கருணாவோ அல்லது பிள்ளையானோ புதலில் புலிகளுக்கு எதிராகசெயற்பட்டவர்கள் அல்ல. தமிழ் இயக்கங்களின் தோற்றத்திலிருந்துஇன்றுவரை பலர் அல்லது பல இயக்கங்கள் புலிகளுக்கு எதிராகசெயற்பட்டனர்.
பல தமிழ் இயக்கங்கள் தோற்றம்பெற்றபோதிலும் அவை நிலைத்து புலிகள் இயக்கத்தைப்போல் வலுப்பெற முடியாமைக்கு பல காரணங்கள்இருக்கின்ற போதிலும் தமிழ் இயக்கங்களிடையே இருந்த போட்டியும்முக்கிய காரணமாகும். மாற்றுக் கருத்துடையோரை "மண்டையில்போடும் "கலாசாரத்திலே மாற்றுக் கருத்துள்ள பல தமிழ் தலைவர்களின்உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன.
இருந்தபோதும் அன்று தொட்டு இன்றுவரை பல தமிழ் தலைமைகள்புலிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்திருக்கின்றனர். அவர்கள்அனைவரும் வடக்கைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகள் இயக்கத்தை உலகமே வியக்கும்படி உலகையே புலிகள் பக்கம்திரும்பிப் பார்க வைத்த வீரச் சமர்கள் பல புரிந்து பல வெற்றிகளைபெற்றுத்தந்த பெருமை கிழக்கு மாகாண போராளிகளையே சாரும்.வெற்றிச் சமர்களில் சரித்திரம் படைத்த கிழக்குப் போராளிகளைவழிநடாத்தியவர் கருணா அம்மான்.
வெற்றிச் சமர்கள் பல புரிந்து புலிகளை எவராலும் அசைக்க முடியாதுஎனும் நிலைக்கு கொண்டு சென்ற கிழக்கு போராளிகளும் அவர்களைவழிநடாத்திய கருணாவும் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறியதன்காரணமாகத்தான் இன்று புலிகள் அழித்தொழிக்கப்பட்டனர் என்பதுஉண்மைதான்.
புலிகள் அமைப்பிலே கிழக்குப் போராளிகள் வெற்றிச் சமர்கள் பல புரிந்துசரித்திர வெற்றிகள் பலவற்றைக் கண்டவர்கள். விடுதலைப்புலிகளின்படைப்பிரிவுகளிலே அசைக்க முடியாத படைபலத்தின் தூண்களாககளமாடியவர்கள் கிழக்கு மாகாணப் போராளிகள். புலிகள் இயக்கத்தின்படைப்பிரிவுகளின் அசைக்க முடியாத தூண்களான கிழக்குப்போராளிகளை புலிகள் இயக்கம் இழந்தமை புலிகளின் அழிவுக்குகாரணமாகிவிட்டது.
புலிகள் இயக்கம் உலகமே வியக்கும் அளவுக்கு ஒரு விடுதலைஇராணுவமாக கட்டி எழுப்பப்பட்டிருந்தாலும். புலிகளின் உயர்தலைமைப்பீடங்கள் அவ்வப்போது பல வரலாற்றுத் தவறுகளைசெய்திருப்பதுடன். சில விடயங்களுக்கு தீர்வு காண்கின்ற வேளைகளிலேதமது இயக்கத்தின் எதிர்காலம் பற்றி சிந்தித்து முடிவெடுக்கதவறிவிட்டனர்.
அதன் ஒரு அங்கம்தான் கிழக்கு போராளிகள் புலிகள் இயக்கத்தைவிட்டுபிரிந்து சென்றமை. அன்று கருணாவால் முன்வைக்கப்பட்டகுற்றச்சாட்டுக்கள் உண்மையானவை. காலங்காலமாக கிழக்கு மக்கள்தமிழ் தலைமைகளால் ஏமாற்றப்பட்டு வந்தமை மறுக்க முடியாதஉண்மை. கருணா பிரிந்து வருவதற்கு முன்னர் கிழக்கு மக்கள்ஏமாற்றப்பட்டு வருவதை பலரும் உணர்திருந்தபோதும் அவற்றைவெளிப்படுத்தத் தயங்கினர்.
மாற்றுக் கருத்துள்ள பலர் அழித்தொழிக்கப்பட்ட வரலாறுகள் அவர்களின்உணர்வுகளை சிறைப்படுத்தியிருந்தன. எது எப்படி இருப்பினும் கிழக்குமக்கள் கிழக்கின் உரிமைகள், கிழக்கு மக்கள் ஏமாற்றப்படுகின்றதுரோகங்களை சுட்டிக்காட்டிய போதெல்லாம் மட்டக்களப்பான்பிரதேசவாதம் பேசுகின்றான் என்றும் துரோகி என்றும் பட்டம் சூட்டியவரலாறுகள் பலவுண்டு.
கிழக்குப் போராளிகள் பிரிந்து வந்தபோது கிழக்குக்கான சுயநிரணயமும்,கிழக்குக்கான தலைமைத்துவத்தின் தேவையும், கிழக்கு மாகாணத்துக்குதனித்துவமான கட்சியின் அவசியமும் உணரப்பட்டது. அதன்வெளிப்பாடுதான் தமிழ் மக்கள் விடுதபை் புலிகள் கட்சியும் கிழக்குமாகாணசபை உருவாக்கமும், கிழக்கின் துரித அபிவிருத்தியும்.
