ஒரு சாதரண பத்திரிகை புகைப்படக்காரர் தலையில் நாட்டை யார் ஆள வேண்டும் என்ற பொறுப்பு வந்தால் என்ன செய்வான் என்பதுதான் இந்த படத்தின் கதை. |
கே.வி.ஆனந்த்-சுபா கூட்டணியில் வெளியாகி இருக்கும் மூன்றாவது படம் தான் 'கோ'. 'கனா கண்டேனில்-கந்து வட்டியையும் 'அயனில்-கடத்தல் தொழிலையும் கருவாக எடுத்துக் கொண்ட ஆனந்த் இந்தப் படத்தில் வெகு தைரியமாக தற்கால அரசியலைப் பேசி இருக்கிறார்.
இந்நிலையில் சிறகுகள் என்கிற அமைப்பின் மூலமாக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென தேர்தல் களத்தில் குதிக்கிறார் அஜ்மல். நிறைய நல்ல காரியங்கள் மூலம் மக்கள் மனதில் சிறகுகள் இடம்பிடிக்கிறது. இளைஞர்களால் மட்டுமே மாற்றம் கொண்டு வரமுடியும் என்கிற கோஷத்தோடு அஜ்மலின் கட்சி செயல்படத் தொடங்க அவர்களின் பிரசார மேடையில் குண்டு வெடிக்கிறது. சிறகுகளைச் சேர்ந்த முப்பது பேரோடு பியாவும் அந்த குண்டுவெடிப்பில் சாகிறார். ஆனால் பியாவின் மரணம் கொலை என்பதை ஜீவா கண்டுபிடிக்கிறார். தேர்தலில் அனுதாப அலை பெருக அஜ்மல் வெற்றி பெறுகிறார். குண்டு வைத்ததும் பியாவைக் கொன்றதும் யார், அஜ்மலால் அரசியலில் மாற்றம் கொண்டு வர முடிந்ததா என்பதே மீதிக்கதை.
பியா அவுட் ஸ்போக்கன் சென்னைப் பெண். பரபரவென காதலை கொட்டிக் கவிழ்த்து, மடிந்து போகிறார். இவரிடமிருக்கும் துள்ளல் இவர் போனதும் போய்விடுவது குறையாக தெரிகிறது. சிறிது நேரங்களே வந்தாலும் பிரகாஷ் ராஜ் மற்றும் கோட்டா சீனிவாசராவ் ரெண்டு பேரும் பின்னி பெடலெடுத்து இருக்காங்க. அனுபவம் என்றால் என்ன என்பதை இவங்க ரெண்டு பேர் நடிப்பை பார்த்தால் நிச்சயம் புரியும். மற்றபடி, போஸ் வெங்கட், ஜெகன், சோனா, சிறகுகள்(அஜ்மல்லின் அரசியல் இயக்கம்) நண்பர்கள், தின அஞ்சல் பத்திரிகை அலுவலர்கள் எல்லாரையும் மிக நன்றாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். நிறைய புதுமுகங்கள் சின்ன சின்ன வேடங்கள் என்றாலும் மிக திறம்பட கையாண்டுள்ளார் இயக்குநர்.
கதை திரைக்கதையை எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்து எழுதி, இயக்கியிருக்கிறார் கே.வி.ஆனந்த். பரபரவென ஓடும் படத்திற்கு பெரிய பிரச்சினையே திரைக்கதைதான். திடீர் திடீரென வீழ்ந்து விடுகிறது. படம் பார்ப்பவர்களை திசை திருப்ப, எதிர்க்கட்சி தலைவர், முதலமைச்சர், அஜ்மல் என்று மூன்று பக்கமும் திரைக்கதை ஓடுவதால், ஆங்காங்கே பெரிய அளவில் திரைக்கதை தொய்ந்து வீழ்வதை தவிர்க்க முடியவில்லை. இன்னும் கொஞ்சம் எடிட்டிங் செய்திருந்தால் இந்த தொய்வைத் தவிர்த்திருக்கலாம். ஹாரிஸ் எங்கிருந்து இசையை சுட்டாலும் கேட்க நன்றாக இருக்கிறது, காரணம் பா.விஜய், மதன் கார்க்கியின் அருமையான பாடல் வரிகள்தான்! பாடல்கள் எடுத்த விதம் இன்னும் ஒரு படி மேல ரசிக்க வைக்கிறது. சில இடங்களில் பின்னணி இசை மிக வித்தியாசமாக இருந்தது. ஆனால் ஒரு இடத்தில் டைட்டானிக் இசையை நினைவுப்படுத்துகிறது.ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன், கே.வி.
ஒவ்வொரு காட்சியும் படத்தில் அவ்வளவு அழகு. இயக்குநர் கே.வி. ஆனந்திற்கு சிறப்பு வாழ்த்துகள். நிறைய உழைத்து இருப்பார் போல... ஒரு ஜனரஞ்சக படத்தில் இத்தனை உழைப்பு அருமை. பாடல் காட்சியில் வரும் இடங்கள் எங்கும் பார்த்திராதது. ஆனால் இயக்குநரின் முந்தைய படமான 'அயன்' கூட இதை ஒப்பிடக் கூடாது. அது வேறு களம். இது முற்றிலும் வேறு களம். படத்தில் குறைகளும் சில உண்டு... 'வெண்பனியே' பாடல் துவங்கும் இடம், இரண்டாம் பாதியில் வரும் தொய்வு, சில இடங்களில் வரும் லாஜிக் மீறல்கள், ஆனால் இவை அனைத்தும் மிக சொற்பமான குறைகளே. நடிகர்கள்: ஜீவா, கார்த்திகா, பியா, அஜ்மல், பிரகாஷ் ராஜ், கோட்டா சீனிவாசராவ், போஸ் வெங்கட், ஜெகன், சோனா. இசை: ஹாரிஸ் ஜெயராஜ்.இயக்கம்: கே.வி.ஆனந்த். தயாரிப்பு: எஸ்.குமார், ஜெயராமன் |



11:31 PM
Jana Master
0 கருத்துரைகள்:
Post a Comment