் மாலை போடத் தேவையில்லை. உங்களுக்கே தமிழ் நாட்டு மக்கள் சிலை வைப்பார்கள். காலம் பூராவும் உங்கள் பெயர் நிலைக்குமல்லவா? சென்னையில் ஒவ்வொரு தெருவையும் கடக்கும்போது ஒவ்வொரு இராணுவ முகாம்களை கடப்பது போன்ற உணர்வே எனக்கிருந்தது. வீடு வசதியற்ற தமிழ்நாட்டுத் தமிழ் மக்கள் வீதியிலும், தெருவோரங்களிலும் குடும்பம் நடத்துகின்றார்கள். இவ்வாறு தமிழ் நாட்டுத் தமிழ் பேசும் மக்களின் துன்பங்கள் குவிந்து கிடக்கின்றது. தமிழ் பேசும் தலித்மக்களுக்கான அரசியல் உரிமைகள் பெறவேண்டிய தேவைகளும் மிக அவசியமாக படவில்லையா பெரியாரின் பேரனான உங்களுக்கு? உங்கள் இளைஞர் படைகளைக் கொண்டு இவைகளை நிவர்த்திசெய்ய முயற்சியுங்கள். இலங்கை மக்கள் இரத்தம் சிந்தி சிதைந்து, அழிந்தது போதும். அவர்கள் அமைதியாக வாழ விரும்புகின்றார்கள். அவர்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தயவசெய்து நடந்து கொள்ளாதீர்கள். இலங்கையில் தமிழ் ஈழம் கேட்டவர்களே இன்று புலம் பெயர்ந்த நாடுகளில் அதிகமாக வாழ்ந்து வருகின்றார்கள். அதில் கணிசமானவர்கள் புலிகளின் பொருளாதார பினாமிகள்.அவர்களுக்குத்தான் இலங்கையில் தொடர்ந்து அமைதியின்மையும் யுத்தமும் தேவைப்படுகின்றது. அவர்களின் ஊதுகுழல்தான் நீங்கள் என்பது நான் உட்பட எல்லோரும் அறிந்த உண்மை. ஊதுகுழலான உங்களுக்கு யுத்தத்தில் சிக்குண்ட ஏழை,எளிய மக்களின் துயரம் புரியாது. நீங்கள் உண்மையான மனித இனப்பற்றுள்ளவர் என்றால் உங்கள் நாட்டுக்குள்ளேயே விடுதலை தேவைப்படும் மக்களுக்காக குரல் கொடுங்கள். காஸ்மீர் மக்களுக்காக போராடுங்கள். தெலுங்கான மக்களுக்காக போராடுங்கள், ஆண்டாண்டு காலமாக ஒடுக்குமுறைக்குள்ளாகி வரும் தலித் மக்களுக்காக போராடுங்கள் இந்திய விரிவாக்க கொள்கைக்கு எதிராக போராடுங்கள். இமையம் தொட்டு ஈழம் வரை இந்து நாடு அமைப்போம் என கோசமிடும் பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிராக போராடுங்கள். தயவு செய்து இனவாதம் பேசுவதை நிறுத்துங்கள். இனவாதம் பேசிப்பேசி அப்பாவிகளை தீக்குளிக்கவைச்சு அதில் நீங்கள் தொடர்ந்து குளிர்காய வேண்டாம், உங்களுடைய தொடர்ச்சியான இனவாதக்கருத்தியலால் தமிழ்நாட்டிலும் ஒரு ‘சிவசேனையை’ உருவாக்கும் சூழலை ஏற்படுத்திவிடாதீகள் எனவும் மிக அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். இப்படிக்கு உங்கள் உண்மையான மனித நேயத்தை மிக ஆவலுடன் எதிர்பார்க்கும்… தேவதாசன்
ஈழத்தமிழர்கள் சார்ந்து உங்களது செயற்பாடுகளை தொடர்ந்து அவதானித்து வருபவன் என்ற வகையில் இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுகின்றேன். உங்களிடம் சில சந்தேகங்களை கேட்பதோடு, சில ஆலோசனைக



9:59 PM
Jana Master
0 கருத்துரைகள்:
Post a Comment