Wednesday, January 26, 2011

கிழக்கின் சுயநிர்ணயம் - part 3

இந்நிலையில்தான் நாடுபிடித்துவந்த அன்னியரின் வருகை எமது நாட்டினுடைய அரசியலில் மட்டுமல்ல சமூக பொருளாதார கட்டமைப்புகளிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. அவையனைத்தும் முழுஅளவிலான இலங்கையருக்கு பாதகமான அம்சங்களையே பெருமளவில் ஏற்படுத்தியிருந்தாலும் யாழ்ப்பாணத்தவருக்கு இந்த அன்னியரின் வருகை பெரும் வரப்பிரசாதமாய் அமைந்தது. காலணித்துவ ஆட்சியாளர்களின் நவீன அரசியல் செயற்பாடுகளும் நீதி, நிர்வாக சேவைகளும் பெருந்தோட்டத் துறையினூடு விரிவடைந்த போக்குவரத்துஇ தபால்சேவை போன்றவைகளும் அறிமுகப்படுத்திய உத்தியோகங்கள் யாழ்ப்பாண மக்களை கவர்ந்தது. பெருந்தோட்டத் துறையின் மேற்பார்வையார்களாகவும் நீதிநிர்வாகத் துறையின் அடிமட்ட உதவியாளர்களாகவும் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு கைகட்டி சேவை புரிந்த இவர்கள் காலப்போக்கில் நிர்வாகத் தேர்ச்சி பெற்ற உத்தியோகத்தர்களாகவும்இ அரச அதிகாரிகளாகவும்இ ஆசிரியர்களாகவும் இலங்கை எங்கும் வியாபித்தனர். இந்த போக்கு ஆட்சியாளர்களிடம் சம்பளம் பெறும் கணிசமான ஒரு கூட்டத்தினராக யாழ்ப்பாணத்தவரை அடையாளம் காட்டியது.

இந்த உத்தியோகத்தர்களின் சமூக பரம்பலே யாழ்ப்பாணத்தில் ஒரு மத்தியதர வர்க்கத்தின் தோற்றத்துக்கு வித்திட்டது. வெள்ளை ஆதிக்கத்தின் பாதுகாவலராக தம் வாழ்வைத் தொடங்கிய இவ்வர்க்கத்தினரே படிப்படியாக இலங்கையருக்கான அரசியல் போக்குகளை நிர்ணயிப்பவர்களாகவும் உருவாகினர்.படிப்பறிவு, பணம், அந்தஸ்து என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இலங்கை மக்களுக்கான அரசியல் கோபுரத்தை வெள்ளயைர் அத்திவாரம் இட்டனர். ஆகவேதான் இந்த அத்திவாரம் ஆனது யாழ்ப்பாணத்திலேயே கட்டப்பட முடிந்தது. அங்கிருந்து உருவான அரசியல் வாதிகளே இலங்கையின் முதல் தலைமுறை அரசியல் தலைவர்களாகவும் இலங்கை அரசியலில் போக்கை தீர்மானிக்கும் சக்தி பெற்றவர்களாகவும் பரிணமித்தனர். இலங்கையின் சிங்கள மக்கள் இடத்திலும் இதுபோன்றதொரு மத்தியதரவர்க்கம் உஇருவாகியிருந்தது. அங்கு ராஜ பரம்பரையினர் என தம்மைச் சொல்லிக்கொள்ளும் கொவிகம எனப்படுகின்ற ஒருவித சமூக அந்தஸ்துகொண்ட பிரிவினரே மேற்படி மத்தியதர வர்க்கமாக உருவாகியிருந்தனர். இவர்கள் சிங்களவராய் இருந்தபோமுதும் கராவஇ சாலக என்கின்ற சாதிப்பிரிவினரான சிங்களவரை தம்மிலும் கீழானவர்களாகவே கணித்து வந்தனர்.