அன்று கிழக்குப் போராளிகள் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்தபோதுபுலிகளின் தலைமைப்பீடம் சரியான தீர்க்க தரிசனமான முடிவுகளைஎடுக்கவில்லை. கருணாவால் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்ஆராய்ந்து தீர்வுகளை காண முற்பட்டிருக்க வேண்டும். அதை விடுத்துகருணாவை பிடிப்பதிலும் தண்டனை வழங்குவதிலுமே அதிக கவனம்செலுத்தினர். அன்று அவர்கள் கனவிலும்கூட நினைத்துப் பார்க்கவில்லைகிழக்குப் போராளிகள் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது என்பதனை.
கிழக்குப் போராளிகள் கருணாவினாலேயே வழி நடத்தப்பட்டனர். அவர்கள்கருணாவின் கட்டளைகளின் பெயரிலே செயற்பட்டு வந்தவர்கள். கருணாகிழக்குப் போராளிகள் புலிகளிலிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்றதும்கருணாவின் பின்னால் வந்துவிட்டனர். அவர்கள் அப்போது உண்மைகளை,நிஜங்களை உணர்ந்து கொண்டனர்.
கிழக்குப் போராளிகள் பிரிந்து வரும் கால கட்டத்தில்தான் வீட்டுக்கொருபோராளி எனும் திட்டத்தின் மூலம் கிழக்கு மக்கள் புலிகளுக்கு எதிராககுரல்கொடுக்க ஆரம்பித்தனர். அந்தக்கால கட்டத்தில்தான் கிழக்கு மக்கள்தாம் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றப்பட்டு வருகின்றோம் என்பதனை உணர்ந்துகொள்ள ஆரம்பித்தனர்.
கிழக்குப் போராளிகளின் பிரிவிற்கான காரணத்தையும் அதற்கான தீர்வுகள்பற்றியும் புலிகளின் தலைமைப்பீடம் ஆராய்ந்திருக்க வேண்டும். அன்றுஅவர்கள் எடுத்த திடிர் முடிவுகளின் பிரதிபலிப்பு துரித கதியில் தாங்களேஅழிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
கிழக்குப் போராளிகள் பிரிந்து வந்தபோது கிழக்குப் போராளிகளின் பிரிவைத் தடுப்பதனை விடுத்து சகோதரப் படுகொலைகளை நோக்கிபுலிகள் இயக்கம் சென்றது. அதன் ஒரு கட்டமாக வெருகலில் பலநூற்றுக்கணக்கான அப்பாவி கிழக்குப் போராளிகள் கொன்று குவிக்கப்பட்டவெருகல் படுகொலை கிழக்கு மக்களின் சரித்திரத்தில் மாறாத வடுக்கள்.இவ் வெருகல் படுகொலையில் பல பெண் போராளிகள் நிராயுதபாணியாகசொல்லமுடியாத சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டனர். பல களமாடி வெற்றிச் சமர்களை பெற்று வீரசரித்திரங்களை படைத்தமைக்காக விடுதலைப்புலிகள் கொடுக்கும்கைமாறு இதுதானா? விடுதலைப் புலிகளின் சகோதரப் படுகொலைகள்கிழக்குப் போராளிகள் என்று மட்டுமல்லாமல் கிழக்கு புத்திஜீவிகள்நோக்கியும் புலிகளின் துப்பாக்கிகள் திரும்பின. பல புத்திஜீவிகள்புலிகளின் துப்பாக்கி தோட்டாக்களுக்கு இரையாகினர்.
கிழக்குப் போராளிகளும், கிழக்குப் புத்திஜீவிகளும் படுகொலைசெய்யப்படும்போது புலிகளின் அரசியல் சக்தியாக விழங்கிய தமிழ்தேசியக் கூட்டமைப்பினரும், வெளிநாடுகளிலே இருந்து தமிழன்,தமிழீழம் என்றெல்லாம் வீர வசனம்பேசி வீராப்பு காட்டிக்கொண்டிருப்பவர்களும் மெளனம் சாதித்தமை வேதனைக்குரிய விடயமே.இவர்கள் மெளனம் சாதித்தது சாவது கிழக்கு தமிழன்தானே என்பதனாலா?
அப்போதைய கால கட்டத்தில் கிழக்கிலே அரசியல் நீரோட்டத்தின் மூலமேகிழக்கு மக்கள் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்க முடியும், கிழக்கில்ஒரு அரசியல் சக்தி உருவாக்கப்படுவதன் மூலமே கிழக்கு மக்களின்உரிமைக்காக குரல் கொடுக்கவும், கிழக்கின் சுயநிர்ணயத்துக்கான ஒருஅரசியல் சக்தியின் தேவைப்பாடு உணரப்பட்டது.
அதன் பிரதிபலிப்பாக தற்போது கிழக்கு மாகாண சபையையும்,மட்டக்களப்பின் பல உள்ளுராட்சி சபைகளையும் ஆட்சிசெய்தகொண்டிருக்கின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பலசவால்களுக்கும், பெறுமதிமிக்க உயிர்பலிகளுக்கு மத்தியிலும் தோற்றம்பெற்றது.
கிழக்கிலே ஒரு கட்சி தோற்றம் பெறுவதனையும் கிழக்கிலே ஒருதலைமைத்துவம் தோற்றம் பெறுவதனையும் சகித்துக் கொள்ள முடியாததீய சக்திகள் பல சதித் திட்டங்களை அவ்வப்போது மேற்கொண்டனர்.அவ்வாறான சதித்திட்டங்களிலே கிழக்கு மக்களால் எதிர்பார்க்கப்படாததுயரம் நிறைந்த ஒரு நிகழ்வு இடம் பெறுகின்றது.
தொடரும்.



11:28 PM
Jana Master
0 கருத்துரைகள்:
Post a Comment