பத்தாண்டுகளாக பாடுபட்டு ஒரு ரோபோவை கண்டு பிடிக்கிறார் விஞ்ஞானி ரஜினி. நு£று ராணுவ வீரர்களுக்கு சமமான இந்த எந்திர ரஜினியை இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்து செயற்கரிய செயல்களை செய்ய வைக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். ஆனால் பயிற்சி காலத்தில் அந்த எந்திரன் செய்கிற ரகளையும், காதலும் படைத்தவருக்கே கோபத்தை ஏற்படுத்த, அதனுடைய கையை காலை ஒடித்து குப்பை தொட்டியில் எறிந்து விடுகிறார். அதே நேரத்தில் ஆராய்ச்சி கழகத்தின் பேராசிரியரும் இதே போல ஒரு ரோபோவை கண்டுபிடிக்கிற முயற்சியில் இருக்கிறார் என்பதும் அது பெயிலியர் ஆகிவிட ரஜினி மேல் பொறாமைப்படுகிறார் என்பதும் வில்லத்தனத்திற்கு வழி வகுக்க, குப்பையில் எறியப்படுகிற எந்திர ரஜினி போய் சேருகிறது அந்த பொறாமை புரபசரிடம்! இதுவரைக்கும் நல்லவனா இருந்த ரோபோவை நான் கெட்டவனாக்குறேன் பார் என்று சவால் விடும் அந்த புரபசர், விரல் அகல சிவப்பு சிப் ஒன்றை அதனுள் செலுத்த, அப்புறம் தமிழ்சினிமாவின் 75 ஆண்டுகால வில்லன்களையும் கலந்து பிசைந்து செய்த மாதிரி கர்ண கொடூர பஞ்ச் டயலாக் இல்லை. பம்மாத்து அறிமுகம் இல்லை. ஆனாலும் நிமிடத்துக்கு நிமிடம் மிரள வைக்கிறார் ரஜினி. விஞ்ஞானி ரஜினியை விடுங்கள். அந்த ரோபோ ரஜினிதான் அசத்தல். ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய புத்தகத்தை அப்படியே ஒரு விநாடி நேரத்திற்குள் மைண்டில் பதிவு பண்ணிக் கொள்வதும், கேட்கிற கேள்விகளுக்கு டாண் டாண் என்று பதிலடிப்பதுமாக பட்டைய கிளம்புகிறது ரோபோ. டெலிபோன் டைரக்டரியை படித்துவிட்டதாக சொல்லும் அதனிடம் என் போன் நம்பர் என்னன்னு சொல்லு என்று சதாய்க்கும் ஆசாமியிடம் அவரது முகவரியோடு போன் நம்பரையும் புட்டு புட்டு வைக்கிற காட்சி சுவாரஸ்யம். எதை பேசினாலும் அதற்கு நேரடி அர்த்தம் எடுத்துக் கொண்டு செயல்படுகிற காட்சிகளும் கலகல... கையை பின்புறம் வைத்துக் கொண்டு லஞ்சம் கேட்கும் கான்ஸ்டபிள் 'வெட்டு' என்று கேட்க, பக்கத்திலிருக்கிற கத்தியை எடுத்து ஒரே போடாக போடுகிறாரே, தியேட்டரே வெடிச்சிரிப்பில்!
உயிர் கிடையாது. வலி கிடையாது. உணர்ச்சிகள் கிடையாது என்றிருக்கும் ரோபோவை உணர்ச்சிக்குள்ளாக்கும் விஞ்ஞானி தனது காதலி ஐஸ்வர்யாராயை இழந்துவிடுமோ என்று அஞ்சுகிற போதுதான் கதையிலும் ஒரு டர்னிங்! ஐஸ்வர்யா ராய் இன்னும் அப்படியே இருக்கிறார் என்பதுதான் இன்னொரு விஞ்ஞான அதிசயம். புருவம், நெற்றி, உதடு என்று ஒவ்வொன்றையும் வர்ணிக்கிறார் ரஜினி. அது அத்தனையும் சரி என்பது போலவே இருக்கிறார் ஐஸ். நீ ஒரு மிஷின். நான் ஒரு மனுஷி. இரண்டு பேரும் காதலிக்க முடியாது என்று விளக்கி புரிய வைக்க துடிக்கும் போதெல்லாம் அவரது கண்களும் கூட கூட பேசுகிறதே, அதற்கே தனி புத்தகம் போடலாம். சொல்ல மறந்தாச்சு. இந்த படத்தில் சந்தானமும் கருணாசும் கூட நடித்திருக்கிறார்கள். காஸ்ட்லி சம்பளம் வாங்கிய 'வேஸ்ட்'லி நடிகர்கள்!
க்ளைமாக்சில் உணர்ச்சியில்லாத ஒரு எந்திரம், உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்க வைக்கிறது ரசிகர்களை! அதுதான் ஷங்கரின் வெற்றியும்! நன்றி - விடுப்பு |



2:56 AM
Jana Master
0 கருத்துரைகள்:
Post a Comment