இந்த வகையில் தமிழ் – சிங்கள உயர்வர்க்க கூட்டின் பிரதிநிதியான சேர்.பொன்.இராமநாதன் எனும் யாழ்ப்பாணத்தவர் வெள்ளையரிடையே பெருமதிப்பைப் பெற்றிருந்தார். ஆங்கிலேயருக்கு மிக நெருங்கிய விசுவாசியான இவர் 1911 ம் ஆண்டு படித்த இலங்கையருக்கான முதல் செனட்சபை உறுப்பினர் ஆகும் வாய்ப்பை பெற்றார். கல்வியறிவு பெற்றவர்களுக்கும் சொத்துரிமைகொண்ட தனவந்தர்களுக்கு மட்டுமே அந்நிலையில் வாக்களிக்கும் தகுதி இருந்தது. ஆதலால் மொத்த சனத்தொகையில் சுமார் 4 வீதமான மேல்தட்டு வர்க்கத்தினர் மட்டுமே இந்த வாய்ப்பை பெற்றிருந்தனர். இவ்வகையில் அரசியல் பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் அதிகாரம் கொண்டவர்கள் தமிழ் – சிங்கள வேறுபாடுகள் எதையும் கொண்டிருக்கவில்லை. இனவேறுபாடுகளை தாண்டிய உயர்தட்டு வர்க்க ஒற்றுமையே இந்த இரு சமூகங்களின் பிரதிநிதிகளிடம் காணப்பட்டது. 1911ம் ஆண்டு தேர்வில் சேர்.பொன்.இராமநாதன் தெரிவு செய்யப்பட்டமை பற்றி அவ்வேளை கவனர் ஆக இருந்த சேர்.கியு.கிளிபார்ட் கூறுகையில் “படித்த இலங்கையரை தேர்ந்தெடுப்பதில் தமிழர் சிங்களவர் என்ற இனவேறுபாடு இல்லாமல் தமிழர் உயர் சாதியினரும் சிங்கள உயர் சாதியினரும் சேர்ந்த ஓர் உயர்சாதியினரையே தெரிவுதெய்தார்கள்” என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1917 ம் ஆண்டு தேர்விலும் இது மேலும் உறுதியானது கரையோர சிங்களவரான மாக்கஸ் பெர்னாண்டோ என்பவரை விடுத்து தமிழராய் ஆனபோதும் வெள்ளாள சமூகத்தை சேர்ந்தவரான சேர்.பொன்.இராமநாதனையே சிங்களவரும் சேர்ந்து தெரிவுசெய்தனர். 1919 இல் உருவான இலங்கை தேசிய காங்கிரசின் தலைவராக யாழ்ப்பாண தமிழரான சேர்.பொன்.அருணாசலம் என்பவர் தெரிவானார். ஆனாலும் இன்னிலையை சுதந்திரத்தைநோக்கிய சீர்திருத்தங்களும்இ மாற்றங்களும் தொடர்ந்து அனுமதிக்கவில்லை. இலங்கை முழுக்க தமது ஆதிக்கத்தை பேணிவந்த யாழ்ப்பாண மத்தியவர்க்கத்தினரின் எதிர்கால அந்தஸ்தை அரசியல் மாற்றங்கள் கேள்விக்குறியாக்கியது. அதுவரைகாலமும் இலங்கையின் அரசியல்இ சமூகஇ பொருளாதார கட்டுமானங்களில் நிரம்பியிருந்த யாழ்ப்பாணத்தவரின் செல்வாக்குகளை தொடர்ந்துவந்த காலங்களிலும் காப்பாற்றி கொள்ளும் எத்தனிப்போடு அன்றைய அதிகார ருசி கொண்ட தலைமைகள் முன்னெடுத்த நகர்வுகளே இலங்கை தமிழர்களின் வாழ்வை சீர்குலைத்தது. இத்தலைமைகள் அரசியல் விழிப்புணர்வுகள் பரந்துபட்ட மக்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாயிருந்தனர். அதற்காகவே வெள்ளையாட்சியாளர்களின் அரசியல் சீர்திருத்த நடவடிக்கைகளை கடுமையாக எதிர்க்கவும் துணிந்தனர். குறிப்பாக அரசியல் சீர்திருத்தத்திற்கான டொனமூர் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையில் எல்லா பிரசைகளுக்கும் தமது தலைமைகளை தெரிவுசெய்யும் வாய்ப்பை வழங்கும் “சர்வசனவாக்குரிமை” வழங்கப்படுவதை கடுமையாக எதிர்த்து விளக்கமளித்தனர். சர்வனவாக்குரிமை வழங்கப்பட்டால் அது “இந்து மத வாழ்க்கை முறைக்கு பழிகேடு விளைவிக்கும் என்றும்”கும்பலாட்சிக்கு வழிவகுக்கும்” என்றும் வாதிட்டார் சேர்.பொன்.இராமநாதன். அதாவது யாழ்ப்பாணத்திலுள்ள உயர்சாதிப்பிரிவை தவிர மற்றயோரும் கிழக்கிலிருக்கும் முஸ்லிம்கள்இ முக்குகர்கள்இ மற்றும் சூத்திரர்கள் அனைவருமே சமூகத்தின் கீழ்நிலையில் இருக்க வேண்டுமென்பதற்காக பகிரங்கமாக கீழ்தரமான கருத்துகளை தெரிவித்தார் இவர். கிழக்கிலங்கை மக்களெல்லோரும் அரசியலுக்கு வந்தால் அதுவே கும்பலாட்சிக்கு வழிவகுக்கும் என்பதே அவரது வாதமாயிருந்தது. ஆனபோதும் வெள்ளையர்களது நிர்வாகம் இவ்விதவாதங்களை கவனத்தில் கொள்ளாது சர்வனவாக்குரிமை வழங்குவதை உறுதிசெய்தது. சர்வசனவாக்குரிமை விரைவில் வழங்கப்படப்போகுதென்ற எதிர்பார்ப்புகள் உறுதியானதும் இதனால் தமது தலைமைகளை காப்பாற்றி கொள்வதற்காக தமிழ்மக்களை ஏமாற்றி தம்வசம் இழுக்கும் சூது விளையாட்டுக்களில் ஈடுபடத்தயாராகினர் யாழ்ப்பாணத் தலைமைகள்.

to be continued..

Monday, January 24, 2011

காவலன்



'காவலன் காதலன் ஆனால்..?!’ -மூன்றே வார்த்தைதான் கதை!

ராஜ்கிரண் மேல் மகா அபிமானம் வைத்திருக்கிறார் விஜய். கொலை மிரட்டல் காரணமாக ராஜ்கிரணின் மகள் அசினுக்கு பாடிகார்டாகச் செல்கிறார். விஜய்யின் 24X7 கெடுபிடியில் வெந்து தவிக்கிறார் அசின். விஜய்யை ரூட் மாற்றிவிடுவதற்காக செல்போனில் குரலை மாற்றிக் காதல் பேசுகிறார். ஒரு கட்டத்தில் செல்போன் காதலி மீது விஜய் வைத்துஇருக்கும் காதலில் நெகிழ்ந்து அவரிடம் தான் யார் என்கிற உண்மையைச் சொல்லத் தயாராகிறார் அசின். 'அசின் விஜய்யோடு ஊரைவிட்டு ஓடப் போகிறார்’ என்று கசியும் தகவலால் இருவரையும் சிறைப்படுத்துகிறார் ராஜ்கிரண். ரயில் நிலையத்தில் காதலி காத்திருப்பாள் என்று விஜய் பரிதவிக்க ராஜ்கிரண் அவரை நம்ப மறுக்கிறார். 'நான் இங்கு உங்களுடன்தான் இருப்பேன்!’ என்று ராஜ்கிரணைச் சமாதானப்படுத்தி விஜய்யை அனுப்பிவைக்கிறார் அசின். ரயில் நிலையத்தில் விஜய் காத்திருக்க காதலி வராவிட்டால் விஜய்யைக் கொல்வதற்கு ராஜ்கிரணின் ஆட்கள் காத்திருக்கிறார்கள். அசின் வந்தாரா? விஜய் உயிர் பிழைத்தாரா என்பது க்ளைமாக்ஸ்.

மலையாள 'பாடிகார்டை’த் தமிழ் பேச வைத்திருக்கிறார் இயக்குநர் சித்திக். பெரிய இடத்துப் பெண் மேல் காதல் கொண்டு எஜமானின் கோபம் சம்பாதிக் கும் பழைய காவலன் கதைதான். அதில் செல் காதல் கொஞ்சல்ஸை அப்டேட் செய்துகொடுத்திருக்கிறார் சித்திக்.

பில்ட் - அப் ஓப்பனிங்இ சூப்பர்மேன் சூரத்தனம் பஞ்ச் பராக்கிரமம் ஆக்ஷன் அவதாரம் என எந்த அலட்டல் மிரட்டலும் இல்லாத 'ஸோ ஸாஃப்ட்’ விஜய் சினிமா! காதலியை முதன்முதல் சந்திக்கப் போகும் தவிப்பில் பூங்கா இருக்கையில் இடறி விழுந்து சமாளிப்பதும் 'எனக்காக வேண்டிக்கங்க!’ என்று கலங்கிய கண்களுமாக... வெல்கம் விஜய்!

கணக்குக்கு இல்லாமல் கணக்காகக் கதையை நகர்த்தும் ஹீரோயினாக... அசின். கலாட்டா காதல் கலக்கம் என கியர் மாற்றி நடிப்பதில் நல்ல தேர்ச்சி. படம் நெடுக வராவிட்டாலும் தலை காட்டும் சமயம் எல்லாம் தியேட்டரை அதிரச் செய்கிறார் வடிவேலு. 'கண்ணதாஸா... யேசுதாஸா?’ 'பாரதியாரா... பாரதிராஜாவா..? பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆயிட்டாரு!’ என்று சொதப்பும் காட்சிகளில் அக்மார்க் வடிவேலு வெடி. தனது காப்பிரைட் கம்பீரத்துடன் வளைய வருவதைத் தவிர ராஜ்கிரணுக்கு வேறு பெரிய வேலை இல்லை.

க்ளைமாக்ஸ் உண்மையிலேயே அதிரவைக்கும் திருப்பம்தான். ஆனால் அதைத் தவிரஇ மற்ற அனைத்தும் நாம் கணிக்கும் திசையிலேயே பயணிக் கிறது. விஜய்க்கு நேரிலேயே பார்க்காதஇ அதிகம் இம்ப்ரஸ் பண்ணாத செல்போன் காதலி மேல் அத்தனை தீவிரமாகக் காதல் தோன்றுவது ஏன்? டூப் லெட்டராகவே இருந்தாலும் போலீஸுக்கு வந்த உத்தரவில் விஜய் பாடிகார்டாகச் செல்வது கல்லூரிக் குள் வளைய வருவது போன்ற லாஜிக் மீறல்களை காமெடி கலாட்டாக்களுக்காகப் பொறுத்துக்கொள்ள வேண்டும்போல!

ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு வானவில் வண்ணங்களை படம் முழுக்கப் பரப்பி இருக்கிறது. பின்னணி இசைக்கு அழுத்தம் சேர்த்த வித்யாசாகர் பாடல்களுக்கு இன்னும் விட்டமின் சேர்த்திருக்கலாம்!

இண்டஸ்ட்ரியில் விஜய்யின் ஸ்டேட்டஸுக்குப் பாதுகாப்பு அளித்திருக்கிறான் இந்தக் 'காவலன்’!

Saturday, January 15, 2011

கிழக்கின் சுயநிர்ணயம் 2

இலங்கையில் 1017 ம் ஆண்டு தொடங்கிய சோழராட்சி 1070 ல் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் 11ம்இ 12ம் நூற்றாண்டுகளில் கிழக்கிலங்கை உட்பட்ட உருகுணை ராச்சியத்தின் கீழ் இருந்த பெரும்பகுதிகள் பொலநறுவையிலிருந்து ஆண்ட பராக்கிரமபாகுவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. இந்த பராக்கிரமபாகுவின் ஆட்சி காலத்தில் மட்டக்களப்பில் குறுநிலமன்னனாக தினசிங்கன் எனும் தமிழ் மன்னன் ஆண்டு கொண்டிருந்தான். எனினும் அவனும் அவனது தமிழ் குடிகளும் சமண சமயத்தை பின்பற்றுவோராயிருந்தனர்(5). கரவாகு பகுதியாகிய கல்முனையை ரகுகுமான் ராஜா என்பவர் ஆண்டுகொண்டிருந்தார். இந்த தினசிங்கனது ஆட்சி மீண்டும் இந்தியாவிலிருந்து படையெடுத்து வந்த கலிங்க மாகோன் என்பவரால் தோற்கடிக்கப்பட்டது(6).

இந்த கலிங்க மாகோனே விஜயகாலிங்க சக்கரவர்த்தி எனும் பெயரில் இலங்கை முழுவதையும் ஆண்டான் அவ்வேளைகளில் பழுகாமம் அவனது கிழக்கு பிரதேசத்தின் உபராசதானியாக இருந்தது. கரவாகு பகுதிக்கு திஸ்ஸ அலிபோடி ஆளும் அதிகாரம் பெற்ற இராச பிரதானியாக இருதுள்ளார்(7).
1225 ல் தொடங்கிய மாகோனது ஆட்சி 1256 ல் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் முன்பு போலவே கிழக்கிலங்கை உருகுணை ராச்சியத்தின் கீழ் வந்தது(8). இந்நிலை ஐரோப்பியரது காலணித்துவ ஆட்சி தொடங்கும்வரை நீடித்ததை நாம் காணலாம். இந்த வரலாற்று குறிப்புகளின் பின்னணியின் இடையிடையே ஏற்பட்ட சோழஇ பாண்டியஇ ஆட்சிகாலங்களை தவிர சுமார் 2500 வருடகாலத்தின் பெரும் பகுதியில் கிழக்கிலங்கையானது தீகவாவிஇ மாகமம்இ கண்டி போன்ற தலைநகரங்களை கொண்டிருந்த உருகுணை ராச்சியத்துடன் இணைந்தே காணப்பட்டது. காலாகாலமாக கிழக்கில் வாழ்ந்த மக்கள் தமிழையே பேசினாலும் பௌத்தமும்இ சைவமும்இ இஸ்லாமும்இ ஏன் சமணமும் கூட அவர்களால் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. இனமத வேறுபாடுகள் அவர்களை கூறுபோட்டிருக்கவில்லை. உருகுணையின் கீழ் இருந்த போதும் அம்மக்கள் தத்தம் தனித்துவங்களை பேணும் வகையிலான வன்னிமைகள் என்றழைக்கப்ட்ட சுயராச்சிய பிரிவுகளை பேணியே வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பாக நோக்கற்பாலது.

காலணித்துவத்தின் வருகை

இலங்கையில் காலணித்துவ ஆட்சி ஏற்பட்டபோது மூன்றுவகை அரசுகள் காணப்பட்டிருந்தன. கோட்டை ராட்சியம்இ கண்டி ராட்சியம்இ யாழ்ப்பாண ராட்சியம் எனும் அரசுகளே அவையாகும். 1505 இல் முதன் முதலாக இலங்கையில் காலடி வைத்தவர்கள் போர்த்துக்கேயராகும். இவர்கள் 1597 இல் கோட்டை ராட்சியத்தை தமது முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அதன் பின்னர் 1619 இல் யாழ்பபாண ராட்சியத்தையும் போர்த்கேயர் தோற்கடித்து கைப்பற்றினர். இந்த வேளைகளில் கொட்டியாரம் என்றழைக்கப்பட்ட திருகோணமலைஇ மட்டக்களப்புஇ பழுகாகமம்இ பாணமை போன்ற நால்வகை வன்னிமைகள் கண்டிராட்சியத்துடன் இணைந்தே இருந்தன. இறுதியாக 1815 இல் ஆங்கிலேயேர் கண்டிராட்சியத்தை வீழ்த்தும் வரை தமது சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காமல் கண்டி ராட்சியத்தின் பிரசைகள் கடுமையாகப் போராடி வந்தனர்.

1818 ல் ஆங்கிலேயருக்கு எதிராக கண்டியில் ஏற்பட்ட கிளர்ச்சியானது ஆங்கிலேயர் தமது ஆட்சியமைப்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை அவர்களுக்கு உணர்த்தியது. கண்டி பிரசைகளின் தேசிய உணர்வானது ஆங்கிலேயருக்கு அச்சமூட்டியது. எனவேதான் எதிர்கால பாதுகாப்பினை உறுதிபடுத்தி கொள்வதற்காக கண்டி ராச்சியத்தை கூறு போடும் முயற்சியில் ஆங்கிலேயர் இறங்கினர். 1832 இல் கோல்புறுக் – கமறோன் குழுவினரின் ஆலோசனையின் பெயரில் இலங்கை 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மாகாணங்கள் எனும் புதிய நிர்வாக அலகு உருவாக்கப்பட்டது. இதன்படி கண்டிராச்சியத்தின் தூரப்பகுதிகளான (திசாவைகள்) அனுராதபுரத்தின் வடக்கேயிருந்த சில பகுதிகள் மற்றும் மன்னார்இ காளிதேசம் என்று அழைக்கப்பட்டு நீண்டதொரு வரலாற்று காலத்தில் தனியரசாய் திகழ்ந்த முல்லைத்தீவு போன்றவற்றை யாழ்ப்பாண இராச்சியத்துடன் இணைத்து வடமாகாணமாகவும்இ கண்டிராச்சியத்தின் தீகவாவி அடங்கிய மட்டக்களப்பு திருகோணமலை பகுதிகளை ஒருங்கிணைத்து கிழக்கு மாகாணமாகவும் புதிய அலகுகள் உருவாக்கப்பட்டன(9).

ஆட்சி அதிகார ரீதியாக மட்டும் அல்ல கிழக்கு மாகாண மக்கள் தமக்கான சமூகவியல் அம்சங்களிலும் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அங்கு வாழும் மக்களில் இருந்தும் அதிகளவில் வேறுபட்டே நிற்கிறார்கள் என்பதுவும் மிகமுக்கியமானதொன்றாகும்.
கிழக்கு மாகாண மக்கள் தமது கலைஇ கலாசாரம்இ பண்பாடுஇ சடங்கு சம்பிரதாயங்கள்இ மற்றும் உணவு முறைகளிலும் கூட தமக்கான தனித்துவமான பழக்கவழக்கங்களை கொண்டிருக்கிறார்கள். இவைகளில் பெரும்பாலானவை ஆரியகலப்பற்றவையாகவும் தாய்வழி உரிமைகளை பேணுபவையாகவும்இ மற்றும் சாதிவாரியாக தீண்டாமை இறுக்கமற்றவையாகவும் காணப்படுகின்றது. இப்பண்புகள் ஒரு சமூகவியல் பார்வையில் முற்போக்கு அம்சங்கள் நிறைந்தனவாகும். இந்த அம்சங்களடங்கிய சமூக ஒழுங்குகளையும் அவைசார்ந்த பண்பாட்டு கூறுகளையும் பேணிபாதுகாப்பதற்காக கிழக்குமாகாணம் தனக்கான தேசவழமைகளை காலா காலமாக கைக்கொண்டு வந்திருக்கின்றது. அந்தவகையில் 1876 ல் ஊ.டீசுஐவுழு என்பவரால் கிழக்கில் நிலவிய இந்த தேசவழமைகள் ஒரு நூலாக தொகுக்கப்பட்டு ‘முக்குவர் சட்டம்’ எனும் அந்தஸ்தை பெற்றது(10).

யாழ்ப்பாண மக்களிடையே காணப்பட்ட இத்தகைய தேசவழமைகள் எப்படி 1707 இல் தொகுக்கப்பட்டு யாழ்ப்பாண தேசவழமை சட்டம் எனும்(11) சட்ட அந்தஸ்தை பெற்றனவோ அதேபோன்று கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் அல்லாத தமிழர்களுக்குரியனவாக இந்த முக்குவர் சட்டமும் ஆங்கிலேயரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பேசுகின்ற மொழியில் தமிழர்களாகவே இருந்தபோதும் கிழக்கும் வடக்கும் ஒரே விதமான சட்டத்திட்டங்களால் கட்டுப்படுத்தப்பட முடியாதவையாக உள்ளன என்பதை இங்கு கூடியுள்ள யாவருக்கும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன். இதே போன்றே கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கும் அவர்களது மத நம்பிக்கையின் அடிப்படையிலமைந்த இஸ்லாமிய சரியா சட்டகோவை இலங்கையில் காலணித்துவ ஆட்சியாளர்களினாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை நம் எல்லோரது கவனத்திலும் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes