Monday, March 21, 2011

கிழக்கின் சுயநிர்ணயம் - 07

இதே போன்று 1971 ஆம் அண்டின் கல்வி தரப்படுத்தல் என்கிற சட்டத்தினூடு யாழ்ப்பாணம் எதிர்கொண்ட பாதிப்புகளை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சனைகளாக பிரச்சாரப்படுத்தி அதில் வெற்றியும்கண்டனர். ஆனால் இந்தப் பிரச்சனையின் உள்நோக்கம் யாழ்-அதிகார-வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளும் நோக்கு மட்டுமேயன்றி தமிழ் மக்களின் நலன் அல்ல.
இனிமேலாவது அம்பலத்திற்கு வரவேண்டிய ஒன்று.1975 ஆம் ஆண்டின் இலங்கையின் சனத்தொகை கணக்கெடுப்பின் படி சிங்களவர்கள் 72 வீதம்மாகவும் இலங்கைத் தமிழர்கள் 11.2 வீதம் மாகவும் இந்தியத் தமிழர்கள் 9.3 வீதம் மாகவும்முஸ்லிம்கள் 7.1 வீதம் மாகவும் ஏனையோர் 0.5 வீதமாகவும் காணப்பட்டனர். இதேவேளை 1970ஆம்ஆண்டில் பல்கலைக்கழக அனுமதியை நோக்கும் இடத்து 40.8 வீதத்தினை பொறியியல்துறையிலும்இ 35 வீதத்தினை விஞ்ஞானத்துறையிலும்இ 50 வீதத்தினை மருத்துவத் துறையிலும்இலங்கைத்தமிழர்கள் பெற்றிருந்தனர். ஒரு நாட்டின் சனத்தொகையில் 11 வீதத்தினை மடடுமேகொண்டுள்ள ஒரு இனம் அந்நாட்டின் பல்கலைக்கழக அனுமதிகளில் மேற்படி அதீத இடங்களைஅனுபவித்து வருவதை ஏனைய சமூகங்கள் அpங்கீகரிக்க வேண்டும் என்று கோருவது எவ்வகையிலும்நியாயமானதாகாது.

இந்த “மாவட்ட ரீதியான கல்வி தரப்படுத்தல்” என்பதன் உள்ளீடு என்ன? கல்வி வாய்ப்புகள் மீதான ஒதுக்கீடு என்பதற்கப்பால் ஏதுமில்லை. இந்தியாவில் தங்களுக்கான தகுதிகளை பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருந்த தலித்துகளுக்காக வழங்கப்படும்இட ஒதுக்கீடுகளுக்கு ஒப்பானது இந்த தரப்படுத்தல் எனலாம். இலங்கையில் கல்விரீதியாக வளர்ச்சியடைந்த கம்பஹாஇ கொழும்புஇ யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளின் மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழக வாய்ப்புகளை அதிகம் பெற்றுக் கொண்டிருந்தனர். அன்றைய கணிப்பின்படி இருபத்திரெண்டு மாவட்டங்களில் ஏனையவற்றில் பெரும்பாலானவை பல்கலைக்கழகத்திற்கான புகுமுக வாய்ப்புகளை பெறவாய்ப்பின்றி இருந்தனர். இன்னிலையில் இலங்கைத் தீவின் சமத்துவத்திற்கான திட்டங்களில் ஒன்றாகவே இத்திட்டம்முன்னெடுக்கப்பட்டது. பின்தங்கிய மாவட்டங்களுக்கு முடிந்தவரை அதிக இடங்களை பல்கலைக்கழகங்களில் பெற்றுக்கொடுப்பதற்காக இத்திட்டம் பயன்பட்டது. அதுவரை
பெரும்பகுதி பல்கலைக்கழக இடங்களை அபகரித்து வந்த மேட்டுக்குடிகளுக்கும், வாய்ப்புகள்கிடைக்காது அவ்விடங்களை நழுவ விட்டுவந்த அடித்தட்டு மக்களுக்கும் இருந்த ஒரேவித
அளவுகோல் நிறுத்தப்பட்டது. மேட்டுக்குடிகளை அதிகம் கொண்டிருந்த வாய்ப்புகள் கூடிய
மாவட்டங்கள் அதிக எல்லைப் புள்ளிகளை பெறவேண்டும் என்றும் பின்தங்கிய (பிற்படுத்தப்பட்ட) பிரதேசங்களடங்கிய மாவட்டங்கள் என இனங்காணப்பட்டவை குறைந்த எல்லை புள்ளிகளுடன் பல்கலைக்கழக வாய்ப்புகளை பெறலாம் என்பதாக தரப்படுத்தப்பட்டன. ஓவ்வொரு மாவட்டத்திலும் தரங்களுக்கேற்ப குறைந்த பட்ச தகுதிக்கான எல்லை புள்ளிகள் வௌ;வேறாக நிர்ணயிக்கப்பட்டன.
இதன் பின்னர் குறிப்பாக யாழ்ப்பாணம்இ கம்பஹாஇ கொழும்பு போன்ற மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் பெற்றுவந்த அதிகப்படியான இடங்களை இழந்தனர். அதேவேளை அவ்விடங்கள் பின்தங்கிய மாவட்ட மாணவர்களுக்கு கிடைப்பது ஏதுவாயிற்று. குறிப்பாக தமிழர்கள் செறிந்து வாழும் மாவட்டங்களான மன்னார்இ வவுனியாஇ முல்லைத்தீவுஇ திருகோணமலைஇ மட்டக்களப்புஇ அம்பாறை என்பன (கவனிக்க இவையனைத்தும் தமிழ்தேசியம் கட்டமைத்த புவியியல் எல்லைக்குள் வருபவை) பயனடைந்தன. அத்தோடு இந்திய வம்சாவளியினரான மலையக தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழும் பகுதிகளான பதுளை, நுவெரெலியாஇ மாத்தளை போன்ற பிரதேசங்களின் மாணவர் சமுதாயம் முதன் முதலாக பல்கலைக்கழக வாசல்களை மிதிக்கும் வாய்ப்புகளை இந்த மாவட்டரீதியான தரப்படுத்தலே வழங்கியது. இதுபோன்றுதான் விவசாயிகளையும் மீனவர்களையும் அதிகம் கொண்டிருந்த அம்பாந்தோட்டை, மாத்தறை, மொனறாகலை பீட்டர் கெனமன், என். எம். பெரேரா, கொல்வின் ஆர்.டி. சில்வா போன்ற இடதுசாரிகள் இச்சட்டத்தை ஆதரித்தனர் என்பதை கவனிக்க தவறக்கூடாது அதுமட்டுமல்ல இச்சட்டம் கொண்டுவரப்படவேண்டும் என அரசிற்கு அழுத்தம் கொடுத்ததிலும் இவ் இடதுசாரிகளின் பங்கு அதிகமாயிருந்ததை அறிய முடிகிறது.இந்த கல்வி தரப்படுத்தல் அமுலான பின்பு அதுவரை முழு இலங்கைக்குமான உயர்கல்வி வாய்ப்புகளை தமக்குள் பங்கிட்டுக்கொண்டிருந்த மேட்டுக்குடிகளின் மாவட்டங்கள் பாதிப்படைந்தது உண்மை.

மாவட்ட ரீதியான தரப்படுத்தலும்இ ஒதுக்கீடும் 1974 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பும் இது இனரீதியாகவோஇ மொழிரீதியாகவோ தமிழர்களை மட்டும் பாதித்ததாக சொல்வது பிழை இதன் பாதிப்பை எதிர்கொண்ட உயர்வர்க்கத்தினரில் தமிழ் மேட்டுக்குடியினரும் அடங்குவர். அதேவேளை இதனால் லாபமடைந்தவர்கள் சிங்களவர்கள் மட்டுமல்ல அறிக்கையின் முன்பகுதியில் குறிப்பிட்டதுபோல் தமிழ் பேசும் அதிக மாவட்டங்கள் இதனால் பயனடைந்தன.கம்யூனிச விரோதமும் உயர்சாதித் தடிப்பும் கொண்டியங்கிய தமிழரசுக் கட்சியினர் 1970 ம் ஆண்டுத் தேர்தலில் படுதோல்வியடைந்தனர். இடதுசாரிகளது சாதி எதிர்ப்புப் போராட்டங்களின்போது தமிழரசுக்கட்சியினரது காட்டிக் கொடுப்புகள் அத் தேர்தலில்வடபகுதியில் அவர்களை படுதோல்விக்கு தள்ளியது. தமிழ் தளபதி என்றும்இநல்லூர் சிங்கம்என்றும் அழைக்கப்பட்ட பெரும் தலைவர்கள் மக்களிடையே அம்பலமாகினர். இன உணர்வுகளை கிளறிதமிழ் தேசிய வெறிய+ட்டுவது மட்டுமே வாக்கு வேட்டைகளுக்கு உகந்த ஒரே வழியாக எஞ்சிநின்றது. யாழ் மத்தியதர வர்க்கத்தினரது அபிலாசைகள் ஒரு தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளாக முன்னிறுத்தப்பட்டது மட்டுமன்றி யாருக்கு இச்சட்டம் ஒதுக்கீடுகளையும்இ வாய்ப்புகளை வழங்கியதோ அவர்களைக் கொண்டே அதனை எதிர்க்கும் வண்ணம் கிழக்கிலங்கை தமிழர்கள் திசைதிருப்பப்பட்டனர். தாம் ஆதரிக்க வேண்டிய சட்டத்தை எதிர்க்கும்படி யாழ் தவிர்ந்த ஏனைய ஏழு மாவட்டத் தமிழர்களும் ஏமாற்றப்பட்டது மிகவும் பரிதாபமான அதிசயம்.


0 கருத்துரைகள்:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes