Sunday, September 19, 2010

தமிழ் மக்களுடன் அதிகாரத்தினை பகிர்வதன் மூலமே அவர்களை நாட்டின் மீது பற்றுக்கொண்டவர்களாக மாற்ற முடியும்

வெளிநாடுகளில் சென்று வாழ்பவர்கள். (தமிழர்கள்)
இத்தகைய யதார்த்தத்தை இனங்கண்டு ஒரு
ஏற்பாட்டுக்கு முன்வரல் வேண்டும். அவர்களில்
சிலர் தாம் வாழும் நாடுகளில் பல்நாட்டு தமிழீழ
அரசாங்கம் ஒன்றை அமைக்க உலகளாவிய தேர்தல்களை
நடத்திவருகின்றனர். அதன் மூலம் அவர்கள்
தெரியப்படும் பதவிகளுக்கு அவர்கள் வாழும்
இடங்களிலேயே ஒரு அந்தஸ்தினை வழங்குவதாக
இருக்கும்.ஆனால் இலங்கையில் வாழும்
தமிழ் மக்களுக்கு அவ்வாறான நடவடிக்கைகளினால்
எதுவித நன்மையும் உதவியும் கிடைக்கப்போவதில்லை

அரசினால் யாப்பிற்கு கொண்டுவரப்பட்ட பதினெட்டாவது திருத்தம்
ஒரு திரும்புகட்ட சம்பவமாகும். அரசாங்கம் பாராளுமன்றத்தில்
வசதியான முறையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையினை
சுவீகரித்துக் கொண்டுள்ளது.எதிரணியிலிருக்கும் பாராளுமன்ற
உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பக்கம் நோக்கிப் பயணிக்கும்
எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றது. இதனால்
அரசாங்கம் தான் ஸ்திரத்தன்மையுடனும் பலத்துடனும் இருப்பதாக
நம்பிக்கை கொண்டிருக்கப் போதிய காரணங்கள் காணப்படுகின்றன.
அதற்கு இதுவரை இலங்கையில் இருந்த அரசாங்கங்களில் மாத்திரமன்றி
இனிமேலும் கூட இப்போதைய அரசாங்கத்தினைப் போன்று பலமிக்கதான
அரசாங்கம் வரப்போவதில்லை. இப்போது செயல்நோக்கமுடைய
வினைதிட்டமுடைய ஒரு எதிரணியும் இல்லை.அரசாங்கத்துடன்
முரண்படாதுஇ அதனுடன் இணைந்து செயல்படாதவர்கள் எல்லோரையும்
ஒதுக்கிப் புறக்கணிக்கவும் படலாம் என்பது இன்னுமோர் நிலைவரம்.

அரசாங்கத்தின் அங்கத்தவர்கள்இ இன்னும்கூட சில யாப்பு சீர்திருத்தங்கள்
ஒழுங்குமுறையில் வரவிருப்பதாகக் கூறிவருகின்றனர்.எதிர்காலத்தில்
வரக்கூடிய யாப்பு சீர்திருத்தங்களில் தேர்தல் முறைகளில் இப்போதிருக்கும்
விகிதாசார பிரதிநிதித்துவ முறையினை மாற்றிஒரு கலப்பு முறையில்
அதாவது விகிதாசார பிரதிநிதித்துவ முறையினையும் முன்னர் போன்ற
சாதாரண பெரும்பான்மை முறையினையும் இணைத்து கலப்பான ஒரு முறை அறிமுகப்படுத்தப்படலாம். இன்னுமோர் சீர்திருத்தம் முன்னர் இனப்பிரச்சினைக்கு
தீர்வு காண்பதற்காக அதிகார பரவலாக்கத்தினை ஏற்படுத்துவதற்காக
கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தம் தொடர்பானதாக இருக்கலாம்.
13ஆவது திருத்தச்சட்டத்தின் சில சரத்துகள் அது கொண்டுவரப்பட்ட
1987 ஆம் ஆண்டு முதலாகவே முரண்பாடுகளைக் கொண்டதாக காணப்பட்டது.
மாகாணசபை முறையானது அதற்கு எதிரான இரண்டு கருத்துகள் காரணமாக
விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்தது.

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பரவலாக்கம் செய்வது இனரீதியான
சமூகங்களுக்கிடையே அதிகார பரவலாக்கத்தினை உறுதி செய்வதற்கான
வழிமுறை என ஒரு சிலர் நம்புகின்றனர். வடமாகாணத்திலும்இகிழக்குமாகாணத்திலும்
தமிழ்இ முஸ்லிம் வாக்காளர்களே பெரும்பான்மையினராக உள்ளனர். அந்த
மாகாணசபைகளுக்கு அதிகார பரவலாக்கம் செய்வதால் அவ்வாறாக
பரவலாக்கத்திற்குள்ளான அதிகாரங்களை அப்பிரதேசத்து சிறுபான்மை
இன மக்களால் தமது மாகாணங்களுக்குள் பயன்படுத்தமுடியும்.ஆனால்
மாகாணசபை முறையினை ஆதரிப்பவர்கள்இ அம்மாகாணங்களுக்குப்
போதிய வளங்கள் வழங்கப்படவில்லை எனவும் அதனால் மாகாணசபைகளுக்கு
தரப்பட்ட சட்டங்களின் முக்கிய பகுதிகளை அமுலாக்கம் செய்ய
முடியாதிருப்பதாகவும்இ அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

இது இவ்வாறிருக்க வேறு சிலர் மாகாண சபைமுறைக்குக் கூடிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும்இ அது தேசியத்துக்கு எதிராக பயன்படுத்தப்படலாம்
எனவும் விமர்சிப்பவராக இருக்கிறார்கள்.இவ்வாறு விமர்சிப்பவர்கள் நிலம்
மற்றும் பொலிஸ் தொடர்பான அதிகாரங்களை மாகாணசபைகள் பிரிவினை
வாதத்தினை ஊக்குவிக்கப்பயன்படுத்தலாம் என விமர்சிப்பர்.மாகாணசபைகளுக்கு
இந்த அதிகாரங்கள் இல்லாதிருந்த போதே தமிழ் தீவிரவாத இயக்கங்கள் பெரும்
பலமிக்கனவாக இருந்தன. இவ்வதிகாரங்களும் நிலம்இபொலிஸ் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்தால் தீவிரவாத குழுக்கள் எந்தளவுக்கு பலம்மிக்க சக்திகளாக
உருவாகியிருக்க முடியும் எனவும் விவாதிக்க முடியும். இத்தகைய அச்சம்
காரணமாகவே தொடர்ந்துவந்த அரசாங்கங்கள் மாகாணசபைகளுக்குப்
பொலிஸ்இநிலம் தொடர்பான அதிகாரங்களை வழங்க மறுத்து வந்துள்ளன.

அரசாங்கம் இப்போது யாப்பில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக மூன்றில்
இரண்டு பங்கு பெரும்பான்மையினைப் பெற்றுள்ளது. அடுத்து மாகாணசபைகளுக்கு
13 ஆவது திருத்தச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நிலம்இ பொலிஸ் தொடர்பான
அதிகாரங்களையும் விரைந்து செயற்பட்டு அகற்ற முயலலாம். அரசாங்கம்
இப்போது 18 ஆவது திருத்தத்தை செய்துள்ளதால் மேலும் திருத்தங்களைச் செய்ய ஊக்கப்படுத்தப்பட்டிருக்கும். அத்துடன்இ 13 ஆவது திருத்தம் மக்களிடையேயும்
முரண்பாடானதாக காணப்பட்டதால் அதில் திருத்தம் கொண்டுவருவது இன்னும்
இலகுவாக இருக்கும் என நம்பலாம். அத்தகைய மாற்றங்கள் எதுவித வெளித்
தோற்றத்தினையும் காட்டப் போவதில்லை. ஆனால்இ 17 ஆவது திருத்தத்தை
மாற்றி கொண்டுவரப்பட்ட 18 ஆவது திருத்தம் நாட்டில் ஏற்கனவே நடைமுறையில்
இருந்த முறையினை மீண்டும் கொண்டு வருவதாக மட்டுமே இருக்கும்.

அதேநேரத்தில் அரசாங்கம் இனரீதியான பிரிவினைவாதம் பொறுத்ததான
தனது அக்கறை தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதனை
எந்தளவுக்கு திறமையாக கட்டுப்படுத்தி வைக்கலாம் என்றும் மருபுறத்தில்
சிறுபான்மை இனத்தவர்களிடம் அவர்களுடைய ஆர்வங்கள் பொறுத்து தான்
எவ்வாறு அவற்றை அவர்களுக்கு வழங்கப்போவதாகச் செயற்படலாம் என்பது
பொறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிவரும். அண்மைக்கால
வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் பிரிவினைவாத யுத்தத்தின் மூலம்
தனித்தமிழ் நாடு பெறுவதற்காக போராடியமையினை கவனத்திற்கொண்டு
பார்க்கும்போது அரசாங்கம் மாகாணங்கள் மட்டத்திலான பெரிய அலகிற்கு
அதிகாரங்களை பரவலாக்கம் செய்வது நியாயப்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.
ஆனால்இ மறுபுறத்தில் சிறுபான்மை இனத்தவரை சமத்துவமான நிலையிலும்
சமமான பிரஜைகளாக நடாத்த அக்கறை கொண்டிருக்குமானால் அப்போது
அரசாங்கமானது சிறுபான்மை இன மக்களது அபிலாசைகளை கவனத்திற்
கொண்டு அவற்றை அரசியல் ரீதியாக அவர்கள் வாழும் பகுதியில்
வலிமையடையச் செய்யும் வகையில் செயற்படுவதே வேண்டப்படுவதாகும்.

இந்தவகையில் பார்க்கும் போது அரசாங்கம் உள்ளூர் ஆட்சி முறையினை
வலிமைப்படுத்துவதனை முன்னிறுத்தி பார்க்கலாம். நடைமுறையில் இப்போது
சிறந்த ஜனநாயக முறையில் செயற்படும் மேற்கு நாடுகள்இ ஐப்பான் ஆகிய
நாடுகளில் உள்ளூர் ஆட்சிக்கு கூடிய அதிகாரங்கள் உள்ளன. அவை தமது
பாடசாலைகள்இ உள்ளூர் பொலிஸ் ஆகியவற்றை நிர்வகித்துக் கொள்கின்றன.

உள்ளூராட்சி அரசாங்கங்கள் ஒப்பளவில் சிறியளவினதாகக் காணப்படுவதால்
அவற்றை பலப்படுத்துவதன் விளைவாக அவை பிரிவினைவாதத்திற்கு கொண்டு
செல்லலாம் என அஞ்சுவதற்கு இடமில்லை. ஆனால்இ இது நம்பிக்கையினையும்
இ அபிமானத்தையும் கட்டியெழுப்பும் செய்முறையின் ஒரு அங்கமாக அமைய முடியும்.
இம்முறை வெற்றியளிக்குமானால் மேலும் பரந்தளவினதான அதிகார பரவலாக்கம்
பற்றி அடுத்து வரும் காலங்களில் சிந்தித்துப் பார்க்க முடியும்.

மாகாண சபை மட்டத்தில் சுயாட்சியினையும் தமிழ் ஈழ சுதந்திரத்தையும்
அபிலாசைகளாகக் கொண்டிருந்தவர்களுக்கு வலிமையூட்டப்பட்டதும் மீள
செயல்திறனை கூட்டி வழங்கப்பட்டதுமான உள்ளூராட்சி அதிகாரசபை
திருப்தியினைத் தரப்போவதில்லை. இருந்தபோதிலும் இன்றைய யதார்த்தங்களை
ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இப்போது நாட்டில் பதவியில் இருப்பது தனது
எதிரணியாளர்கள் அனைவரையும் வென்று அடக்கி விட்டு இருக்கும் யுத்தத்தின்
பின்னரான அரசாங்கமாகும். ஜனாதிபதி பதவியானது 18 ஆவது திருத்தத்தின்
காரணமாக மேலும் கூடிய அதிகாரங்களை மையப்படுத்திக் கொண்டுள்ளது.
அதிகார பங்கீட்டை ஆளுங்கட்சியிடமோ அல்லது எதிரணி கட்சிகளிடமோ
பகிர்ந்து கொள்வது பற்றிய காரியம் அல்ல இது. இதனைவிட கூடியளவானவற்றை
சிறுபான்மை இனத்தவர்கள் எதிர்பார்ப்பதென்பது யதார்த்தமாக இருக்காது.

வெளிநாடுகளில் சென்று வாழ்பவர்களது பங்கு

குறிப்பாக வெளிநாடுகளில் சென்று வாழ்பவர்கள். (தமிழர்கள்) இத்தகைய
யதார்த்தத்தை இனங்கண்டு ஒரு ஏற்பாட்டுக்கு முன்வரல் வேண்டும். அவர்களில்
சிலர் தாம் வாழும் நாடுகளில் பல்நாட்டு தமிழீழ அரசாங்கம் ஒன்றை அமைக்க
உலகளாவிய தேர்தல்களை நடத்திவருகின்றனர். அதன் மூலம் அவர்கள் தெரியப்படும்
பதவிகளுக்கு அவர்கள் வாழும் இடங்களிலேயே ஒரு அந்தஸ்தினை வழங்குவதாக இருக்கும்.ஆனால் இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அவ்வாறான
நடவடிக்கைகளினால் எதுவித நன்மையும் உதவியும் கிடைக்கப்போவதில்லை.
மறுபுரத்தில் இலங்கையில் மீண்டும் தமிழ் பிரிவினவாதம் தோன்றப்போவதாக
இலங்கை அரசாங்கத்தினால் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி இங்கே நிலமையை
இன்னும் மோசமாக்கலாம். இதனால் அரசாங்கம் அதிகார பரவலாக்கத்திற்கு
எதிராக மேலும் கடுமையான நிலைப்பாட்டினை மேற்கொள்ள வழிகாட்டலாம்.

அண்மையில் கனடாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் வெளிநாடு சென்று வாழும்
தமிழர்கள் சிலரை சந்திக்கக் கூடியதாயிருந்தது. இவர்கள் தமது பார்வையில்
ஒரளவு மிதமான நிலையில் உள்ளவர்கள். இலங்கையிலிருந்து வெளிநாடுகளில்
வாழும் தமிழ்இசிங்கள இளைஞர்களிடையே ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.
அவர்கள் இலங்கையில் சமாதானத்திற்கான இனம் கனடியர்களிடையேயான பேச்சு
வார்த்தை அமைப்பை சாந்தவர்கள்.அவர்கள் ஒருவருடன் ஒருவர் கலந்துரையாடி
புதிய இலங்கையின் தோற்றத்திற்கு தாம் சார்பானவகையில் பங்களிக்க விரும்பும்
தூர நோக்கம் கொண்டவர்கள்.இன்னொரு சந்தர்ப்பத்தில் பழைய பரம்பரையினர் தாம் வெளிநாடுகளில் வாழ்வதனால் எதிர்நோக்கும் கஷ்டங்களையும் குடும்பத்தொடர்புகளை
இழந்தமை பற்றியும் கருத்துத் தெரிவித்தனர்.இருந்த போதிலும் அவர்கள் இலங்கையில் வாழும்மக்கள் தமது வாழ்வை புனரமைத்துக்கொள்ள உதவி செய்வது பொறுத்து ஈடுபாடு கொண்டவர்களாகவே காணப்பட்டனர்.இவ்வாறான வெளிநாடுகளில் வாழும் இடம்பெயர்ந்து சென்றவர்களையும் அரசாங்கம் நல்லெண்ணத்துடனும் நம்பிக்கையுடனும் பார்த்து செயற்படவேண்டும்.

யுத்தம் முடிந்ததன் பின்னர் ஏற்பட்ட விசாரணைகள் குறிப்பிடத்தக்க ஒன்று அரசாங்கம் இராணுவத்திற்கான செலவினங்களை அதிகரித்துள்ளதோடு படைகளுக்கு மேலும் பல புதியவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ள மையாகும்.பெரும்பாலான நாடுகள்
யுத்தம் முடிவுற்றதும் பொருளாதாரஇமனித வளங்கள் பொதுமக்கள் நலனுக்காக
ஒதுக்கீடு செய்யக் கிடைத்த ஒரு வாய்ப்பாகக் கருதி செயற்படுகின்றன.ஆனால்
இலங்கையிலோ இராணுவத்திற்கான செலவினங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இதற்கு "பலமான இராணுவம் நாட்டின் அனைத்துபகுதிகளிலும் காணப்படுதல் தேசிய
பாதுகாப்பினை உறுதி செய்வதாக இருக்கும்மூ27 என அரசாங்கம் நம்புவதே காரணமாக
இருக்கக் கூடும்.இருந்தபோதிலும் இலங்கை உட்பட்ட சனநாயக நாடுகளின்
அனுபவங்களின் படி நீண்டகாலத்தில் பலவந்தமான நிர்வாகத்தில் தங்கியிருப்பதால்
மக்களிடையே எதிர்ப்பும் வன்மம்கொள்ளவும் தோன்றுவது தவிர்க்க முடியாது போகலாம் என்பதனையே அறியமுடிகிறது.

தமிழீழ விடுதலைப்புலிகளை யுத்தத்தில் வெற்றி கொண்ட அரசாங்கம் தமிழ் மக்கள்
மீது நம்பிக்கை வைத்து அவர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலமே
நாட்டின் மீது அவர்களை விசுவாசமானவர்களாகவும் ஐக்கியமான இலங்கை மீது ஈடுபாடுள்ளவர்களாகவும் ஆக்க முடியும்.அதற்கு அவர்கள் சமத்துவமிக்க பிரஜைகள்
என்றும் அதே போன்று நாட்டிற்கு உரித்தானவர்கள் என்ற மனப்பான்மை உருவாகும்
வகையிலும் அரசாங்கம் அவர்களை நம்பவைக்கும்படி செயற்பட வேண்டும்.அரசாங்கம்
இப்போது கொண்டுள்ள பலம் காரணமாக அச்சமின்றி நம்பிக்கையுடன் செயற்படுவதற்கான
சிறந்த வாய்ப்பினைப் பெற்றுள்ளது.உண்மையாக நம்பிக்கையுடையவர்களாலேயே
மற்றவர்களை நம்பவும் முடியும்.அதுவே மனித சமுதாயத்தினையும் செயற்படவைக்கக் கூடியது.நம்பிக்கை இல்லாத பட்சத்தில் குடும்பங்களோ அல்லது நாடுகளோ கூட
ஒன்றாக இருக்க முடியாது.யுத்தகாலத்தில் நாட்டில் நம்பிக்கை முறிந்து போயிருந்தது
.நம்பிக்கை பற்றாக்குறைப் பிரச்சினை அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்குமிடையே
தான் பெருமளவில் ஏற்பட்டிருந்தது.இப்போது யுத்தம் முடிவுற்றுள்ளதால் அச்சம்
குறையுவும் நம்பிக்கையினை மீளப்பெறுவதற்குமான தனித்தன்மை கொண்ட
வாய்ப்பொன்று தோன்றியுள்ளது.இதற்காக அனைத்து நடவடிக்கைகளுக்கும்
வழிகாட்டும் ஒரு புதிய அணுகுமுறை தேவைப்படுகின்றது.

- Thinakural -

Saturday, September 18, 2010

நான்கு கோணங்களும் ஒரு கோணியும்

அண்மையில் நிகழ்வொன்று பார்க்கக்கிடைத்தது. தலைப்பு நான்கு கோணங்களும் ஒரு கோணியும். வேறுபட்ட தொழில்களையுடைய அவர்கள் ஜோக்குக்காக கலாய்த்துவிட்டு சென்றார்கள். அதில் அவர்கள் மண்டிக்கவிதை என்றும் குறில் நெடில் கவிதை என்றும் பஞ்ச் வசனம் என மூன்று விதமான வெளிப்பாடுகளை காட்டியிருந்தார்கள்.

முதலில் வந்தார் ஒரு மாணவி அவர் கூறிய மண்டிக்கவிதை

அப்பாவரு அம்மாவுக்கு அடிக்கிற மட்டை
அதால கிழியுது அம்மாவுட சட்டை
அதை தடுக்க நான் எறிவேன் சுரட்டை
அதற்கு பிறகுதான் எனக்கு நிம்மதியான குறட்டை

அடுத்து ஒரு விவசாயி

நான் சீக்கிரமே எழுந்திடுவேன் காலை
எழுந்தவுடன் குடித்திடுவேன் பாலை
மண்ணை கொத்துவதுதான் என் வேலை
ராம் ஒன்று அடித்திடுவேன் மாலை

அவர் சிறிது இடைவெளியின் பின்னர்

அடித்தபின் வீட்டிற்கு சென்று உரித்திடுவேன் மனைவியின் தோலை

அடுத்து ஒரு வைத்தியர்

ஆஸ்பத்திரியில இருக்குது ஏசி
நான் உனக்கு போடுவேன் ஊசி
நீ எனக்கு கொடுக்கணும் காசி
இப்போ எனக்கு தேவை ஒரு நேர்சி

அடுத்து ஒரு ஆசிரியர்

கற்பிப்பதிலே நான் ஒரு கில்லி
அதால எனக்கு கிடைக்குது சல்லி
கற்றபின் போற்றமே உன் பெயர் சொல்லி

அடுத்து ஒரு இளைஞன்

நான் அவளைப் பார்த்தேன் சரியான பாடா
அவ என்னைப்பார்த்தா சூடா
அவ அப்பா என்னைக்கண்டா கூப்பிடுவாரு வாடா
நான் எடுப்பேன் ஓட்டம் மாடா

குறில் நெடில் கவிதையையும், பஞ்ச் வசனத்தையும் அடுத்த பதிவில் எதிர்பாருங்கள்.....

வடக்கில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வேரூன்ற வைத்தவர்


‘கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்’ என இலங்கையின் வடபுலத்து மக்களாலும், ‘காத்தார்’ என யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர் சமூகத்தாலும் அன்புடனும், அர்த்தத்துடனும் அழைக்கப்பட்டு வந்த முருகுப்பிள்ளை கார்த்திகேசன் (மு.கா) அமரத்துவமடைந்து, இவ்வருடம் செப்ரெம்பர் மாதம் 10ம் திகதியுடன் 33 வருடங்கள் உருண்டோடிவிட்டன.
இந்த 33 வருடங்களில் அவர் பெரிதும் நேசித்து வந்த தமிழ் மக்களின் வாழ்விலும், உலக அரங்கிலும் எவ்வளவோ பிரமாண்டமான மாற்றங்கள் நிகழ்ந்தேறிவிட்டன.
இந்த மாற்றங்கள் நிகழ்ந்த போதெல்லாம், அவை பற்றி, கார்த்திகேசன் உயிருடனிருந்திருந்தால், என்ன கருத்துகளைக் கூறியிருப்பார், அவற்றுக்கு எத்தகைய தீர்வுகளை முன் வைத்திருப்பார், என்னென்ன நகைச்சுவைகளை அவிழ்த்திருப்பார் என, அவருடன் பழகிய பல்வகை மனிதர்களும் நிச்சயமாக ஊகங்களை வெளியிட்டிருப்பர்.
எமது மதிப்புக்குரிய ஆசானும், தோழருமான கார்த்திகேசன் 1919ம் ஆண்டு இப்பூமியில் அவதரித்து, 1977ல் இவ்வுலகைவிட்டு மறைந்தார். அவர் இப்பூவுலகில் வாழ்ந்தது மொத்தம் 58 ஆண்டுகள் மட்டுமே. சுமார் அரை நூற்றாண்டுகால இவ்வாழ்க்கையில், அவர் இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றிலும், தமிழ் மக்கள் வாழ்விலும் பதித்து விட்டுச் சென்ற சுவடுகள் என்றும் காலத்தால் அழியாதவை.
உலக வரலாற்றில் சொற்ப காலம் வாழ்ந்தாலும், மனித சமுதாயத்துக்காக என்றென்றைக்குமாக தமது வாழ்வை அர்ப்பணித்துவிட்டுச் சென்ற, லெனின், சேகுவேரா, ஜூலியஸ் பூசிக், பகத்சிங், சுப்பிரமணிய பாரதி போன்றோரின் வரிசையில், எமது தேசத்தின் அழியாத சொத்தாக கார்த்திகேசனும் இருக்கிறார் என்பதை நாம் எவ்வித தயக்கமும் இன்றி பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம்.
கார்த்திகேசன் தனது கல்லூரிப் படிப்பை மலேசியாவில் முடித்த பின்னர், தாயகம் திரும்பி இலங்கை பல்கலைக்கழக கல்லூரியில் ஒரு மாணவராகச் சேர்ந்து பட்டதாரியானார். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காலத்திலேயே அவர், ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளாலும், மார்க்சிய கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு, தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாக வளர்த்துக் கொண்டார்.
அந்தக் காலத்தில் அவர் பல்கலைக்கழக கல்லூரியிலிருந்து வெளிவந்த ‘மாணவர் செய்தி’ (ஷிtuனீலீnt னிலீws) என்ற ஏட்டுக்கு ஆசிரியராக இருந்து எழுதிய கட்டுரைகளும் செய்திகளும் மாணவ சமுகத்தை மட்டுமின்றி, இலங்கையின் எதிர்கால அரசியல் தலைவர்களையே ஈர்ப்பனவாக இருந்தன.
அதன் காரணமாக பிற்காலத்தில் இலங்கையின் சக்திவாய்ந்த அரசியல்வாதியாக மாறிய ஜே.ஆர். ஜெயவர்தனாவே, ஒரு சந்தர்ப்பத்தில் தனது செய்தியொன்றை அந்தப் பத்திரிகையில் பிரசுரிப்பதற்காக கார்த்திகேசனை நாடிச் சென்ற சம்பவமும் நிகழ்ந்தது.
பல்கலைக்கழகப் படிப்பை மிகவும் சிறப்பாக முடித்த கார்த்திகேசன், விரும்பியிருந்தால் இலங்கையின் மிகச் சிறந்த சிவில் நிர்வாக உத்தி யோகத்தர்களில் ஒருவராக வந்திருக்க முடியும். அல்லது முதலாளித்துவ அரசியல் கட்சியொன்றில் இணைந்திருந்தால் ஒரு அமைச்சராகக் கூட சில வேளைகளில் வந்திருக்கக் கூடும்.
ஆனால் அவர் அதற்கு மாறாக, கம் யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர் என்ற கடுமையான, ஆனால் மக்களுக்கு உவகையுடன் சேவையாற்றக் கூடிய பாதையைத் தேர்ந்தெடுத்தார். கட்சிக்கு கிடைக்கும் மிகச் சொற்ப வருமானத்தில், தனது இளம் மனை வியுடன், கொழும்பு கொட்டா வீதியிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சி காரியாலயத்தில், வேறு பல தோழர்களுடன் இணைந்து கிடைப்பதைக் கொண்டு வாழும் “கம்யூன் வாழ்க்கை”யை வாழ்ந்தார்.
அவர் கொழும்பில் கட்சியின் முழு நேர ஊழியராக வேலை செய்த காலத்தில் கட்சியின் புகழ்மிக்க ஆங்கில வார ஏடான ‘போர்வாட்’ (பிorwarனீ) பத்திரிகையின் ஆசிரியராகவும் கடமை யாற்றினார். இன்றைய பத்திரிகை ஆசிரியர்கள் போல், குளிரூட்டிய அறையிலோ அல்லது சுழலும் மின் விசிறிக்கு கீழோ அவர் அமர்ந்திருந்து பணி புரியவில்லை. பத்திரிகைக்கு அச்சுக் கோர்ப்பதிலிருந்து, அச்சிட்ட பத்திரிகைகளை மடித்து எடுத்துச் சென்று, வீதிகளில் கூவி விற்பது வரை, அவர் மிகக் கடினமாகவும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றினார்.
அந்த சூழ்நிலையில் தான், இலங்கையின் வடபுலத்தில் கட்சிக் கிளையொன்றை ஸ்தாபிக்கும் பொருட்டு, கம்யூனிஸ்ட் கட்சி அவரை யாழ்ப்பாணம் அனுப்பியது. அங்கு 1944ல் தன் மனைவி சகிதம் சென்ற அவர், கட்சிக்கு பொருளாதார ரீதியில் ஒரு சுமையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், யாழ். இந்துக்கல்லூரியில் சாதாரண ஆசிரியத் தொழில் ஒன்றைப் பெற்று, அங்கு கல்வி கற்பித்தபடியே, கட்சி அமைப்பு வேலைகளிலும் ஈடுபட்டார்.
அவரது ஆசிரியத் தொழில், அவரது கட்சிப் பணிகளுக்கு மிகவும் வாய்ப்பான ஒரு தொழிலாக அமைந்து கொண்டது. அவர் தன்னிடம் கல்வி கற்ற மாண வர்களுக்கு முற்போக்கான கருத்துகளை ஊட்டவும், அவர்களது பெற் றோர்களான யாழ். தமிழ் சமூகத்துடன் உறவு கொள்ளவும், கல்வித்துறையின் ஏனைய சகாக்களுடன் உறவு பூணவும் அத்தொழில் பெரும் வாய்ப்பைத் திறந்துவிட்டது.
அவர் யாழ். இந்துக் கல்லூரியில் சுமார் 30 வருடங்கள் ஆசிரியராகவும், பின்னர் சிறிது காலம் பதில் அதிபராகவும் கடமையாற்றினார். அதன் பின்னர் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி என்பனவற்றின் அதிபராக இருந்து ஓய்வு பெற்றார்.
தோழர் கார்த்திகேசன் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு கொழும்பிலிருந்து தனியொரு கம்யூனிஸ்ட்டாகச் சென்றாலும், ஏற்கெனவே மார்க்கியக் கருத்துக்களால் ஆகர்சிக்கப்பட்டிருந்த சிலரை இனங்கண்டு, அவர்களையும் இணைத்துக் கொண்டு கட்சி அமைப்புப் பணிகளை முன்னெடுக்க ஆரம்பித்தார். அவர்களில் ஆரம்ப காலத்தில் அவருடன் கட்சிப் பணி களில் இணைந்து கொண்டவர்களில் தோழர்கள் இராமசாமி ஐயர், எம்.சி.சுப்பிரமணியம், டாக்டர். சு.வே. சீனிவாசகம், மகாலிங்கம் மாஸ்டர், ஆர்.ஆர். பூபாலசிங்கம், எஸ்.கே. கந்தையா, வீ. ஏ. கந்தசாமி, அரசடி இராசையா ஆகியோர் முக்கியமானவர்களாவர். பிற்காலத்தில் அ.வைத்திலிங்கம், ஐ.ஆர்.அரியரத்தினம், பொன். கந்தையா, காதர் போன்ற பலர் கார்த்திகேசனுடன் இணைந்து கட்சிப் பணிகளை முன்னெடுத்தனர்.
கம்யூனிஸ்ட் கட்சி ஏழை எளிய மக்களுக்காக முன்வைத்த விமோசன வேலைத் திட்டங்கள் மட்டுமின்றி, முழுத் தமிழ் மக்களுக்காகவும் முன்வைத்த, ‘வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பிரதேச சுயாட்சி’ என்ற யதார்த்தபூர்வமான தீர்வு, 1956ல் பண்டாரநாயக்க அரசாங்கம் கொண்டு வந்த சிங்களம் மட்டும் சட்டத்தை பாராளுமன்றத்திலும், வெளியிலும் உறுதியாக எதிர்த்து நின்ற நிலைப்பாடு என்பனவும், தமிழ் மக்கள் மத்தியில் கட்சிக்கு பெரும் செல்வாக்கை பெற்றுத்தந்தன. கட்சி எடுத்த இந்த ஆக்கபூர்வமான, காலத்தால் அழியாத தீர்மானங்களில் கார்த்திகேசனின் பங்களிப்பு, மிகவும் உயர்வானதும், தீர்க்கமானதுமாகும். அதன் பிரதிபலிப்பு வட பகுதியில் நடைபெற்ற தேர்தல்களிலும் எதிரொலித்தது.
1956 பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பருத் தித்துறை தொகுதியில் போட்டியிட்ட தோழர் பொன். கந்தையா அமோக வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார். வட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட தோழர் அ.வைத்திலிங்கம், அத்தொகுதியில் வெற்றிபெற்ற தமிழரசுக் கட்சி வேட்பாளர் அ.அமிர்தலிங்கத்திடம் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வியுற்றார். அதேபோல கட்சி சார்பில் யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்ட தோழர் கார்த்திகேசன் கணிசமான வாக்குகள் பெற்று கட்டுப் பணத்தைப் பெற்றார். அங்கு சமசமாஜகட்சி தனது வேட்பாளரை போட்டிக்கு நிறுத்தாது விட்டிருந்தால், சில வேளைகளில் காத்திகேசன் யாழ்ப்பாணத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருக்கலாம் என்பதை, வேட்பாளர்களுக்கு போடப்பட்ட வாக்குகள் காட்டி நிற்கின்றன.
இருந்த போதிலும், யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் வண்ணார்பண்ணை வட்டாரத்தில் கட்சி சார்பாகப் போட்டியிட்ட கார்த்திகேசன், அங்கு போட்டியிட்ட மிகவும் செல்வாக்கு மிக்க, பிற்காலத்தில் மாநகர சபை முதல்வராக வந்த, தமிழ் காங்கிரசின் வேட்பாளரான துரைராசாவைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடியமை, அந்தக் காலத்தில் கட்சியின் செல்வாக்கை நன்கு புலப்படுத்துகிறது. அதுமாத்திரமல்ல, அவர் மாநகர சபை உறுப்பினராக இருந்த காலத்தில் தான், அவர் ஒருவர் தன்னந்தனியனாக நின்று, தமிழரசு - காங்கிரஸ் கட்சிகளுக்கிடையிலான முரண்பாட்டைப் பயன்படுத்தி, யாழ்ப்பாணத்தின் சனத்தொகையில் மிகச் சிறு தொகையினரான முஸ்லிம்களின் பிரதிநிதியாகத் தெரிவான சுல்தான் என்பவரை யாழ். மாநகர சபையின் முதல்வராக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது அந்தப் பங்களிப்பை முஸ்லிம் மக்கள் இன்றுவரை நன்றியுடன் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
இவ்வாறு கார்த்திகேசனின் வாழ்வையும் பணியையும் கூறுவதானால், அது அவரதும் தமிழ் மக்களினதும், இலங்கை இடதுசாரி இயக்கத்தினதும் பெரும் வரலாற்று நூலாகி விடும். இன்று நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கையில், இடதுசாரி இயக்கங்கள் விட்ட தவறுகளாலும், தமிழ்- சிங்கள தேசிய வெறிப் போக்குகள் விளைவித்த நாசத்தாலும், சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவுகள் பலவீனங்களாலும், பொதுவாக இலங்கையிலும், குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும், இடதுசாரி இயக்கம் மிகவும் பலவீனமான ஒரு நிலையில் இருப்பதையே காண முடிகிறது. ஆனால் இது நிரந்தரமானதல்ல.
தோழர் கார்த்திகேசன் அவர்கள் அமரத்துவமடைந்த 33வது வருடத்தை நினைவு கூருகின்ற இவ்வேளையில், வெல்லப்பட முடியாத மார்க்சிசம்- லெனினிசம் என்ற ஆயுதத்தைக் கொண்டு, மீண்டும் இலங்கையில் ஒரு சக்தி வாய்ந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டியெழுப்புவதே, அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக அமையும்

Wednesday, September 8, 2010

நான் மகான் அல்ல


கதவுக்கு பின்னால் 'ஹால்' இருந்தால் பரவாயில்லை, ஒரு மயானம் இருந்தால்? அப்படிதான் இருக்கிறது ரகளையான முன்பாதியும், ராட்சசத்தனமான பின்பாதியும்.

இரண்டையும் பூட்டி சவாரி செய்த விதத்தில் சூப்பர் ஜாக்கியாக செயல்பட்டிருக்கிறார் டைரக்டர் சுசீந்திரன்.

டீன் ஏஜ் பையன் கார்த்தி, அந்த வயசில் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறார் நிம்மதியாக! கஷ்டப்படாமலே காஜல் அகர்வாலை கவிழ்த்துப்போடும் அவரது 'சைட்'டாலஜியை ரசித்துக் கொண்டிருக்கும்போதே, கத்தியை தீட்டிக் கொண்டு வருகிறது இரண்டாம் பாதி. ஒரு நண்பனை போல பழகும் அப்பாவை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் கார்த்தி, அழுது புலம்புவதோடு நிறுத்திக் கொள்ளாமல் அப்பாவை கொன்றவர்களை பழி தீர்க்க புறப்படுகிறார். வேதனை என்னவென்றால் யார் கொலையாளிகள் என்பதையே அவர் இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு மர்ம நாவலின் அடுத்தடுத்த பக்கங்கள் போல விறுவிறுப்பாக நகர்கிறது படம். க்ளைமாக்ஸ்...? நாமெல்லாம் எதிர்பார்த்ததுதான். ஆனால் அந்த நிமிடம், நமது விரல் நகமெல்லாம் காலி!

கார்த்திக்குக்காகவே ஒரு ஃபார்முலா ஃபார்ம் ஆகியிருக்கிறது கோடம்பாக்கத்தில்! 'லவ் பெயிலியருங்க' என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்லும்போதே அடுத்த ரகளை என்னவாக இருக்கும் என்று ஆவல் கொள்ள வைத்துவிடுகிறார் மனுஷன். காஜல் அகர்வாலின் வீட்டுக்கே போய் பெண் கேட்கிற தைரியமும், தன்னை போட்டு தள்ள வரும் பிரபல ரவுடியையே "நாயகன் கமலுண்ணா நீங்க" என்று கவிழ்ப்பதுமாக கார்த்தியின் காவடியாட்டத்திற்கு கரங்கொட்டி மகிழ்கிறது தியேட்டர். வேலை கொடுத்த பாலகிருஷ்ணனை அவரது மனைவியிடம் போட்டுக் கொடுக்கிற காட்சியெல்லாம் ரகளையோ ரகளை. பழைய கார்த்திக் ரிப்பீட் ஆகிவிட்டாரோ என்று கொண்டாடுகிற அளவுக்கு பின்றீங்க பிரதர்!

கோழிமுட்டை கண்களும், குதிரை உடல் வாகுமாக காஜல் வருகிற காட்சிகள் எல்லாமே அகர்வால் ஸ்வீட்! கதையின் போக்கு ரத்தப்போக்கு ஆனபின் இந்த அழகான ஸ்வீட் கடையை மூடி கண் வறள வைத்துவிட்டார் இயக்குனர்.

வெட்டி ஆபிசர் மகனுக்கு பாக்கெட்டில் பணம் வைத்து அனுப்புகிற அன்பு அப்பாவாக ஜெயப்பிரகாஷ். (போன படத்தில் வில்லனாக பார்த்த நினைவு) கேரக்டரோடு மிக்ஸ் ஆகிக் கொள்கிற வித்தையை புரிந்து வைத்திருக்கிறார். அதனால்தானோ என்னவோ அந்த கொலைக் காட்சியில் பதறிப்போகிறோம் நாம். வருங்கால மருமகள் காஜல் அகர்வாலிடம் இவர் பேசுகிற காட்சியை ஒவ்வொரு இளைஞனும் ஒரு நிமிடம் ஒப்பிட்டு பார்க்க வைக்கிற அளவுக்கு மனசுக்கு அருகில் வருகிறார் மனுஷன்.

அப்புறம்... அந்த இளைஞர்கள்! வடசென்னை புழுதியில் போட்டு புரட்டி எடுத்த மாதிரி அப்படியரு நேர்த்தியான தேர்வு. அதிலும் விழியிலேயே ஒரு உருட்டுக்கட்டையை வைத்திருக்கிறான் அந்த முட்டைக்கண் இளைஞன். ஒரு கொலையை மறைக்கவும் மற்றொரு கொலையை நிகழ்த்தவும் உதவி கேட்டு போகிற இந்த இளைஞர் கோஷ்டி ஒரு வீட்டின் கதவை தட்ட, அங்கே நாம் பார்க்கிற நபருக்கும் அப்படியரு ரவுடிக் களை! இதுபோன்ற நடிகர்கள் தேர்வுதான் காட்சிக்கு காட்சி நிஜம் சேர்த்திருக்கிறது.

மிக கவனமாக லாஜிக்கை கையாண்டிருக்கிறார் சுசீந்திரன். ஆஸ்பிடலில் கார்த்தியின் செல்போனை வாங்கிப் பேசும் அந்த ரவுடிப் பையன், பின்பு அதே நம்பரை தொடர்பு கொண்டு கார்த்தியை திசை திருப்பும் காட்சியை ஒரு உதாரணமாக சொல்லலாம்.

முன்பாதிக்கும் பின்பாதிக்கும் தொடர்பே இல்லாமல் அறுத்து விட்டதை போல இருப்பதுதான் வித்தியாசமான திரைக்கதை யுக்தி. ஆனால் அதுவே ஒரு குறையாகவும் தோன்றுவதை சொல்லிதான் ஆகவேண்டும்.

ஒரு படத்தின் எடிட்டிங் எப்படி நமது காலில் சக்கரம் கட்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்தப்படம். ஹார்ட்ஸ் ஆஃப் காசி விஸ்வநாதன். இறகை போலே என்ற ஒரு பாடல் டாப். மற்ற பாடல்களும் இனிமை என்று யுவன் தன் பங்கை மிக சிறப்பாகவே செய்திருக்கிறார். நம்மையும் இழுத்துக் கொண்டு ஓடுகிறது மதியின் சிறப்பான ஒளிப்பதிவு.

நல்ல நீதிக்கதை. ஓடுகிற விஷயத்தில் நல்ல 'நிதி'க்கதையாகவும் இருக்கக் கடவது!

நன்றி - விடுப்பு

புலம்பெயர் தமிழர்களிடம் கோயில் கட்ட நிதி கேட்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிழக்கு தமிழ் மக்கள் சரியான பாடம் புகட்டவேண்டும். – கிழக்கு முதலமைச்சர்


img_6124

கிழக்கு மாகாண விவசாய மீன்பிடி அமைச்சினால் மட்டக்களப்பு மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு களுதாவளை மகாவித்தியாலயத்தில் இன்று ( 07.09.2010)இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்நது குறிப்பிடுகையில், தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நடாத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை நாம் இல்லாதொழிக்க வேண்டும். இவர்களால் எம் மக்களுக்கு எந்த விமோசனமும் கிடைத்ததும் இல்லை இனிமேலும் கிடைக்கப் போவதுமில்லை. எனவே மக்கள் இந்தத் தருணத்தில் சிந்தித்துச் செயற்பட வேணடும்.
மேலும் தொடர்நது பேசுகையில் எவ்வளவோ எதிர்பார்ப்போடு வாக்களித்த எமது தமிழ் மக்களுக்கு இந்தத் தமிழ் கூட்டமைப்பு செய்யும் பரிகாராம் என்ன? எதுவுமே இல்லை. காலங்காலமாக எம் மக்களை ஏமாற்றியே அரசியல் நடாத்தி இருந்திருக்கின்றார்கள். தற்போது ஏமாற்றிக் னெகாண்டே அரசியல் நடாத்துகின்றார்கள். உதாரணமாகச் சொல்லப் போனால் பத்திரிகைகளில் பேட்டி வழங்குவது. அதாவது அத்து மீறிய குடியேற்றம் செய்கிறது அரசு அதற்கு உடந்தையாக செயற்படுகிறது கிழக்கு மாகாண சபை என்று மக்களை திசை திருப்புவது. நான் இவர்களிடம் கேட்கின்றேன் கிழக்கில் எத்தனை அத்து மீறிய சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. இதற்கு கிழக்கு மாகாண சபை எங்கே எப்போது அங்கிகாரம் வழங்கி இருக்கிறது. முடியுமானால் சொல்லட்டும். முதலில் அத்து மீறிய குடியேற்றம் என்பதன் வரைவிலக்கணத்தை இவர்கள் புரிந்து கொண்டு பேச வேண்டும். எது தொடர்பிலும் பூரணமான தரவுகள் இல்லாமல் வெறுமனே பத்திரிகைகளில் பேட்டி கொடுப்பதும் அத்தோடு அநாமதய இணையத் தளங்களுக்குச் செவ்வியளிப்பதுமாக இவர்களது வாழ்நாள் கழிகின்றது.
மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் எத்தனை அபிவிருத்தித் திட்டங்களைச் செய்திருக்கின்றார்கள் என்று நான் கேடட்கின்றேன். நிச்சயமாகச் சொல்லமுடியும் எதுவும் இல்லை என்று. தமிழ் தேசிய கூட்மைப்பின் தலைவரான சம்பந்தன் அவர்கள் இன்னும் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியினைச் செலவு செய்யவில்லை. காரணம் அவர் நாட்டில் இருப்பதேயில்லை. மட்டக்ளப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இன்னொரு எம்.பி கோயில்களில் பூஜை செய்து திரிகின்றார். அத்தோடு இருக்கும் இடம் எல்லாம் கோயில் கட்ட நிதி சேர்க்கின்றார். போதாமல் புலம்பெயர் தமிழ்களிடம் நிதி சேகரித்து கோயில் கட்டப் பாடுபடுகின்றார். பாருங்கள் மக்களே நன்றாகச் சிந்தியுங்கள் கோயில் என்பது எமது மக்களின் நிதியைக் கொண்டே எம்மால் கட்ட முடியும். இவர் வெளிநாட்டிற்குச் சென்று கோயில் கட்ட நிதி சேகரிக்கின்றார். மக்களுக்கு எத்தனையோ அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றது அதனைத் தீர்பதற்கு வழிகளைத் தேடாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டு அரசியல் லாபம் தேடுகின்றார்கள். இவர்களுக்கு எதிர்வருகின்ற காலங்களில் மக்கள் சரியான பாடத்தினைப் புகட்டி இவர்களை ஓரங்கட்ட வேண்டும் அப்போதுதான் எமது தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கம் என மிகவும் காரசாரமாக முதலமைச்சரது பேச்சு அமைந்திருந்ததது

Friday, September 3, 2010

ஏழைகளின் குடிசையில் உணவருந்தும் கிழக்கு மாகாண முதலமைச்சர்

கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் வறிய பிரதேசங்களுக்கு சென்று அங்கு வாழும் மக்களின் குறைகளை கேட்டு அறிந்து. அவர்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருவது இயல்பு. அதே போன்று தனது பயணத்தின் போது களுவன்கேணி பிரதேசத்திற்கு சென்ற முதல்வருக்கு அங்கு வாழ்கின்ற மக்கள் தங்கள் குறைகளை நேரில் கண்டு தீர்க்கும் முதல்வருக்கு உணவளித்து முதல்வரின் களைப்பை தீர்த்தமை குறிப்பிடத்தக்கது.
img_4885
img_4880

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes